எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

‘காலாவதி’ ஆகிறார் ‘கடவுளின் கடவுள்’!!!

இந்தத் தளம் உருவான[2011] சில ஆண்டுகளிலேயே நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட[2000ஐக் கடந்ததும் உண்டு] பார்வையாளர்களைப் பெற்றது  மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

கொஞ்சம் ஆண்டுகள் அந்நிலை நீடிக்கவும் செய்தது[‘தமிழ்மணம்’ திரட்டி உயிர்ப்புடன் இயங்கியபோது].

ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘பார்வை’ எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து சில நூறுகள் என்றானபோதும், சோர்ந்துவிடாமல்[கணிசமான பதிவர்கள் காணாமல்போனார்கள்] பணியை[?]த் தொடர்ந்தேன்.

புதிய புதிய இளம் ‘அறிவுஜீவி’களை உருவாக்குவதைக் கடமையாக எண்ணிப் பதிவுகள் எழுதுவது நீடித்தது[ஹி...ஹி...ஹி!!!; அவற்றின் தரத்தை உயர்த்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

ஆயினும் என்ன, அண்மைக் காலங்களில், ‘பார்வைகள்’ 100ஐக் கடப்பதே அரிதானதால், “எல்லாம் அவன்[முழுமுதல் கடவுள்] செயலே” என்று மனதைத் தேற்றிக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.

கீழ்க்காண்பது, சற்று முன்னர் நகல் செய்த, தளத்துக்கான[‘கடவுளின் கடவுள்!!!’] ‘பார்வைகள்’ விவரம்:

மொத்தம் 998016இன்று10 நேற்று118 இந்த மாதம்7065 கடந்த மாதம்10612

அனைத்தையும் படைத்துக் காத்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அந்த முழுமுதல் கடவுள் கருணை காட்டாததால், அடியேனால் படைத்துக் காத்துப் பராமரிக்கப்படுகிற ‘கடவுளின் கடவுள்!!!’ காலாவதி ஆகும் நிலையில் இருக்கிறார் என்பதைத் தளத்திற்கு வருகைபுரிந்து கவுரவித்த... கவுரவிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.