எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 9 செப்டம்பர், 2023

பாலுறவுப் பொன் [புன்]மொழிகள்!!!

 *பல நேரங்களில், ‘அது’ விசயத்தில் தவறு செய்ய முயலும்போது நம் மனசாட்சி நம்மைத் தடுத்துவிடுகிறது. நம் மீதான, இச்சைகளின்[குறிப்பாகக் காமம்] உச்சக்கட்டத் தாக்குதலின்போது அது[மனசாட்சி] எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறது!

*உடலுறவில் உச்சம் தொடுவது பெண்ணுக்குச் சாத்தியமா என்பது பற்றி இதுவரை எந்தப் பெண்ணும் கருத்துச் சொன்னதில்லை. “ஆம்” என்றும் “இல்லை”யென்றும் ‘காரசார’ விவாதம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஆண்களே!

*வாழ்ந்து முடித்து மடிந்துபோவதை ‘ஆடி அடங்கும்  வாழ்க்கையடா’ என்றார்கள் நம் முன்னோர்கள். உடலுறவுக்கு முன்பு நாயாய்ப் பேயாய்  ஓடியாடி அலைந்து, உடலுறவுக்குப் பின் அடங்கிவிடுவதும் இதில் அடங்கும்தானே?!

*‘அது’ விசயத்தில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. லேகியம், ஆயின்மெண்ட், வயாகரா, நயாகரா என்று அலைந்து திரிபவர்கள் ஆண்களே.

*உலக அளவில் எது எதிலோ கின்னஸ் சாதனை நிகழ்த்தப்படுகிறது. ‘இது’ விசயத்தில் முயற்சி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

*ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிக்க இயலாதபோது மனம் வருந்துவது மனித இயல்பு. அந்த வருத்தத்தை உரிய முறையில் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். தவறினால், உடல் நலிவுற்று, பின்னர் எதிர்பாராத வகையில் வாய்ப்புகள் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்த இயலாமல் போவது மிகப் பெரிய சோகம்.

*ஆண்களைப் பொருத்தவரை புதைகுழிக்குப் போகும்வரை[அல்லது சாம்பலாகும்வரை] புணர்ச்சி செய்ய இயலும். பெண்ணின் உடலமைப்பு அதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்படவில்லை. கடவுள் எனப்படுபவர் பெண்ணுக்கு இழைத்த மிகப் பெரிய அநீதி இதுவாகும்.

*நினைத்தபோது நினைத்த இடத்தில் நினைத்த வகையிலெல்லாம் உடலுறவுச் சுகம் அனுபவிக்க இயலாததால், நம் முன்னோடிகளில் கணிசமானவர்களால் கற்பனை செய்யப்பட்டதே ‘காதல்’ என்னும் பொன் முலாம் பூசிய காமம். 

                                       *   *   *   *   *

குறிப்பு: ‘அது’ விசயத்தில் அனுபவ அறிவுடையார் மாட்டுக் கேட்டறிந்து, தொகுத்தது இந்தப் ‘பாலுறவு அனுபவமொழிகள்’[மீள் பதிவு]!