எனது படம்
ஆயுளின் இறுதி நாள்வரை நோய்களின் தாக்குதல் இல்லாமல் உடல்நலத்துடனும் மனநலத்துடனும் வாழ்ந்துமுடிக்க, நமக்கு வாய்த்துள்ள அறிவை முழுமையாகப் பயன்படுத்துதல் முக்கியம். சாமி பக்தி, சாமியார்களின் ஆசீர்வாதம், ஜாதகக் கணிப்பு போன்றவை ஆறறிவைச் சீரழிக்கும் என்பது உறுதி!

சனி, 27 ஜூன், 2026

'கே.பாக்கியராஜ் மரணம்'... நிறைய வருத்தம்! கொஞ்சம் மகிழ்ச்சி!

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ்(வயது 73) மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று காலமானார்[ஊடகச் செய்தி].

இன்னும் பல ஆண்டுகள் இவர் வாழ்ந்திருந்தால், திரைப்படங்கள் வாயிலாக வாழ்க்கைக்குப் பயன்படும் பல அரிய சிறந்த கருத்துக்களை நமக்கெல்லாம் நல்கியிருப்பார் என்பது உறுதி.

இவரின் மறைவு பெரிதும் வருந்துதற்குரியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

மரணித்தல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது; வாழும்  ஆயுட்காலம் முன்பின்னாக அமையலாம். 

விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

கொடிய நோய்களுக்கு ஆளாகி, கட்டிலில் முடங்கிக் கிடந்து, சிறுநீர் பெய்து மலம் கழித்து, மனம் வெந்து நொந்து மரணத்தைத் தழுவுவது போன்றதொரு வேதனை வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

உடல்நலம் சீராக இருந்து அன்றாடக் கடமைகளில் ஈடுபடும்போதோ, ஆழ்ந்த உறக்கத்திலோ எதிர்பாராமல் செத்துப்போனால், அதை ‘நல்ல சாவு’ என்பார்கள்.

‘திடீர் மாரடைப்பு[cardiac arrest] பாக்கியராஜ் அவர்களின் ‘நல்ல சாவுக்கு’[நடைப் பயிற்சி முடிந்து ‘கை பேசியில்’ உரையாடும்போது மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார் என்பது செய்தி] உதவியிருக்கிறது.

இது, மிகுந்த வருத்தத்திற்கிடையே, விரும்பத்தக்கதும் சிறிதேனும் மகிழத்தக்கதுமான ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.