உலகின், முதல் செயற்கைக்கோள் உதவியுடனான ‘அல்ட்ரா-ரிமோட்’ அறுவைச் சிகிச்சைகளை சீனா நடத்தியுள்ளது.
சீனாவின் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் திபெத்தில் உள்ள லாசா, யுனானில் உள்ள டாலி, ஹைனானில் உள்ள சன்யா ஆகிய இடங்களிலிருந்து, சீன தேசத்து[பெய்ஜிங்] நோயாளிகளின் கல்லீரல், பித்தப்பை, கணையம் ஆகிய உறுப்புகளில் அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார்கள்.
‘ஒவ்வோர் அறுவைச் சிகிச்சையும் கிட்டத்தட்ட 150,000 கிமீ தொலைவில்[இருவழித் தொலைவில்] தரவை அனுப்பிச் செய்யப்பட்டது[இது அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மகத்தான சாதனை]. குணமடைந்த நோயாளிகள் அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்’ என்கிறது சீனத்துச் செய்தி.
“நான் அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்; இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை உலகின் நம்பர் 1 நாடு ஆக்குவேன்” என்றெல்லாம் ‘பீலா’ விடுவதைத் தவிர்த்து, ஓசைப்படாமல் ஓர் உலகச் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் சீனக் குடியரசுத் தலைவர் ‘ஜின்பிங்’.
* * * * *
https://tamil.asianetnews.com/world/china-makes-medical-history-by-performing-the-first-satellite-surgery-ever-rag-spk2xt -First Published Jan 4, 2025, 2:14 PM IST