கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் ஒடுக்குப்புறமானதொரு இடத்தில்[மனித நடமாட்டம் இல்லாத விமான நிலையத்தின் பின்புறம்] காதலருடன் காதல் கலை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, தறுதலைகளால் வன்புணர்வுக்கு ஆளான அசம்பாவிதத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலையார், வானதி அம்மையார், நயினார் நாகேந்திரனார் போன்ற அரசியல் பெரும்புள்ளிகள், ‘தி.மு.க.’ அரசைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்[மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள்].
அவர்களைப் பாராட்டுவதோடு ‘தி.மு.க.’ அரசின் மெத்தனப்போக்கை நாமும் கண்டிக்கிறோம்.
அதே வேளையில், இறைவனால் அருளப்பட்டதும், இனவிருத்திக்கு ஆதாரமாக இருப்பதுமான காதலை வளர்ப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்படும் இளம் பெண்களுக்கு[+கல்லூரி மாணவிகள்], பாதுகாப்பாகக் காதல் பண்ணுவது குறித்து கொஞ்சம் ஆலோசனை வழங்க விரும்புகிறோம்.
ஓ............................................குமரிகளே,
எனவே, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி போன்ற பொது இடங்களிலேயே நீங்கள் காதல் வளர்க்கலாம். அதற்குத் தேவை ஒரு கார் மட்டுமே. வாடகைக் காராகவும் இருக்கலாம்(உங்களின் உள்ளம் கவர்ந்தவரே ஓட்டுநர்). புனிதமான காதல் வளர்ப்பில் ஈடுபடும்போது பணச் செலவு ஒரு பொருட்டல்ல.
நீங்கள் பயன்படுத்தும் காரில் நல்ல கறுப்பு நிறத்தில் சன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது அவசியம்; பணியாற்றும்போது பின்னிருக்கைக்கு இடம்பெயர்வது புத்திசாலித்தனம்.
பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் காரை நிறுத்தி, நிதானமாகக் காதல் வளர்ப்பில் ஈடுபடலாம்.
நீண்ட நேரம் இந்தக் கடமையில் ஈடுபட நேரிட்டால், காரை நகர்த்திச் சற்றுத் தொலைவில், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் அதை நிறுத்தி உங்களின் பணியைத் தொடரலாம்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் காவல்துறைக்காரன் கார்க் கதவைத் தட்டி இடையூறு விளைவிப்பான் என்பதே அதற்கான காரணம்.
வாழ்க காதல்! தொடர்க இளசுகளின் காதல் வளர்ப்புப் பணி!!
