//திருச்சி மாவட்டம் வீரப்பூர் பூசாரிபட்டியில், கன்னிமாரம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ள பகுதியில், டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இக்கடையை அகற்றவேண்டுமென அப்பகுதி மக்கள், அதன்முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரம் தென்னூர் பகுதியில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள் அமைந்துள்ள இடத்திலும், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனை மூடக்கோரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்//[செய்தி]
மேற்கண்டவை போன்ற செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால், நாடு தழுவிய போராட்டம் எதையும் மக்கள் நடத்தவில்லை![தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு பொதுவான, ஒருங்கிணைந்த மாநில அளவிலான டாஸ்மாக் போராட்டமும் தற்பொழுது நடைபெறவில்லை. எனினும், பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன> AI].
போதை தேவைப்படும்போதெல்லாம், மதுக்கடையைத் தேடிப்போகிறான்.
இவனுக்குத் தேவை மதுக்கடையே தவிர, அந்தக் கடை இருப்பது கோயிலருகிலா, மருத்துவமனையை ஒட்டியா, பள்ளிக்குப் பக்கத்திலா என்பதையெல்லாம் இவன் கவனிப்பதே இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமான மயானத்தில் அது இருந்தாலும் இவன் அதைத் தேடிப்போகவே செய்வான்.
சுருக்கச் சொன்னால், குடிகாரனுக்குக் குடிக்கச் சரக்கு வழங்கும் கடைகளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படுவதில்லை[ஆலயங்களின் அருகில் மதுக் கடைகள் இருப்பதால், பக்தர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை; போதையில் குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுவதற்கும் இதற்கும்[கோயிலருகே மதுக் கடை இருப்பது] சம்பந்தமில்லை. சாமிகள் வேண்டுமானால் ‘மதுப்பிரியர்’களாக மாறலாம். ஹி... ஹி... ஹி!!!]
போதை மிதமிஞ்சினால் நடு வீதி, சாக்கடை ஓரம், குப்பை மேடு என்று எங்கு வேண்டுமானாலும் இவன் விழுந்து கிடப்பான்.
இவனின் இந்த நிலை மக்களின் நடமாட்டத்திற்கும், வாகனப் போக்குவரத்துக்கு சற்றே இடைஞ்சலாக இருக்குமே தவிர, பெரிய அளவில் பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை. அரிதாகச் சிலர் பிறருடன் மோதலில் ஈடுபடுவதுண்டு.
ஒரு வகையில், தரையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கும் இவனை, மக்கள் வேடிக்கை பார்த்து, கண நேர மகிழ்ச்சிக்கு உள்ளாகிறார்கள் என்றே சொல்லலாம்.
மதுக் கடைகளே கூடாது. மது குடித்து எவரும் சீரழியக் கூடாது என்று பெரும்பான்மை மக்கள் விரும்பினால், கட்சி வேறுபாடின்றி, ஒருங்கிணைந்து, அரசிடம் கோரிக்கை வைத்து நாடு தழுவிய பெரும் போராட்டத்தில் ஈடுபடுதல் வேண்டும்.
ஒருங்கிணைத்துப் போராட ஒரு தன்னலம் கருதாதவனும், தண்டனைகளால் கலங்காதவனுமான தலைவன் தேவை.
