இப்பதிவு பெரும் பரபரப்பை உண்டுபண்ணிய ‘கோவை’ச் சம்பவம் குறித்ததல்ல; அதனுடன் தொடர்புடைய, பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கருத்தை ஆய்வு செய்வதற்காக மட்டுமே.
//"பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சுமத்துவது என்பது, குற்றம் செய்தவர்கள் அதற்குப் பொறுப்பேற்கவிடாமல் செய்யும்" என்றும் "இது குற்றங்களை அதிகரிக்கவே வழிவகுக்கும்" என்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்// -இது ‘பிபிசி’ செய்தி.
குற்றம் செய்தவர்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர், தாங்கள் செய்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்பது நடைமுறையில் இல்லை. முறையான புலனாய்வின் மூலம் அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது காவல்துறைதான்[தண்டனை வழங்குவது நீதித்துறை] என்பதைப் பெண்ணியச் செயல்பாட்டாளர்கள் மறந்துவிட்டார்கள்.
பெண்ணியப் பாதுகாவலர்களே,
பெண் என்பவள் தவறே செய்வதில்லையா?
கீழ்க்காண்பதொரு கேள்வியையும் முன்வைப்பதற்கு என்னை மன்னியுங்கள்.
நகர்ப்புறமோ ஒதுக்குப்புறமோ, இரவெல்லாம் வாடிக்கையாளரைத் தேடி அலைகிறாள் விலைமாது. பாதுகாப்பற்ற நேரங்களில் திரியும் அம்மாதிரிப் பெண்ணும் நல்ல குடும்பப் பெண்ணும் வேறு வேறானவர்கள் என்பதை அறிவது அத்தனை எளிதல்ல. அப்புறம் எப்படி ஒரு குடும்பப் பெண் எங்கேயும் எவருடனும் எப்படியும் இருக்கலாம் என்கிறீர்கள்?
தவறான நோக்கம் இல்லாதிருப்பினும், ஒரு பெண், தேவையே இல்லாமல், ஏறத்தாழ நடுநிசி நேரத்தில், உரிய பாதுகாப்பும் இல்லாமல் ஆணுடன் தனித்திருப்பது[அவர்கள் தனித்திருப்பது கெட்ட எண்ணத்தில் இல்லை என்பதை அவர்களைப் பார்க்கிறவன், அல்லது பார்க்கிறவர்கள் நம்புவது எப்படி? பார்க்கிறவர்கள் ஏற்கனவே கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களா இருந்தால் அவர்கள் நல்லதை நினைக்க வாய்ப்பே இல்லை. தப்பான காரியத்தில் ஈடுபட முனைவார்கள்]. தவறுதான்; பெரும் தவறு; மிகப் பெரும் தவறு.
தேவை ஏற்பட்டு, ஆணும் பெண்ணும் மட்டும் பாதுகாப்பற்ற சூழலில் தனித்திருக்க நேரிட்டால், காவல்துறைக்குத் தகவல் தந்தோ, வேறு வகையிலோ உரிய பாதுகாப்பைத் தேடிக்கொள்வது அறிவுடைமை. தவறினால், வேண்டத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
உடலைப்பைப் பொருத்தவரை, இயற்கையாகவே பெண் பலவீனமானவள். என்னதான் ஆண் - பெண் சமத்துவம் பேசினாலும், அதற்குரிய வகையில் சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க சூழல்களில் ஆண் துணை இல்லாமல் பெண்ணால் தனித்தியங்குவது சாத்தியமே இல்லை.
பழைய திரைப்படம் ஒன்றில், “ஆணும் பெண்ணும் சமம் என்கிறீர்களே, நம்மைச் சுற்றி நாலு பேர் இருக்கிறார்கள். நான் செய்வதை உன்னால் செய்ய முடியுமா?” என்று கேட்டுத் தன் மேலாடையை நீக்குவான் கதாநாயகன்[கமல்காசன்?}. நாயகி திகைத்து நிற்பாள்.
இன்றையச் சூழல் இது. ஒரு பெண் தன் மேலாடையை நீக்கி நின்றால், அதை ஆண்கள் தவறான எண்ணத்துடன் பார்க்காமலிருப்பதான ஒரு காலம் வந்தால் அது வரவேற்கத்தக்கதுதான்.
ஆக, பெண்ணுரிமை என்னும் பெயரில் பெண்ணொருத்தி எந்தவொரு தவற்றைச் செய்தாலும், அதைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று பெண்ணியச் செயல்பாட்டாளர்களான நீங்கள் சொல்வது, பெண் தொடர்பான மேலும் பல குற்றங்கள் நிகழ்வதற்கான தூண்டுதலாகவே அமையும் என்பது என் எண்ணம்.


