எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தரங்கெட்ட, தறுதலைத் தமிழன்களின் புகலிடமா ‘யூடியூப்’?!

அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற அந்தக் கொடூர நிகழ்வின்[வன்கொடுமை] பின்னணியில் வெளியாகும் காணொலிகள் எண்ணிலடங்காதவை.

இந்த வினாடிவரை அந்த எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

பாதிப்புக்கு உள்ளான மாணவியின் எதிர்காலம் குறித்துக் கவலை தெரிவித்து ஆலோசனைகள் வழங்குவதற்கு மாறாக, ‘யார் அந்த சார்?’ என்று கேள்விக்கணை தொடுத்து, ஆளும் தி.மு.க. அமைச்சர்களின் படங்களை ஒட்டி, “இவர்தான்... இவரேதான். வசமா சிக்கிக்கிட்டார். தப்பவே முடியாது” என்பதாகத் தடாலடியாய்த் தலைப்புக் கொடுத்து, அசிங்கமாகவும் ஆபாசமாகவும் வசைபாடுகிறார்கள் காணொலிக்காரர்கள்; அவர்களும் தமிழர்கள்தான்!

‘தி.மு.க.’வினர் குற்றம் புரிந்திருந்தால், அவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்யும் குழு எதுவும், இதுவரை எவரையும் அடையாளப்படுத்தாத நிலையில், ‘விசாரணை முற்றுப்பெறவில்லை; வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அது விசாரணைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குந்தகம் விளைவிக்கும்’ என்று குழுவினர் வேண்டுகோள்[உத்தரவிடவில்லை] வைத்த பிறகும், நீதிமன்றம் கண்டித்த பின்னரும்.....

பொய்யும் புனைசுருட்டும் கலந்த காணொலிகளைத் தொடர்ந்து ‘யூடியூப்’இல் வெளியிடுபவர்கள் உயர் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த/திகழும் தமிழினத்தவர்தானா?

அல்ல, அல்லவே அல்ல. அவர்கள் காலிகள்! கயவாலிகள்!!

வேண்டாதவர்களைக் குற்றவாளிகளாக்கி அற்பச் சுகம் காணும் அயோக்கியர்கள்! ‘யூடுயூப்’ தரும் அற்பத் தொகைக்காகத் தன்மானத்தை விலைபேசும் தறுதலைகள்!!

'உதார்’ விடாமல் உலகச் சாதனை நிகழ்த்திய ‘ஜின்பிங்’!!!

லகின், முதல் செயற்கைக்கோள் உதவியுடனான ‘அல்ட்ரா-ரிமோட்’ அறுவைச் சிகிச்சைகளை சீனா நடத்தியுள்ளது.

சீனாவின் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் திபெத்தில் உள்ள லாசா, யுனானில் உள்ள டாலி, ஹைனானில் உள்ள சன்யா ஆகிய இடங்களிலிருந்து, சீன தேசத்து[பெய்ஜிங்] நோயாளிகளின் கல்லீரல், பித்தப்பை, கணையம் ஆகிய உறுப்புகளில் அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரோபோடிக் அறுவைச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி இந்த அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டன. 

‘ஒவ்வோர் அறுவைச் சிகிச்சையும் கிட்டத்தட்ட 150,000 கிமீ தொலைவில்[இருவழித் தொலைவில்] தரவை அனுப்பிச் செய்யப்பட்டது[இது அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மகத்தான சாதனை].  குணமடைந்த நோயாளிகள் அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்’ என்கிறது சீனத்துச் செய்தி.

“நான் அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்; இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை உலகின் நம்பர் 1 நாடு ஆக்குவேன்” என்றெல்லாம் ‘பீலா’ விடுவதைத் தவிர்த்து, ஓசைப்படாமல் ஓர் உலகச் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் சீனக் குடியரசுத் தலைவர் ‘ஜின்பிங்’.

                                  *   *   *   *   *

https://tamil.asianetnews.com/world/china-makes-medical-history-by-performing-the-first-satellite-surgery-ever-rag-spk2xt -First Published Jan 4, 2025, 2:14 PM IST