எனது படம்
மனித அறிவு வளர்ச்சியுறத் தொடங்கிய ஒரு காலக்கட்டத்தில், அண்டமும் அதிலுள்ள அனைத்துப் பொருள்களும் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டன என்று நம்பினார்கள் மனிதர்கள்; கணக்கற்ற மதங்களும் உருவாயின. அவற்றை உருவாக்கிய மதவாதிகள் மக்கள் மீது பல மூடநம்பிக்கைகளைத் திணித்தார்கள். கடவுள் குறித்துப் பகுத்தறிவாளர்களால் கேள்வி மேல் கேள்வி கேட்கப்பட்டு, அவற்றில் எந்த ஒன்றுக்கும் நம்பத்தக்க விடை கிடைக்காத நிலையிலும், மதவாதிகள் அவரவர் மதத்தைப் பரப்ப முயன்று, மத மோதல்களுக்கு வழிவகுத்தார்கள். அதனால், கோடிக்கணக்கில் மனித உயிர்கள் பலியாயின; பேரழிவுகள் நிகழ்ந்தன. இருந்தும், மதவாதிகளின் மத வெறி தணிந்தபாடில்லை. அவர்கள் திருத்தப்படுவதும் திருந்தவில்லையெனின் கருணை காட்டாமல் அழிக்கப்படுவதும் காலத்தின் தேவை.

ஞாயிறு, 8 மார்ச், 2026

இறப்புக்குப் பிறகும் ஒலிக்கிறதா ‘அலி கமேனி’யின் குரல்!?!?!?

//மரணத்திற்குப் பின்னரும் ஒலிக்கும் கமேனியின் எச்சரிக்கை! 'X' தளத்தில் வெளியான மர்மப் பதிவு - அதிர்ச்சியில் இஸ்ரேல்!//*

மேற்கண்ட தலைப்பில் கீழ்க்காணும் அதிரடி அதிர்ச்சிச் செய்தி ‘இன்ஸ்டாகிராம்[instagram.com]’இல் வெளியாகியுள்ளது*

கடந்த பிப்ரவரி 28அன்று அமெரிக்க & இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உத்தியோகப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) பதிவிடப்பட்ட ஓர் அதிரடி எச்சரிக்கை சர்வதேச ரீதியாகப் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சீயோனிச ஆட்சி[இஸ்ரேலியர் ஆட்சி] நிலைகுலையும்"- என்பதுதான் அந்த டிஜிட்டல் எச்சரிக்கை.

கமேனியின் மறைவிற்குப் பின்னர் அவரது கணக்கை நிர்வகிப்பவர்களால் இப்பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.

உண்மை இதுவாக இருக்கையில், இறந்துபோன கமேனி எச்சரிக்கை விடுத்தது எப்படி?

இது மர்மப் பதிவு வேறாம். என்ன வெங்காய மர்மம்? மரணித்த கமேனியின் ஆவி இந்த எச்சரிக்கையை 'X'இல் பதிவு செய்தததா?

கையாலாகத்தனத்தின் வெளிப்பாடு இது.

ஈரான் படையினருக்கு உண்மையான நாட்டுப்பற்றும் மதப்பற்றும் இருந்தால், கடைசி ஒரு வீரன் உள்ளவரை எதிரிகளுடன்[டிரம்ப் & நெதன்யாகு] போரிட்டு வீரமரணம் எய்தலாம்.

ஒட்டுமொத்த உலகமும் அவர்களைப் பாராட்டும்; போற்றும்.

கமேனி எச்சரிக்கிறாராம்! கோழைகள்!!

*https://www.instagram.com/p/DVmD8XtFhA3/