எனது படம்
மனித அறிவு வளர்ச்சியுறத் தொடங்கிய ஒரு காலக்கட்டத்தில், அண்டமும் அதிலுள்ள அனைத்துப் பொருள்களும் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டன என்று நம்பினார்கள் மனிதர்கள்; கணக்கற்ற மதங்களும் உருவாயின. அவற்றை உருவாக்கிய மதவாதிகள் மக்கள் மீது பல மூடநம்பிக்கைகளைத் திணித்தார்கள். கடவுள் குறித்துப் பகுத்தறிவாளர்களால் கேள்வி மேல் கேள்வி கேட்கப்பட்டு, அவற்றில் எந்த ஒன்றுக்கும் நம்பத்தக்க விடை கிடைக்காத நிலையிலும், மதவாதிகள் அவரவர் மதத்தைப் பரப்ப முயன்று, மத மோதல்களுக்கு வழிவகுத்தார்கள். அதனால், கோடிக்கணக்கில் மனித உயிர்கள் பலியாயின; பேரழிவுகள் நிகழ்ந்தன. இருந்தும், மதவாதிகளின் மத வெறி தணிந்தபாடில்லை. அவர்கள் திருத்தப்படுவதும் திருந்தவில்லையெனின் கருணை காட்டாமல் அழிக்கப்படுவதும் காலத்தின் தேவை.

சனி, 7 மார்ச், 2026

அருளாளர் கமேனியும் ‘அரை லூசு’ டிரம்பும் அல்லா[ஹ்]வும்!!!

ரானிய ஷியா மதகுருவாகவும், ஈரானில் இஸ்லாமியக் குடியரசு அமையக் காரணமானவராகவும் இருந்தவர் ‘அலி கமேனி[Ali Hosseini Khamenei]’. இவர் அதி உயர் ஆன்மிகவாதியும்கூட; அல்லாவின் அருளுக்கு முழுமையாகப் பாத்தியப்பட்டவர்; அல்லாஹ்வின் புகழ் பரப்புவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

இத்தகைய ஓர் அருளாளர், பேராசைக்காரரும்[தீராத நோபல் பரிசு மோகம்] ‘அரை லூசு’மான["ஈரானுடன் பேசத் தயார்" என்று அறிவித்து, சில மணி நேரங்களிலேயே, “அதற்கான காலம் கடந்துவிட்டது” என்று சொன்னவர்] அமெரிக்க அதிபர் டிரம்பின் படைவீரர்களால் குண்டுபோட்டுக் கொல்லப்படுவதற்கு அல்லா அனுமதித்தது பேரதிர்ச்சி தரும் அவல நிகழ்வாகும்.

தன்னுடைய தீவிரப் பக்தரான கமேனிக்கு[Khamenei] முழு ஓய்வு தருவதற்காகவே அவரை மரணிக்கச் செய்து, மனித உருவிலிருந்து விடுவித்துத் தன்னிடம் அழைத்துக்கொண்டார் அல்லா என்றால், அது இஸ்லாமியருக்கு மட்டுமல்லாமல் ஏனையோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் அரிய செயல்தான்.

ஆனாலும்,

கமேனியின் மனம் பேரானந்தத்தில் திளைக்கும் வகையில், ஈரான் மீது வலிந்து தாக்குதல் நடத்தும் டிரம்பையும்  நெதன்யாகுவையும் வெகு விரைவில், ஈரான் படை வீரர்கள் சாகடிப்பது[போரில் ஈரான் வெல்லும்] மிக முக்கியம். 

ஈரான் வீரர்களுக்கு அசுரப் பலம் அளிப்பதன் மூலம், தனக்கான கடமையை உடனடியாக நிறைவேற்றுவார் எல்லாம் வல்ல அல்லாஹ் என்று நம்புவோம்.