புதன், 26 ஆகஸ்ட், 2026

உலகம் அழியும்! அறிவியலாளர்கள் அடுக்கும் காரணங்கள்.....

1.பூமி தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது போலப் பூமி இப்போது இல்லை. அதேபோல வரும் காலங்களிலும் பூமி இது போல இருக்காது. இந்த மாற்றங்களால் பூமி[உலகம்] நிச்சயம் ஒரு காலத்தில் அழியும்.

2.சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் பூமியில் மோதியதால்தான் டைனோசர்கள் அழிந்தன என்று நம்பப்படுகிறது. அதே போன்ற ஒரு நிகழ்வு இன்று நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். சிறுகோள் மோதும்போது பெரிய அளவில் ஆற்றல் வெளியேறி அது பேரழிவை ஏற்படுத்தும்.


3.பெருநெருப்பு, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது, கோள்களுக்கிடையே ஏற்படும் மோதலால், விண்வெளி தூசுகளாலும் குப்பைகளாலும் நிரம்பும். அதனால்  சூரிய ஒளியையே மறைந்துவிடக்கூடும். பெரும் அடர் பனி உருவாகி, காலநிலை மாறி, பூமியில் உள்ள உயிரினங்கள் அழியக்கூடும். 

4.சூப்பர் எரிமலை வெடிப்புகளும் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

5.பெட்ரோல், டீசல் உட்பட புதைபடிவ எரிபொருட்கள் காடுகளை அழிப்பது போன்ற காரணங்களால், உலக வெப்பநிலை உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகுகின்றன; கடல் மட்டம் உயர்கிறது. இதனாலும் உலகம் அழியலாம். 

6.அணு ஆயுதப் போர் உடனடி உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தலாம். 


7.செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையின் பல அம்சங்களில் புரட்சியை ஏற்படுத்தினாலும், சில வல்லுநர்கள் ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் இயந்திரத்தை உருவாக்கும்போது, அது ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவானது கட்டுப்பாட்டை மீறி மனிதர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அது மனித இன அழிவுக்கு வழிவகுக்கும்.


-https://tamil.oneindia.com/news/international/how-will-the-world-end-5-acknowledged-theories-714601.html 

சின்ன வெங்காயம்... ஒரு சிறப்புப் பதிவு!

“ஒரு பயனும் இல்லை” என்னும் பொருளில், பொத்தாம்பொதுவாக “ஒரு வெங்காயமும் இல்லை” என்கிறோம்.

இப்படி வெங்காயத்தை இழிவுபடுத்துவது எத்தனைப் பெரும் தவறு என்பதைக் கீழ்க்காணும் பட்டியலால்[பயன்கள்] அறியலாம்.

*வெங்காயத்தில்[குறிப்பாகச் சின்ன வெங்காயம்] புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

*முருங்கைக் காயைவிட அதிகப் பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

*குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் வலியைப் போக்குகிறது. அழற்சியை உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளையும் சிதைத்துவிடுகிறது; விஷத்தையும் முறித்துவிடுகிறது.

*சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பழக்கத்தைத் தொடர்பவர்களுக்குச் சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களைக் கரைத்து, அழற்சியைக் குறைத்துக் கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

*யூரிக் அமிலம் அதிகமாகச் சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்தக் கற்கள் கரைந்துவிடும்.

*முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

*செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தாலே. தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காகப் பயன்படுத்தலாம்.

*சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

*புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகளையும் செல் சிதைவுகளையும் இது சரிசெய்கிறது.

*நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அவற்றோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும்.

*வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

*வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

*வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவரப் பல்வலி & ஈறுவலி குறையும்.

*அடிக்கடிப் புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டுவர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயத்தின் பலன்களைத் தொகுத்தளித்த, Mohan kumargurumoha.blogspot.comக்கு நன்றி.