கதை அனுப்பி 100 நாட்கள் ஆகியும் பிரசுரம் ஆகவில்லை[இப்போதெல்லாம் பத்திரிகைக்காரங்க கதையைத் திருப்பி அனுப்புவதில்லை]. பலமுறை முயன்று தொ.பே.யில் ஆசிரியருடன் தொடர்பு பெற்று, கதையின் பெயரைச் சொல்லி, “கதையை நிராகரிச்சிட்டீங்களா? ரொம்ப வித்தியாசமான படைப்பா தோணலையா?” என்றேன். “இப்படியெல்லாமா நடக்கும்? வாசகனை முட்டாள் ஆக்குற கதை” என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரியர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பதிவுக்கு ‘Moderation' இல்லை. விரும்பினால், மனம் திறந்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வருத்தப்பட மாட்டேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பதிவுக்கு ‘Moderation' இல்லை. விரும்பினால், மனம் திறந்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வருத்தப்பட மாட்டேன்.
கதைத் தலைப்பு: புதிய பாதை
“வாங்க......வாங்க.” கை கூப்பி வரவேற்றார் அருணகிரி.
புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர் மாசிலாமணி; அருணகிரிக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தம்..
“உட்காருங்க.”
மஞ்சள் பையிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அருணகிரியிடம் நீட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் மாசிலாமணி.
அதில் பார்வையை ஓடவிட்ட அருணகிரி, “என்னங்க இது, ‘மகளின் மூன்றாம் ஆண்டு திருமண நிறைவு விழா’ன்னு போட்டிருக்கீங்க! உங்க மகளுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் முடிஞ்சிருக்கு, சரி. இதுக்குப் போயி யாராவது பத்திரிகை அடிச்சி விழா கொண்டாடுவாங்களா? இதெல்லாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தார் மட்டும் வீட்டோடு கொண்டாடுறதில்லையா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
“சம்பந்தி வீட்டார் சம்மதத்தோட, ரொம்ப நெருக்கமான, கொஞ்சமே கொஞ்சம் சொந்த பந்தங்களை மட்டும் அழைச்சி, இந்தக் கல்யாணத்தைக் கோயிலில் சிக்கனமா நடத்தி முடிச்சேன்......”
குறுக்கிட்டார் அருணகிரி. “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சொல்றேன். இப்பெல்லாம், கல்யாணம் முடிஞ்ச சூட்டோடு ரொம்பப்பேர் விவாகரத்துப் பண்ணிடுறாங்களாம். கணக்குப் பார்க்காம செலவு பண்ணினவங்கெல்லாம் தலையில் முக்காடு போட்டுட்டு முடங்கிக் கிடக்குறாங்க. அதனாலதான், நானும் சம்பந்தியும் செலவை ரொம்ப மட்டுப்படுத்தினோம்.”
“சொல்லுங்க.”
“என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆயிடிச்சி. சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் இருந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க. ஒரு வாரிசும் இருக்கு. இனி, குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏதும் தலையெடுக்காதுன்னு நம்பிக்கை வந்திடிச்சி.”
சிறிது இடைவெளி கொடுத்துச் சொன்னார் மாசிலாமணி. “ ஆயிரக் கணக்கில் பத்திரிகை அடிச்சி, சொந்தபந்தம், அக்கம்பக்கம், அறிமுகம் ஆனவங்க ஆகாதவங்கன்னு பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கோலாகலமா கல்யாணத்தை நடத்தாம, கமுக்கமா நடத்திட்டமேன்னு சம்பந்தி வீட்டாருக்கும் என் வீட்டார்க்கும் மனக்குறை இருந்திச்சி. அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் மூன்றாண்டு நிறைவு விழா."
சொல்லி முடித்து, “விழாவுக்கு எல்லாரும் அவசியம் வந்துடுங்க” என்றார்விழாவை விமரிசையா நடத்துறோம்” என்றார் மாசிலாமணி.
