இயற்கையே மனிதர்களின் பேராற்றல் வாய்ந்த நிரந்தர எதிரி[கடவுள் அறியப்படாத, அல்லது நிரூபிக்கப்படாத எதிரி???] என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். இதனுடன் எவ்வளவுதான் போராடினாலும், முழு வெற்றி காண்பது சாத்தியமே இல்லை.
இதனுடனான போராட்டத்தால் விளையும் துன்பங்களுடன், பகைமை காரணமாக மனிதர்கள் மனிதர்களுடன் மோதும்போது, அவர்கள் உறும் துன்பங்களின் அளவு அதிகரிக்கிறது.
ஆகவே, அற்பக் காரணங்களுக்காக எல்லாம், மனிதர்கள் மனிதர்களுடன் பகைமை பாராட்டுவது அறிவுடைமை அல்ல.
ஒட்டுமொத்த மனிதர்களும் இணைந்து ஆறறிவு என்னும் ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டுமே நோய்கள், இயற்கைப் பேரிடர்கள், மரணப் பயம் போன்றவற்றால் நேரும் துன்பங்களின் அளவைக் கணிசமாக[‘முழுமையாக’ எப்போதும் சாத்தியமில்லை]க் குறைக்க இயலும்.