நான்.....

எனது படம்
வெகு சாமானிய வலைப்பதிவனான எனக்கு, புகழின் உச்சம் தொட்டவர்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆகும் ஆசை அறவே இல்லை. பெரும் புகழ் ஈட்டியவர் எவராயினும் அவரால் நம் மக்கள் மூடர்கள் ஆக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாததால்தான், என் விமர்சனத்தால் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது என்பது தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்து செய்கிறேன்; வேறு உள்நோக்கம் ஏதுமில்லை.

வெள்ளி, 13 மார்ச், 2026

பதவி ஏற்றதும் பக்திமானாக அறிமுகமான அதிப் புத்திசாலி ஆளுநர்!!!

//தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்//[செய்தி].

மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், மாநில ஆட்சியாளர்கள் தத்தம் மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆட்சி நடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இழைத்தால் அது குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பவதற்கும்தான்.


மக்களுக்காகவே ஆளுநர்கள்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றவுடன் மக்களையல்லவா சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருத்தல் வேண்டும்.

இந்த ஆளுநர் கோயிலுக்குச் சென்று கபாலீஸ்வரைத் தரிசித்தாராம்.

“பதிவிக்காலம் முடியும்வரை என் குடும்பத்திற்கான அதிகபட்ச வசதி[வெற்று ஆடம்பரம்]க்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பாய் கபாலீ” என்று வேண்டிக்கொள்ளவா?

கடவுள்களால் வேறு பயன்கள் இல்லையெனினும், ‘மோடி’க் கூட்டம் தங்களைப் பரம யோக்கியர்கள்[‘பக்தியுள்ளவன் உத்தமன்’ என்பது மக்களின் நம்பிக்கை] என்று காட்சிப்படுத்தி மக்களிடம் வாக்குப்பெற உதவுகிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!!!!