//“3-வது முறையாக நான் பதில் சொல்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்தோடு சட்டமன்றம் தொடங்கியது. தேசிய கீதம் பாடக்கூடாது என்று எதுவும் இல்லை; தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது." -சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு//. இது செய்தி[https://minnambalam.com/].
“தேசியக்கீதத்தை எத்தனை முறையும் பாடலாம் என்று விதிமுறை ஏதுமில்லை” என்று சொல்ல நினைத்ததைத்தான் “தேசியக்கீதம் பாடக்கூடாது என்று ஏதுமில்லை” என்று கூறியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர்.
அவரின் கூற்று 100% சரியே.
நம் நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படுவதே தேசியக்கீதம்[நாட்டுப்பண்].
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவே சட்டமன்ற நிகழ்வு முடிந்தவுடன் தேசியக்கீதம் பாடப்படுகிறது[எழுந்து நின்ற கோலத்தில் உறுப்பினர்கள் அத்தனைப்பேரும் கீதத்தை மனப்பூர்வமாய் முணுமுணுக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஹி... ஹி... ஹி!!!].
இத்தனை தடவைதான் பாட வேண்டும் என்னும் விதியெல்லாம் இல்லை என்று அமைச்சர் கூறியதிலிருந்து அதை எத்தனை முறையும் பாடலாம் என்பது அறியத்தக்கது.
பல முறை பாடினால், நாட்டுப்பற்று மேலும் மேலும் வலுப்படும் என்பதால், கேள்வி எழுப்பவோ கருத்துச் சொல்லவோ விரும்பும் உறுப்பினர்கள் அத்தனை பேரும்[சபாநாயகரும் அமைச்சர்களும் உட்பட], எழுந்து நிற்கும்போதும், பேசி முடித்தவுடனும் மறவாமல் நம் தேசியக்கீதத்தைப் பாடி முடிப்பது வரவேற்கத்தக்கது.
சட்டமன்றத்தில் சபாநாயர் இதை அறிவித்தல் வேண்டும் என்பது நம் பணிவான கோரிக்கை.
===================
https://minnambalam.com/tn-minister-rajmohan-explains-national-anthem-sequence-in-assembly/
