எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 3 நவம்பர், 2025

காருக்குள் காதல் ஜோடி! கடமை தவறியதா காவல்துறை?!

//கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி(Coimbatore College Student), நேற்று(நவ.02) இரவு, தனது காதலருடன் இரவு சுமார் 11 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம்(Coimbatore Airport News) பின்புறம் உள்ள பகுதியில் காரில் இருந்தபடி பேசிக்கொண்டு[?] இருந்துள்ளனர். அப்போது, அங்கு 3 பேர் கும்பல் வந்ததாகத் தெரியவருகிறது. ஜோடி தனியாக இருப்பதை அறிந்த கும்பல் மாணவியின் ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி, பெண்ணைத் தூக்கிச்சென்று வன்புணர்வு செய்துள்ளது//  என்பது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி.

தகவல் கிடைத்துக் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடுகிறார்கள் என்பது வழக்கமான நிகழ்வு.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சோக நிகழ்வைச் சுட்டிக்காட்டி, ஆளும் ‘தி.மு.க.’ அரசை எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்திருப்பதும் வழக்கமானதுதான்.

ஆனால், இவர்களும் ஊடகக்காரர்களும் சுட்டிக்காட்டத் தவறியவை.....

கல்வி கற்பதிலேயே முழு நேரத்தையும் செலவிட வேண்டிய ‘அந்த’ மாணவிக்குக் ‘காதல்’ தேவையில்லை என்பதும், தேவையற்றதைத் தேவையாக்கிகொண்ட அவள்ர், ஏறத்தாழ அர்த்த ராத்திரியில்[இரவு சுமார் 11 மணி] தனியிடத்தில்[விமான நிலையத்தின் பின்புறம்] காருக்குள் காதலனுடன் இருந்தது கண்டிக்கத்தக்கது என்பதும்தான்.

தங்களுக்குச் சாதகமான இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கற்பழிப்பில் ஈடுபட்ட கயவர்கள், மிக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

ஆனால், “தி.மு.க. ஆட்சியில் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன. பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை”[பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது> அண்ணாமலை> மாலைமலர்] என்பதுபோல் குற்றம் சாட்டுவோரிடம் நாம் கேட்க விரும்புவது.....

“அர்த்த ராத்திரியில், தனியிடம் தேடிச்சென்று காதல்[புனிதம் ஆக்கப்பட்ட காமமே காதல்] பண்ணும் ஜோடிகளுக்கெல்லாம் காவலர்களை அனுப்பிப் பாதுகாப்புத் தருவது அரசின் கடமையா?”

மனநோய்ச் சிகிச்சை... தேவை இந்த ‘இருவர்’ சேவை![பகிர்வு]

                       நன்றி: 'ஹெல்த் & பியூட்டி’ > அக்டோபர் 2025