

மேற்கண்ட செய்திகளின்படி, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள[திருவரங்கம் என்று எழுதுபவர் ஏழேழு ஜென்மங்களிலும் தெரிவில் திரியும் சொறி நாயாகப் பிறந்து நரக வேதனை அனுபவிப்பார்] நம்பெருமானாகிய கடவுள் 'பெருமாள்', 5 மணி நேரம் பட்டினி கிடந்து பசியால் துடிதுடித்தார் என்பதை அறிகிற எவரும், ஆறுதல் பெறும் வழியின்றிக் கலங்கிக் கண்ணீர் சிந்தி அழுவர் என்பதில் கொஞ்சமேனும் சந்தேகத்திற்கு இடமில்லை.
எழுதத் தொடங்கும்போதே என் கண்கள் குளமானதால், பதிவு எழுத இயலாமல் நான் பட்டப்பாடு சொல்லும் தரமன்று.
எழுதிமுடிக்கப் பத்து நிமிடங்கள் போதும் என்னும் நிலையில், இதை நிறைவு செய்யப் பத்து மணி நேரங்கள் ஆயின என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
இடையிடையே, நம் பெருமாளைப் பட்டினி போட்ட பாவிகளைத் திட்டித்தீர்க்கத் தமிழில் உள்ள அத்தனைக் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியும், அவர்கள் மீதான என் சினம் சிறிதளவும் தணியவில்லை என்பதும் அறியத்தக்கது.
கருணைக்கடலான பெருமாள், அவர்களைத் தண்டிக்கமாட்டார் என்பதால், பெருமாள் கோயில் நிர்வாகிகள் அவர்களுக்கு அதிகப்பட்சத் தண்டனை வழங்குதல் வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
