திங்கள், 6 ஜூலை, 2026

தமிழ்நாடு முதல்வர்[மாற்று] திருமாவளவனார் நீடூழி வாழ்க!!!

//திருமாவளவனைரைத் தமிழ்நாட்டின் துணை முதல்வராக்க வேண்டும் என்று ‘வி.சி.க.’ சிறப்புச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; ‘விசிக’ தலைவர் திருமாவளவன்ர் துணை முதல்வராக வேண்டும் என்பதே எல்லா மாவட்டத்தினரின் எதிர்பார்ப்பு என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்//[https://makkalkural.net]> செய்தி. 

சிறுத்தைகள் கட்சியின் சீர்மிகு தலைவர் திருமாவளவனாரைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்று, சீறும் சிறுத்தைகள் கோரிக்கை[கட்டளை?] வைத்தது மாபெரும் தவறு.

தமிழ்நாட்டின் முதல்வராகி, இதை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் தகுதி படைத்தவர் நம் வளவனார்.

ஆகவே, அன்னாரைத் தமிழ்நாட்டின் ‘மாற்று முதல்வர்’[6 மாதம் ஜோசப். அடுத்த 6 மாதம் வளவர். இப்படி மாறி மாறி.....] ஆக்குதல் வேண்டும் என்று ஒரு திருத்தத் தீர்மானம் கொண்டுவருமாறு ‘வி.சி.க.’ கட்சியினரை வேண்டுகிறோம்(ஜோசப் தீர்மானத்தை ஏற்பார்) .

இதன் மூலம் இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள ‘வி.சி.க.’ தமிழ்நாட்டை ஆண்டதாக ஒரு புதிய வரலாறு படைக்கப்படும்!

வாழ்க ஜோசப்! வளமுடன் வாழ்க திருமாவளவனார்!!

                                           ==================

https://makkalkural.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/?__cf_chl_f_tk=TBKo27JO6e9DU8m8sQWqOI6QCjDHsJ52HaaiUK97HiI-1783302716-1.0.1.1-TUuWBsV83Nit_QduPVUUaSSwsTKGmRU.zVh5z5oqAWA