எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 30 அக்டோபர், 2025

இதயத் துடிப்பு அதிகரிப்பது[சராசரிக்கும் மேல்] ஆபத்தானதா?

இதயத் துடிப்பானது,  பெரியவர்களுக்கு ஓய்வாக இருக்கும்போது, நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிப்புகள்(bpm)வரை இருக்கும். 

வயது, உடற்பயிற்சி, நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் துடிப்பில் மாற்றங்கள் நிகழும். விளையாட்டு வீரர்களுக்கு இருதயச் செயல்திறன் காரணமாக, இதயத் துடிப்பு 60 bpmக்கும் குறைவாக[ஓய்வில்] இருக்கலாம்.

பரபரத்தல் இல்லாமல் அமைதியாக இருக்கும் தருணத்தில்கூட திடீரென இதயத் துடிப்பு சிலருக்கு அதிகரிப்பதுண்டு. அதாவது, இதயத் துடிப்பு 100 bpmஐக் கடந்திருக்கும். இதை ‘டாக்ரிக்கார்டியா’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதற்கான காரணங்கள்:

1.பதட்டம் அல்லது மன அழுத்தம்> பதற்றப்படும்போது அட்ரினலின் சுரக்கிறது. இதனால் உடல் ரீதியான ஆபத்து இல்லாவிட்டாலும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. 

2.நீரிழப்பு> நீரிழப்பு[லேசான நீரிழப்பு உட்பட] காரணமாக இரத்த அழுத்த அளவு குறையும். அதைச் சரிசெய்ய இதயம் வேகமாகத் துடிக்கும். 

3.காஃபின் அல்லது தூண்டுதல்கள்> காஃபின், நிக்கோடின், சில குளிர் மருந்துகள், ஆற்றல் பானங்கள் போன்றவை அட்ரினலின் செயல்பாட்டை அதிகரிப்பதால் இதயம் வேகமாகத் துடிக்கும்.

4.ஹார்மோன் மாற்றங்கள்> தைராய்டு செயல்பாட்டில் ஏற்ற இறக்கங்கள் இடம்பெறும்போது[குறிப்பாக மாதவிடாய்க் காலம்]  இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

5.அரித்மியா> இதயத்தின்  மின் பாதையில் உருவாகும் ஒழுங்கற்ற நிலையும் இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். 

6.போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்கிகார்டியா சிண்ட்ரோம்(POTS)> இது, பெரும்பாலும் இளைய வயதினரிடையே காணப்படுவது. இதனாலும் இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும்.

ஓய்வாக இருக்கும்போது மேற்கண்ட வகையில் இதயத் துடிப்பு 100bpm> 120 bpmஐக் கடந்து அதிகரிப்பது ஆபத்தானது அல்ல[தானாகவே சரியாகிவிடுவதும் உண்டு] எனினும், மருத்துவமனைக்குச் செல்வது நல்லது  என்கிறார்கள் மருத்துவர்கள்.

எச்சரிக்கை!

சீரற்ற இதயத் துடிப்பு(அரித்மியா> மிக அதிகரிப்பதும் மிகக் குறைவதுமான தாறுமாறான துடிப்பு) சில சமயங்களில் ஆபத்தானதாக இருக்கலாம், இது அடிப்படைக் காரணத்தைப் பொருத்துப் பாதிப்பில்லாததாகவோ, உயிருக்கு ஆபத்தானதாகவோ இருக்கலாம். இது இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் கோளாறினால் உண்டாகிறது. சில சந்தர்ப்பங்களில், இது பக்கவாதம் போன்ற தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே, தொடர்ந்து அசாதாரண இதயத் துடிப்பை உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

                                  *   *   *   *   *https://www.hindustantimes.com/lifestyle/health/cardiologist-reveals-6-reasons-why-your-heart-may-beat-faster-than-usual-and-when-you-should-worry-101758170221221.html