தனக்குத்தானே ‘சத்குரு’[கடவுளின் குரு] என்று பட்டம் சூட்டிக்கொண்டு, முகம் முழுக்கத் தாடிமீசை வளர்த்து, நீண்ட குர்தாக்கள், பேன்ட்கள்(ஜீன்ஸ் உட்பட) என்று வகை வகையாய் ஆடம்பர ஆடைகள் உடுத்து, ஆன்மிகத்தில் உச்சம் தொட்ட ஞானி போல் உலகெங்கும் சுற்றும் ஜாலிப் பேர்வழி ஜக்கி வாசுதேவன்.
வெள்ளியங்கிரியில் ‘ஈஷா யோகா மையம்’ என்னும் பெயரில் ஆசிரமம் ஆரம்பித்து, முட்டாள் தலைவர்களின் ஆதரவுடன், படு மூடர்களாக வாழும் மக்களை ஏமாற்றிக் கோடிகளில் புரளும் அதிர்ஷ்டசாலி நபர் இந்த ஜக்கி.
அனுமதியின்றி எவரும்[உயர் மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட] உள்ளே நுழைய இயலாது இந்தக் கில்லாடிச் சாமியாரின் சாம்ராஜ்ஜியத்தில்[வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம்].
இளம் வயதுப் பெண்டாட்டி மகாசமாதி ஆனதாகக் கதை கட்டி, அவருக்குச் சமாதி கட்டி வழிபடுவது இந்த வேடதாரியின் வழக்கம்..
கன்னிப் பெண்கள் இங்கிருந்து காணாமல்போயிருக்கிறார்கள்.
இங்கிருந்து தப்பி ஓடிய ஒரு பெண் ஒரு பாழ் கிணற்றில் பிணமாகக் கிடந்தும், அது குறித்த விசாரணையே நடைபெறாமல்போன அதிசயம் எல்லாம் இங்கே நிகழ்ந்திருக்கிறது.
நாட்டு நலனில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் பலரும், இணையத் தளங்களில் இந்த அயோக்கியன் செய்த அட்டூழியங்களைப் பக்கம் பக்கமாக எழுதினார்கள். அனைத்துமே நிழலுக்குப் பாய்ச்சிய நீரானது.
இந்நிலையில், அமெரிக்கா நாட்டில், இந்த நபரால் ஏமாற்றி வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணொருத்தி, அங்குள்ள நீதி மன்றத்தில்[வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகம் வழக்கைப் பதிவு செய்தது] வழக்குத் தொடுத்திருக்கும் நிகழ்வு தொடர்பான செய்தி வெளியாகியிருப்பது நம் கவனத்தைக் கவர்வதாக உள்ளது.
அது குறித்த விரிவான நக்கீரன் இதழ்ச் செய்தியைக் கீழே இடம்பெற்றுள்ள முகவரி*யில் நுழைந்து வாசிக்கலாம்.
முக்கியக் குறிப்பு:
யோகா மையங்களின் மூலம் கணக்குவழக்கில்லாமல் சம்பாதித்துக் கோடிகளில் மிதக்கும் இவன் மேற் குறிப்பிட்ட வழக்கிலிருந்தும் தப்பிவிட வாய்ப்புள்ளது.
வாசியுங்கள். அறிந்த தகவல்களை மறவாமல் பிறருடன் பகிருங்கள்.
*https://www.nakkheeran.in/24-by-7-news/isha-loses-defamation-case-11172402 -நக்கீரன் செய்திப்பிரிவு, 03 Mar 2026 15:52 IST
