எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஒரே நாடு! ஒரே ஜாதி!!

ப.ஜ.க.வின் இந்திய ஒருமைப்பாட்டுத் தத்துவம் பின்வருமாறு.....

ஒரே நாடு: இந்தியா                                                                             


ஒரே இனம்: ‘இந்தி’யர்


ஒரே மொழி: இந்தி


ஒரே மதம்: இந்து[த்துவா]


ஒரே கலாச்சாரம்: வடவர் நாகரிகம்

                                                      
ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க


ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்     

ஒரே தேர்வு: இந்தி அல்லது சமஸ்கிருதத்தில்

மேற்கண்ட ப.ஜ.க.வினரின் கனவு நனவாக்கப்படும்போது, கீழ்க்காணும் ‘ஒரே ஜாதி’ என்னும் எம் ஆசையும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

எங்கள் ஜாதிதான் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஜாதியாகும். இதை ‘ஒரே இந்தியாவின் ஒரே ஜாதி’யாக நடுவணரசு அங்கீகரிக்க வேண்டும். பிற ஜாதியார் அனைவரும் எங்கள் ஜாதியில் இணைதல் வேண்டும்.

எச்சரிக்கை!.....மதங்கள் அழியாதவரை ஜாதிகளும் அழியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.   
=================================================================================