எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 29 செப்டம்பர், 2025

'தற்கொலை நோய்'[suicide disease] ... இப்படியும் ஒரு நோயா?!

"தற்கொலை நோய்"(Trigeminal Neuralgia > TN) என்பது திடீரெனத் தோன்றும் கடுமையான & தீவிரமான முக வலியாகும்.  வலியின் வேதனையான தன்மை காரணமாக இதற்குத் "தற்கொலை நோய்" என்று பெயரிடப்பட்டது, இது ஒரு நபரின் மனநிலையைக் கடுமையாகப் பாதித்துத் தற்கொலைக்குத் தூணடும் அளவுக்கு விரக்தியடையச் செய்யும். 

உணர்ச்சிகளை முகத்திலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்லும் ‘ட்ரைஜீமினல் நரம்பின்’  சுருக்கத்தால் இது[TN]ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

கன்னம், தாடை, பற்கள், கண்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் அழுத்தமாகக் குத்தும் வலி தோன்றுதல்.

வலி பொதுவாக முகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்படுதல்.

பல் துலக்கும்போதும், முகத்தைக் கழுவும்போதும், முகத்தில் அழுத்தமாகக் காற்று படும்போதும், தொடும்போதும்[லேசாக] வலியை உணரமுடியும். வலி சில நிமிடங்கள் நீடிக்கலாம். இது ஒரு நாளில் பல முறை நிகழலாம்; உணவுண்ணுதல், உறங்குதல் போன்ற தினசரிச் செயல்பாடுகளைப் பாதிக்கும்; மனநிலை வெகுவாகச் சீர்குலையும்.

காரணங்கள்:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலும்,  ‘ட்ரைஜீமினல் நரம்பில்’ சுருக்கம் ஏற்படுதலும். 

சிகிச்சை:

வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளுதம்[மருத்துவரின் பரிந்துரைப்படி]

கதிர்வீச்சு[சிகிச்சை].

மூளை அறுவைச் சிகிச்சை[அழுத்தத்தைக் குறைக்க நரம்புக்கும் இரத்த நாளத்திற்கும் இடையில் ஒரு மெத்தை வைப்பது இதில் அடங்கும்].

மேலும் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகள்.

                                      *   *   *   *   *

விரிவானதும் மிகச் சரியானதுமான தகவல்களுக்கு:

https://www.google.com/search?q=sucide+desiease%3F&oq=sucide+desiease%3F&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE3NTc4ajBqN6gCALACAA&sourceid=chrome&ie=UTF-8