ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே, ’ஆளுநர் உத்தரவின்படி நெல்லைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம்தான்’ என்று அறிவித்தார் பல்கலைத் துணைவேந்தர்.
அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி.....
பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம், பட்டமளிப்பு விழாவை ஒத்திப்போடச் செய்திருக்கலாம் ’தவெக’ அரசு.
விசிலடிச்சான்களைத் தூண்டிவிட்டு மறியல் செய்ய வைத்தும் நிகழ்வைத் தடுத்திருக்கலாம்.
தைரியமாக, ”தமிழ்த்தாய் அவமானப்படுத்தப்பட்டால், ’தவெக’ அரசு அதைக் கடுமையாக எதிர்க்கும்; தேவைப்பட்டால் பதவி விலகி, மக்களோடு இணைந்து, கிளர்ந்தெழுந்து ’பாஜக’வின் அராஜகத்தைக் கண்டித்துப் போராடும்.”
தேவைப்பட்டால் திமுக, அதிமுக போன்ற எங்களின் எதிரிகளுடன் சேர்ந்தும்கூடப் போராடத் தயங்கமாட்டோம்.”
என்றிப்படியாக முன்னெச்சரிக்கைகள் செய்தும்[நிகழ்வை அமைச்சர் புறக்கணித்ததெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல] தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுக்குள்ளாவதைத் தடுத்திருக்கலாம் ’தவெக’ அரசு.
கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு, எல்லாம் நடந்து முடிந்த பிறகு[தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது] வாய் கிழியக் கண்டனங்கள் தெரிவிப்பது யாரை முட்டாளாக்க?
நடுவண் ஆட்சியாளர்களையோ ஆளுநரையோ அல்ல[அவர்கள் ரகசியக் கூட்டாளிகள்]; தேர்தலில் ’தவெக’வை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்த தமிழ் மக்களைத்தான்!
ஜோசப் ரொம்பவே புத்திசாலி!