ஞாயிறு, 12 மார்ச், 2017

கடவுளின் குரல்!!! [இதுவொரு ‘தன்னம்பிக்கை’ப் பதிவு]


நம்பர் 1 வார இதழின்[‘லைஃப்’] ‘கடவுளின் குரல்’ தொடருக்கும் இப்பதிவின் தலைப்புக்கும் எள்ளத்தனை ஒட்டுறவும் இல்லை என்பதை யாவரும் அறிவீராக!
“உங்க மகனுக்குக் கணையத்தில் புற்று நோய். எங்களால குணப்படுத்த முடியல. உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் ரொம்பக் குறைவு............” 

-மிகுந்த மன வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர், மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.....

மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்.....

பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு ரெண்டொருத்தர் பிழைச்சிருக்காங்க. உங்க மகனும்கூட உயிர் பிழைக்கலாம்என்று உறுதிபடச் சொன்னார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி... என்று புலம்புவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

நண்பர் ஒருவர், அந்த மகானின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அவரிடம் அழைச்சிட்டுப் போ என்றார்.

அவருடைய ஆன்மிகத் திருமடம் ரொம்பத் தொலைவில் இருக்கு. வாடகைக் கார் பிடிச்சித்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” -குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.

கடன் வாங்கு என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

மடத்தை அடைந்தவுடன் மகாஆஆஆஆஆனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதில் பெரிதும் மகிழ்ந்துபோனார்.

எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்கினார். மகான், மகனின் முன்னந்தலையைத் தொட்டு, பகவான் கருணை காட்டுவார். கவலைப் படாதே என்று திருவாய் மலர்ந்தருளியபோது செல்வராசு மெய்சிலிர்த்துப் போனார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்; மகனைத் தான் தங்கியிருந்த வாடகைக் குடியிருப்பிலேயே கிடத்திவிட்டு மீண்டும் மகானைச் சந்தித்தார்; கதறி அழுதவாறு சொன்னார்: என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி.

வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின் பாதாரவிந்தத்தைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. அவன் கொடுத்துவைத்தவன் என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

மகனின் சடலத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் செல்வராசு.

மகனை இழந்த வருத்தத்தோடு, புதிதாகப் பட்ட கடன் சுமையும் சேர்ந்து பெரும் பாரமாய் அவர் நெஞ்சை அழுத்தலாயிற்று. 

டாக்டர் சொன்னபடி நடந்திருந்தா என் மகன் பிழைச்சிருப்பானோ?என்ற சந்தேகம் அவரின் உள் மனதில் விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




12 கருத்துகள்:

  1. இவரோட தரிசனம் யாருக்கு வேண்டும் ?பிழைக்க வைக்க முடியாத இவரா மகான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய் பொய்யாய் உதிர்க்கிறார்கள்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. இவரோட தரிசனம் யாருக்கு வேண்டும் ?பிழைக்க வைக்க முடியாத இவரா மகான் :)

    பதிலளிநீக்கு
  3. மனம் ஒரு குரங்கு எப்படியும் நினைக்கும் நண்பரே
    மின்னஞ்சல் காண்க...

    பதிலளிநீக்கு
  4. அந்த ஆன்மிகச் செம்மலை செமையா மொத்தனும்...

    பதிலளிநீக்கு
  5. அவர் மிகப் பெரும் செல்வாக்குப் பெற்றவர்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதியதுதான்.

      நன்றி mohamed althaf

      நீக்கு
  7. நமது நாட்டவர்களுக்கு அவசியம் தேவையான ஒரு அருமையான பதிவு.
    நேய்கள் வந்த மனிதர்கள்,அச்சமடைந்து,கலங்கி போய்நின்று, வருந்தும் நேரத்தில்,அந்த சந்தர்பத்தை நன்றாக பயன்படுத்தி எங்களிடம் வாருங்கள்,நோயிலிருந்து விடுதலை, கடவுள் அருளால் குணமாக்குகிறோம் என்று சொல்லி அழைப்பதும்,நோயால் பாதிக்கபட்டவர் இறந்ததும்,
    //வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு.// கடவுள் நல்லதையே அவருக்கு செய்திருக்கிறார்,
    இப்படியெல்லாம் இறந்த பின்பு சொல்வது தான் இப்போது எமது மக்களிடம் தாரளாமாக நடந்து கொண்டிருக்கிறது.
    கடவுள் உன்னை சாகடித்து தான் உனக்கும்,உனது குடும்பத்திற்கும் நன்மைகள் செய்ய இருக்கிறார் என்ற கண்டுபிடிப்பை,நோயால் பாதிக்கபட்டவர் கடவுளின் துதுவரிடம்/கடவுளுக்கு சேவகம் செய்பவர்களிடம் நோயிலிருந்து மீள கடவுளின் கருணை கேட்டு வரும் போதே சொல்லி இருக்கலாம் அல்லவா?
    //டாக்டர் சொன்னபடி நடந்திருந்தா என் மகன் பிழைச்சிருப்பானோ?" என்ற சந்தேகம் அவரின் உள் மனதில் விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது.//
    எனது தனிபட்ட நம்பிக்கை 98 வீதமும் அவர் பிழைத்திருப்பார்.டாக்டர் சொன்னவைகள் முழுமையாக அறிவு பூர்வமானவை.

    புற்றுநோய்க்கெதிரா கீமோதெரபி எடுக்கும் பாதிக்கபட்டவர்கள், உடற்பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு உள்ள புற்றுநோய் கட்டிகள் இன்னும் வேகமாக அழிக்கபடுகின்றன என்று ஆராயச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புற்றுநோய்க்கெதிரா கீமோதெரபி எடுக்கும் பாதிக்கபட்டவர்கள், உடற்பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு உள்ள புற்றுநோய் கட்டிகள் இன்னும் வேகமாக அழிக்கபடுகின்றன என்று ஆராயச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்//

      நம்பிக்கை ஊட்டக்கூடிய மிக நல்ல தகவலைத் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி வேகநரி. மிக்க நன்றி.

      நீக்கு