ஞாயிறு, 10 மே, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு... அனுமதித்தவர் விஜய்?!

பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளித் தமிழை அவமதித்தது முதல்வராகியுள்ள ‘விஜய்’யின் விருப்பத்தின் பேரில் நடந்ததா?

இன்று காலையிலிருந்தே தமிழினத் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விஜய் மக்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தியும், சற்று முன்னர்வரை புதிய முதல்வர் மௌனம் சாதிப்பது மேற்கண்டவாறு சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிர்தமர் மோடியைத் திருப்திப்படுத்தி, எந்தவொரு சூழலிலும் தன் ஆட்சி கலைக்கப்படுதல் கூடாது என்பதற்காகவே தமிழை[மூன்றாம் இடத்துக்குத் தள்ளி] அவமதிக்க அனுமதித்தாரா இவர்?.

தமிழினத் தலைவர்கள் கலந்தாலோசித்து உரிய முறையில் செயல்படுவது உடனடித் தேவையாகும். 

‘விஜய்’யின் ‘சிங்கப்பெண்’ சி.அ.படை! ‘புலிப்பெண்’ புரட்சிப் படை எப்போது?!

'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை': பதவியேற்பு மேடையிலேயே முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்து!spotlightmedia_tamil செய்தி. 3 h முன்பு.

‘காட்டு ராஜா’ என்று அழைக்கப்படும் சிங்கம் அதீத ஆற்றல் வாய்ந்த விலங்குகளில்[புலி, யானை...] ஒன்று. வேறு எந்தவொரு விலங்கின் துணையும் இல்லாமல், தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை படைத்தது.

‘சிங்கப்பெண்’ என்றால் சிங்கத்தைப் போலவே தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவள் என்று பொருள்.

அவளுக்கு[பெண்களுக்கு] எதற்குச் சிறப்புப் படை, அதிரடிப் படை எல்லாம்?[‘சிங்கப்பெண்’ படையில் சிங்கம் போன்ற பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது].

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பினால், தனியாக ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி, அதற்குப் ‘பெண்கள் பாதுகாப்புப் படை’ என்று பெயர் சூட்டினாலே போதும்.

‘சிங்கப்பெண்’  பாதுகாப்புப் படை, ‘புலிப்பெண்’ புரட்சிப் படை என்றெல்லாம் ஒரு புதிய அமைப்பிற்குப் பெயர் சூட்டுவது மக்களைக் கவர்வதற்காகவே, திரைப்படத்தில் கதாநாயகன் & நாயகிகளுக்குக் கவர்ச்சிகூட்ட ஒப்பனை செய்வது போல.

புதியத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதற்கு முன்னால்[எளிதாகப் புரியும் வகையில்] முதல்வர் விஜய் கொஞ்சமேனும் சிந்திப்பது நல்லது; கவர்ச்சி காட்டி மக்களைக் கவரும் தந்திரத்தைக் கைவிடுவது அவருக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

நடிகன் முதல்வனானதும் நம் ‘தமிழ்த்தாய்’க்கு நேர்ந்த அவமானம்!!!

நடிகன் ‘விஜய்’ முதலமைச்சராக[+அமைச்சர்கள்]ப் பதவி ஏற்ற விழாவில், வழக்கமாக, தமிழ்நாடு அரசு விழாக்களில் முதலாவதாகப் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட ‘பரிதாபம்’ அரங்கேறியுள்ளது.

பெண்ணினத்தைப் போற்றினாலும், நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயையே அனைவரினும் மேலானவராக[“தெய்வத்துக்கு இணையாக...” என்பாரும் உளர்] மதிக்கிறோம்.

நம் தாய்மொழியாம் தமிழையும் அந்தத் தாய்க்குச் சமமாகத்தான் போற்றி வணங்குகிறோம்.

தமிழக வரலாற்றில் நேற்றுவரை[ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை] இதுதான் நடைமுறையாக இருந்தது. தேசியக் கீதத்துக்கு முதலிடம் தரவேண்டும் என்னும் நடுவணரசின் ஆணை பொருட்படுத்தப்படவில்லை. அது விழாவின் இறுதியில் பாடப்பட்டது. நடுவணரசும் கண்டுகொள்ளவில்லை.

நடிகன் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் நம் தாய்மொழி தமிழ் அவமதிக்கப்பட்டுள்ளது[தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருந்தால் பதவி ஏற்பு விழாவை ஆளுநர் ரத்து செய்திருப்பாரா? வாய்ப்பே இல்லை].

‘பாஜக’வுடன் நட்புக்கொண்டுள்ள ‘அதிமுக’ தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றிருந்தாலும்[‘திமுக’வுடன் இணைந்து] தமிழுக்கு இப்படியொரு அவமதிப்பு நேர்ந்திருக்காது என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்கென்றே ‘விஜய்’யை ஆதரித்த ‘விசிக’ தலைவர் திருமாவளவன்[என்றும் குறையாத தமிழ்ப் பற்றுடன் 100% தமிழனாக வாழ்பவர்] அவர்கள்  விழிப்புணர்வு பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்டாலினுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள இந்தியத் தேசிய முஸ்லிம் லீக் கட்சியினருடன் இணைந்து, மே 13 அன்று[‘தவெக’  அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாள்] செயல்பட்டால், தமிழினத் துரோகி ‘விஜய்’ தமிழை அவமானப்படுத்துவது இனியும் நிகழவே நிகழாது[பதவி பறிபோவதால்].

என்ன செய்யப்போகிறார் தமிழன் திருமாவளவன்?