வெள்ளி, 10 மார்ச், 2017

மருட்டும் மாலனும் குறட்டை விட்ட குமுதம் ஆசிரியரும்!!!

‘பிரபல’ எழுத்தாளர் மாலனின் சிறுகதையை[குமுதம் ‘லைஃப்’, 15.03.2017] இன்று படிக்க நேர்ந்தது. மீண்டும் மீண்டும் வாசித்ததில் ஒரு மணி நேரம் வீணாகக் கழிந்தது! மண்டை காய்ந்தது!!

‘புலி வேட்டை’ என்பது மாலன் எழுதிய சிறுகதையின் பெயர். ஒரு சர்க்கஸ் புலியின் அறிமுகத்தில் கதை ஆரம்பமாகிறது.

சர்க்கஸ் புலியின் அவல வாழ்வு குறித்து இரண்டு பத்திகளில் விவரித்த எழுத்தாளர் மாலன், ‘கூடாரத்தை இழுத்து நிறுத்தியிருந்த வெளிக் கயிற்றை உரசிக்கொண்டு நடந்தது புலி’ என்று கதையை ஆரம்பிக்கிறார்.

‘வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்துவிட்டால், அல்லது காலைக்கொண்டு கயிற்றைக் கட்டியிருக்கும் முளையைப் பறித்தெடுத்தால் கூடாரம் சரிந்து விழும். ஆனால், அதில் என்ன பயன்? மீண்டும் சிறைப்பட நேரலாம். பசித்த வயிற்றுக்கு இரை கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தப் பூனை வாழ்க்கைக்கா?’ என்று புலியின் சிந்தனை ஓட்டம் அமைந்திருந்ததாக ஒரு பத்தியில் விவரிக்கிறார் அவர்.

கதையின் இந்த ஆரம்ப நிகழ்ச்சியில் மாலன் சொல்ல நினைப்பது என்ன என்பது பலமுறை சிந்தித்தும் புரியவில்லை.
வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்தோ, காலால் முளையைப் பறித்தெடுத்தோ பிரமாண்டமானதொரு கூடாரத்தைச் சாய்ப்பது புலிக்குச் சாத்தியமான செயலா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்க, புலி தனித்து விடப்பட்டது எப்படி என்றும் ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. 

முதல் நிகழ்வின் இறுதியில், ‘சுதந்திரத்தின் விலை பசி’ என்னும்  வாழ்க்கைத் தத்துவம் வேறு!

அடுத்து வரும் நிகழ்ச்சியில், செல்வந்தர் அரசநாயகமும் அவரின் வீட்டுச் சமையல்காரர் ஆறுமுகமும் அறிமுகம் ஆகிறார்கள்.

அரசநாயகம், தம் நண்பர்களுடன் தண்ணியடிக்கிறார். “நான் இப்போது ஒரு புலி வேட்டைக்குப் போய் வந்தேன்” என்று சொல்லி நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த முயல்கிறார். ஆனால் நண்பர்களோ அவரின் வீட்டுச் சுவரில் தொங்கும் வேட்டைத் துப்பாக்கியைப் பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவர், சந்தேகத்துடன், “புலியைக் கொன்னுட்டியா?” என்கிறார்.

அரசநாயகமோ, “அது காகிதப் புலி” என்கிறார். மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை நினைத்து அவர் அப்படிச் சொன்னதாகச் சொல்கிறார் மாலன்.

பின்னர், பங்களாதேஷிலிருந்து மாம்பழம், ஹவாயிலிருந்து வாழைப்பழம், ஆப்பிரிக்காவிலிருந்து வெண்டைக்காய், மெக்ஸிகோவிலிருந்து தக்காளி போன்றவற்றை வரவழைப்பது குறித்தும், உலகமயமாக்கல் குறித்தும் கதைக்குத் தொடர்பே இல்லாமல் உரையாடி  முடிக்க, அந்த இரண்டாம் நிகழ்ச்சியும் முடிவடைகிறது.