“புத்திசாலிதனமா நீங்க நடத்துற இந்தப் புதுமையான விழாவுக்கு வராமல் இருப்போமா?” சிரித்துக்கொண்டே சொன்னார் அருணகிரி.
##########################################################################################################
ஆசிரியர் சரியாத்தான் கேட்டிருக்காரு போலத் தெரியுது.
பதிலளிநீக்குயோசித்ததில் எனக்கும் சரியென்றே தோன்றியது.
நீக்குமிக்க நன்றிங்க.
கருத்துப் பெட்டியை மூடியே வைத்திருந்தவன் நான். இப்போதும் moderation வைத்திருந்ததால் இன்றுதான் உங்கள் கருத்துரையைக் கவனித்தேன். தாமதம் ஏற்பட்டுவிட்டது.
நீக்குReally a good story. The magazines are yet to come up to really high level to
பதிலளிநீக்குthink differently and accept this type of stories.
Namakkal Venkatachalam
உங்கள் கருத்து எனக்கிருந்த அவநம்பிக்கையைப் போக்கியிருக்கிறது.
நீக்குமிக்க நன்றி வெங்கடாச்சலம்.
புதுமை தான்... ஆனால் நடக்காது...
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇந்தப் பதிவு நண்பகல் ஒரு மணிக்கு வெளியானது.
பதிலளிநீக்கு“சொல்ல என்ன இருக்கு?” என்று நினைத்தோ, “சொன்னால் பரமசிவம் வருத்தப்படுவார்” என எண்ணியோ எவரும் தம் கருத்தைப் பதிவு செய்யவில்லை. எனவே.......
நாளை காலை போட்டு உடைப்பதாக இருந்த ஓர் உண்மையைப் பொறுமை இன்மை காரணமாக, இப்போதே சொல்லிவிடுகிறேன்.
“வாசகனை முட்டாள் ஆக்கும் கதை இது” என்று பத்திரிகை ஆசிரியர் சொன்னாரல்லவா, அந்தக் கருத்து எனக்கும் ஏற்புடையதுதான்.
மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பிய ஒருவர், அது வீண் செலவு ஆகிவிடக் கூடாதே என்ற அச்சத்தினால் மூன்றாண்டுகள் கழித்து ஒரு சுமுகமான சூழ்நிலையில் [கொஞ்சம்] தடபுடலாக நடத்துகிறார். மற்றபடி, அவரிடத்தில் பெரிதாக ஒன்றும் மனமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.
“இதைச் சொல்ல ஒரு கதையா?” என்று நினைத்துத்தான் ஆசிரியர் அப்படிச் சொல்லியிருக்கிறார். இது எனக்கு உடன்பாடுதான்.
“அப்புறம் எதற்கு இந்தக் கதையைப் பதிவிட்டாய்?” என்று நீங்கள் கேட்க நினைத்தால் அதில் தவறேதுமில்லை. வெளியிடக் காரணம்?
ஆசிரியருடனான என் உரையாடல் உண்மையானது. அந்த அனுபவத்தையும், அதற்குக் காரணமான இந்தக் கதையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான்.
ஆக, இந்தக் கதை வாசகனை முட்டாள் ஆக்குகிறது என்பது உண்மை; இதை எழுதிய நான் முட்டாள் என்பதும் உண்மையே!!!
இந்த என் கருத்தையும் வாசித்த உங்களுக்கு என் நன்றி.
பதிவிட்ட பின் ஒருநாள் நீங்கள் காத்திருந்து உண்மையை வெளியிட்டு இருக்கலாம் !
பதிலளிநீக்குஇதைவிட முட்டாள்தனமான கதைகள் கூட வெளிவருகின்றன .அந்த பத்திரிகை ஆசிரியர் பதிலாவது சொல்லி இருக்கிறாரே :)
பெரும்பாலும் அனுப்பப்படும் படைப்புகளின் நிலை ,கிணற்றில் போட்ட கல்தான் ,அதனால்தான் எனக்கும் எழுதி அனுப்பும் ஆசை போயே விட்டது :)
த ம 4
பெரும்பாலான ஆசிரியர்களுடன் தொடர்பே கொள்ள முடியாது. இவர் ஒருவகையில் நல்லவர் போல.
