நான்.....

எனது படம்
வெகு சாமானிய வலைப்பதிவனான எனக்கு, புகழின் உச்சம் தொட்டவர்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆகும் ஆசை அறவே இல்லை. பெரும் புகழ் ஈட்டியவர் எவராயினும் அவரால் நம் மக்கள் மூடர்கள் ஆக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாததால்தான், என் விமர்சனத்தால் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது என்பது தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்து செய்கிறேன்; வேறு உள்நோக்கம் ஏதுமில்லை.

செவ்வாய், 28 ஜூலை, 2026

”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!”... போதாது!!!

ளூர் ஷாநவாஸின் கேள்விகள் ஆணித்தரமானவை; தமிழினத்தவருக்கான அவசர முன்னெச்சரிக்கை.

நம் மீதான ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறை தொடராமலிருக்க, தமிழ் இளைஞர்களும், இனப்பற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடிப் போராட்டங்களில் ஈடுபடுவது அவசியம்.

போராட்டங்களில் எதிர்பார்க்கும்/எதிர்பாராத இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

நாம் ஆண்ட பரம்பரை என்று இனியும் பெருமை பேசுவது அவசியமற்றது; மற்றவர்களால் நாம் ஆளப்படாமல் தடுப்பதே அறிவுடைமையாகும்.

அதற்கான போராட்டத்திற்குத்தான் ஆளூர் ஷாநவாஸ் அழைப்புவிடுத்திருக்கிறார்.

இது தனிப்பட்ட ஒரு மனிதரின் அழைப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அழைப்பும் ஆகும்.

நாமக்கல் கவிஞரின் கூற்றுக்கு இணங்க, தமிழன் என்று சொல்வதும் தலை நிமிர்ந்து நிற்பதும் போதாது; களத்தில் இறங்கிப் போராட அனைவரும் ஒருங்கிணைவதும் திட்டமிடுதலும் அவசரத் தேவை ஆகும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!!