எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

'ஹமாஸ்’ கயவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட!!!

பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதலில்[07.10.2023]  சுமார் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் பிணைக்கைதிகளாக ஹமாஸர்களால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில், சிறைப்பட்டவர்களலில் ஒருவரான ‘ஷானி லவுக்’(30) என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அவளின் உடல் மீது[அவளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவளின் தாய் வேண்டியபோது, ‘அவள் கொல்லப்படவில்லை; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்’ என்பது ஹமாஸியர் அறிவிப்பு] எச்சில் துப்பியும், அதைக் காலால் மிதித்தும் இழிவுபடுத்தியவாறு டிரக்கில் கொண்டுசெல்லப்படும் காணொலி உலகெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது.

நிர்வாணக் கோலத்தில், அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்ததோடு எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்களோ[டிரக்கில் கொண்டுசென்றபோது, பெண்ணின் பிறப்புறுப்பின் மீது ஹமாஸ் காலியின் கால் அழுத்திக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. பின்னர் அந்த வீடியோ அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது] என்று அவளைப் பெற்ற அன்னை மட்டுமல்லாமல் அகில உலகமே மனம் பதறியது; பெரும் வேதனக்குள்ளானது.

பெண்ணின் நிலை குறித்து ஏதும் அறியப்படாத நிலையில், பதற்றமும் வேதனையும் சிறிதளவும் குறையாமலிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்..... 

அண்மையில் அவர்கள் கண்டெடுத்த மண்டை ஓடு ஒன்றின் மரபணுவைச் சோதித்தபோது, அது ஷானியின் மண்டை ஓடு என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். https://www.hindutamil.in/news/world/1146818-german-woman-killed-in-attack-by-hamas-terrorists-israel-army-announcement.html

இதன் மூலம், ‘ஷானி லவுக்’ உயிரோடு இல்லை என்று அறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தச் செய்தி, ஹமாஸ் கயவர்கள் ‘ஷானி லவுக்’கை உயிரோடு அடைத்து வைத்துத் தொடர்ந்து வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்துகிறார்களோ என்றெண்ணி, அவளின் தாயும் சொந்தபந்தங்களும் அனுபவித்த துயரத்தின் அளவைக் கணிசமான அளவு குறைத்திருக்கும் என்று ஆறுதல் அடையலாம்.

அடாத செயலில் ஈடுபட்ட ஹமாஸ் கயவர்கள், ‘ஷானி லவுக்’கைத் தொடர்ந்து வன்புணர்வு செய்து துன்புறுத்தாமல், அவளைக் கொன்றதன் மூலம், “அவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட” என்று சொல்லத் தோன்றுகிறது.

‘காலாவதி’ ஆகிறார் ‘கடவுளின் கடவுள்’!!!

இந்தத் தளம் உருவான[2011] சில ஆண்டுகளிலேயே நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட[2000ஐக் கடந்ததும் உண்டு] பார்வையாளர்களைப் பெற்றது  மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

கொஞ்சம் ஆண்டுகள் அந்நிலை நீடிக்கவும் செய்தது[‘தமிழ்மணம்’ திரட்டி உயிர்ப்புடன் இயங்கியபோது].

ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘பார்வை’ எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து சில நூறுகள் என்றானபோதும், சோர்ந்துவிடாமல்[கணிசமான பதிவர்கள் காணாமல்போனார்கள்] பணியை[?]த் தொடர்ந்தேன்.

புதிய புதிய இளம் ‘அறிவுஜீவி’களை உருவாக்குவதைக் கடமையாக எண்ணிப் பதிவுகள் எழுதுவது நீடித்தது[ஹி...ஹி...ஹி!!!; அவற்றின் தரத்தை உயர்த்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

ஆயினும் என்ன, அண்மைக் காலங்களில், ‘பார்வைகள்’ 100ஐக் கடப்பதே அரிதானதால், “எல்லாம் அவன்[முழுமுதல் கடவுள்] செயலே” என்று மனதைத் தேற்றிக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.

கீழ்க்காண்பது, சற்று முன்னர் நகல் செய்த, தளத்துக்கான[‘கடவுளின் கடவுள்!!!’] ‘பார்வைகள்’ விவரம்:

மொத்தம் 998016இன்று10 நேற்று118 இந்த மாதம்7065 கடந்த மாதம்10612

அனைத்தையும் படைத்துக் காத்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அந்த முழுமுதல் கடவுள் கருணை காட்டாததால், அடியேனால் படைத்துக் காத்துப் பராமரிக்கப்படுகிற ‘கடவுளின் கடவுள்!!!’ காலாவதி ஆகும் நிலையில் இருக்கிறார் என்பதைத் தளத்திற்கு வருகைபுரிந்து கவுரவித்த... கவுரவிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.