நீக்குமிக்க நன்றி பகவான்ஜி
பல கதைகள் இயல்புக்கு மாறாகவே இருக்கும். உள்ளதை உள்ளபடி சொன்னால் அதில் சுவாரசியம் ஏதுமில்லை, கற்பனையில் கொஞ்சம் யதார்த்தத்தையும் கலக்கலாம் . உங்கள் சிந்தனை வித்தியாசமாக உள்ளது என்பதில் ஐயமில்லை. இதனால் எந்தா வாசகனும் முட்டாளாகி விடப் போவதில்லை, வேறுமாதிரி எழுதுவதால் அறிவாளி ஆகப் போவதுமில்லை.
பதிலளிநீக்குவிவாகரத்துகள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு காலத்தில் இது உண்மையாகக் கூடிய வாய்ப்பும் உள்ளது
அபத்தமான கதைகள் பல வெளியாகின்றன. அவற்றைவிட இது ஒன்றும் குறைவாகத் தெரிர்யவில்லை.நீங்கள் புத்திசாலிதான்
இதையே சற்று வேறு மாதிரி எழுதலாம் என நினைக்கிறன். அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றி முரளி.
நீக்குஅனுமதியென்ன, தாராளமாக எழுதுங்கள்.
பரமசிவம் சார், கருத்துக் கூறவில்லையே தவிர இப்போது வரை இந்தக் கதையை படித்தவர்களின் எண்ணிக்கை 240ஐ தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானா
பதிலளிநீக்கு254 பேர் படித்திருக்கிறார்கள்.
நீக்குகருத்துப் பெட்டியை மூடியே வைத்திருந்து பழக்கப்பட்டவன் நான். இப்போதுதான் moderation வைத்தேன். முன்னதாக வந்த இரு கருத்துரைகளை இன்றுதான் கவனித்தேன் முரளி. அதனால், மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.
நீக்குபிரச்சினைக்குரிய பதிவுகள் போடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் இப்படியெல்லாம் நடக்குமா என்பது சந்தேகம்தான்! கூட்டம் கூட்டி மொய் வசூலிக்க நினைத்தாலும் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவெல்லாம் யாரும் கொண்டாட வாய்ப்பில்லை! பிறந்தநாள்விழா அது இதென்றுதான் கொண்டாடி ஆசையை தீர்த்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குஇப்படி நடந்தால்...என்று யோசித்ததன் விளைவுதான் இந்தக் கதை சுரேஷ்.
நீக்குகருத்துக்கு மிக்க நன்றி
This comment has been removed by the author.
பதிலளிநீக்குThis comment has been removed by the author.
பதிலளிநீக்குநான் எழுதிய இரு கருத்தையும் நான் தான் அலைத்தேன் பரமசிவம் ஐயா.
பதிலளிநீக்குமன்னிக்கவும்.
சற்று முன்னர்தான் நீங்கள் அழித்தவற்றில் ஒரு கருத்தை என் மின்னஞ்சலில் வாசித்தேன்.
பதிலளிநீக்குஒளிவு மறைவு இல்லாமல் உரிமையுடன் நீங்கள் குறைபட்டுக்கொண்டது உண்மையிலேயே என்னை மகிழ்வித்தது அருணா.
இந்தக் கதை தவறான நோக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்ததால்தான் அப்படியொரு கேள்வியை முன் வைத்தேன். நீங்களும் மனதில் பட்டதைச் சொன்னீர்கள்.
கருத்துகளை அழித்திருக்க வேண்டாம். சற்று முன்னர்தான் அழித்திருக்கிறீர்கள். இதுதான் எனக்கு வருத்தத்தைத் தருகிறது.
இனியும் மனதில் பட்டதை எழுதுங்கள். வருந்த மாட்டேன். உங்கள் நல்ல உள்ளத்தை நான் அறியாதவனா என்ன?
நன்றி அருணா.