மூன்றாம் நிகழ்ச்சியில், ஒரு புலி[அது தப்பிவந்த சர்க்கஸ் புலியா அல்லவா என்பது பற்றிய விவரிப்பு ஏதும் கதையில் இல்லை] ஆற்றில் இறங்கிக் குஷியாக நீராடுகிறது; காட்டுக்குள் செல்லாமல், காட்டை ஒட்டியுள்ள அரசநாயகம் பங்களாவின் [இங்கேயும் குழப்பவே செய்கிறார்] பில்லியெட்ஸ் அறையில் நுழைந்து[அது அத்தனை சுலபமா!?] மேசைக்குக் கீழ் படுத்துக்கொண்டதாகக் கதையடிக்கிறார் மாலன்.

அது அங்கு படுத்திருப்பதைப் பார்த்துவிட்ட, அரசநாயகத்தின் சமையல்காரர் ஆறுமுகம், முதலாளிக்குத் தகவல் சொல்லாமலே முதலாளியின் துப்பாக்கியை எடுத்துச்சென்று புலியைச்  சுட்டுக் கொல்கிறார்.

வெடிச்சத்தம் கேட்டு, அரசநாயகம் நண்பர்கள் பின்தொடர ஆறுமுகத்தை அணுகுகிறார்; “என்னடா பண்றே?”  என்கிறார்.

“புலியைச் சுட்டுட்டேன் முதலாளி” என்கிறார் சமையல்காரர் ஆறுமுகம்.

“என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று அதிரடியாகச் சிரித்தார் அரசநாயகம் என்று கதையை முடிக்கிறார் பிரபல கதாசிரியர்.

“என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று அரசநாயகம் சொன்னதில் முரண்பாடு உள்ளது. நண்பர்களுடனான உரையாடலின்போது, “நான் புலி வேட்டைக்குப் போய்வந்தேன்” என்று இவர் சொல்ல, “புலியைக் கொன்னுட்டியா?” என்று நண்பர் கேட்க, “அது காகிதப் புலி” என்கிறார் இவர். அதாவது, ஒரு காகிதப் புலியை வேட்டையாடிவிட்டதாகச்  சொல்கிறார்.

நண்பரிடம் அவ்வாறு சொல்லிவிட்டு, கதையின் முடிவில், “என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று சொல்வது ஒரு முரண்பாடு ஆகும்.

செல்வந்தர்கள், கோடிகளில் கைப்பற்றுகிற ஒப்பந்தத்தை ரத்து செய்வது எளிதான செயலன்று என்பது எதார்த்தம். இதை விவரிக்க ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதை அமைப்பு; பொருத்தமே இல்லாத ‘புலி சுடும்’ நிகழ்ச்சி; விறுவிறுப்பு இல்லாத நடை..... என்பனவற்றோடு இன்னும் பல குறைபாடுகளைக் கொண்டது மாலனின் ‘புலி வேட்டை’!

ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்கு உள்ள எழுத்தாற்றல்கூட இந்தப் பிரபலத்துக்கு இல்லை என்பதற்கு இந்தக் குழறுபடிக் கதை ஒரு சாட்சி. 

தமிழின் நம்பர் 1 வார இதழான குமுதம், இம்மாதிரியான கால் வேக்காட்டுக் கதைகளை வெளியிடலாமா? குமுதம் ஆசிரியர் அரைத்தூக்கத்தில் இதை வாசித்துப் பிரசுரத்துக்கு அனுமதித்தாரா?

பிரியா கல்யாணராமனுக்கே வெளிச்சம்!
===============================================================================



13 கருத்துகள்:

  1. பிரபலமாகி விட்டால் எது எழுதினாலும் ப்ராபலம் வராது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தைரியத்தில்தான் எப்படியும் எழுதுகிறார்கள்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உரிய தகுதி இல்லாமலே சிலர் பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். நல்ல வேடிக்கை.

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

    https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

    பதிலளிநீக்கு
  4. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    பதிலளிநீக்கு
  5. பிரபலங்களின் கிறுக்கல்களுக்குத்தான் மரியாதை ஐயா...
    நல்ல எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்கள் சீண்டுவாரின்றி....

    பதிலளிநீக்கு
  6. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    பதிலளிநீக்கு
  7. உங்களது மொபைலில் தெரியாமல் Delete ஆன போட்டோ மற்றும் வீடியோ திரும்ப பெறுவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=IrUXR4Gxa9M

    பதிலளிநீக்கு
  8. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    பதிலளிநீக்கு
  9. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    பதிலளிநீக்கு
  10. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

    பதிலளிநீக்கு