எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 12 ஜூன், 2024

தமிழிசை[சௌந்தர்ராஜன்]க்குச் சுட்டு விரல் இல்லையா?!?!?!

//ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராகச் சந்திரபாபு நாயுடு இன்று பொறுபேற்றார். தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழா மேடைக்கு வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது முகத்தைக் கடுமையாக வைத்தபடி தமிழிசையை அமித்ஷா கடிந்துகொண்டார். 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இணையதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது//


***இது தமிழர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி[காமதேனு, இந்து தமிழ்].


தமிழிசைக்கும் வடக்கன்களின் அடிமை அண்ணாமலைக்கும் இடையே 'அதிமுக'வுடனான கூட்டணி தொடர்பாகக் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.


இதனால், இவர்களுக்கிடையே விவாதம் நிகழ்ந்தது. இது வெறும் விவாதம் மட்டுமே. கண்டித்து அறிவுரை வழங்கும் அளவுக்குத் தமிழிசை அநாகரிகமாக நடந்துகொள்ளவில்லை.


உண்மை இதுவாக இருக்க, அமித்ஷா என்னும் மோடியின் அடிமை தமிழிசையைச் சுட்டு விரல் அசைத்து, உலகறியக் கண்டித்திருப்பதாகத் தெரிகிறது.


நமக்கான சந்தேகம் என்னவெனில்…..

“நானும் நீயும் ஒரே கட்சிதான். ஆனாலும், நீ எந்த வகையிலும் என்னைவிட உயர்ந்தவன் அல்ல. சுட்டுவிரல் அசைத்து என்னை மிரட்டுகிறாய். இனியொரு முறை இதைச் செய்தால் என்னிடம் அவமானப்படுவாய். ஜாக்கிறதை” என்று சுட்டு விரல் அசைத்து அந்த அடிமையைத் தமிழிசை கண்டித்திருக்க வேண்டும்.


அதை அவர் செய்யத் தவறியதால்…..


தமிழர்களுக்காக ஒரு துரும்பைக்கூட அசைத்திராத[கெடுதல்களே விளைந்துள்ளன] இந்த இந்திக்காரனிடம்[இந்தி வளர்த்துப் பலனடைந்த/அடையும் குஜராத்தி] தமிழ்ப் பெண்[தமிழிசை] அவமானப்பட்டதை எண்ணித் தமிமிழினமே தலை குனிந்து நிற்கிறது.


தமிழிசைக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது…..


“நீ செய்த தவறுக்காகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேள் பெண்ணே.”

                                                                                                                                                   *   *   *   *   *

https://kamadenu.hindutamil.in/news/amitshah-scolds-tamilisai-on-andhra-government-swearing-in-ceremony-stage


உயர் நீதிமன்றத்தின் கேள்வியும் ஓர் உத்தமக் குடிமகனின் பதில்களும்!!!

“தமிழ்நாட்டு விமான நிலையங்களில்[சென்னை > சேலம், கோவை > சென்னை, சென்னை > மதுரை போல் தமிழ்நாட்டுக்குள் பறப்பவை] அறிவிப்புகளை ஏன் தமிழில் வெளியிடக்கூடாது?” என்பது உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி இது].

விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நடுவணரசு, இதற்குப் பதில் தருமா? “ஆம்” என்றால் எப்போது என்பது நமக்குத் தெரியாது.

இந்தப் புண்ணியப் பூமியின் உண்மைக் குடிமகன் என்ற வகையில் நம் பதில்[கள்]: இந்தியா ‘இந்தி’ நாடு. மோடி அரசின் மொழிக்கொள்கைப்படி[ஒரே நாடு ஒரே மொழி] அனைத்துத் துறைகளிலும் இந்தியின் ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பது முக்கியக் காரணம்.

பிற காரணங்கள்:

*தமிழை ஆஹா.. ஓஹோ என்றெல்லாம் வாய் கிழியப் புகழ்ந்தாலும், அவரின் உள்நோக்கம், 'அது வளர்ந்தால் தன் கட்சியை எப்போதுமே ஆதரிக்காத தமிழர்களுக்குப் பெருமை சேரும். அது கூடாது. அவர்கள் சிறுமைப்படுத்துதலுக்கு உரியவர்கள்'.

*தமிழர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள். விமான அறிவிப்பு தமிழில் இல்லாதது குறித்து அவர்கள் வெகுண்டெழுந்து போராடியதில்லை.

*தமிழர்கள் போராடினாலும் அதற்குத் தலைமை தாங்குபவர்களைக் காட்டிக்கொடுப்பதற்கென்று மோடியின் கொத்தடிமைக் கூட்டம் இங்கு இருக்கிறது; இனியும் இருந்துகொண்டிருக்கும்.

*“தமிழ் வாழ்க! தமிழ் வளர்க” என்று மேடை ஏறிக் கூச்சல் போடுபவர்களில் பலருக்கும் தமிழ்ப் பற்று இல்லை. தாய் மொழி இழிவுபடுத்தப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்கள் அவர்கள்.

மேற்கண்டவை தவிர வேறு காரணங்கள் இருப்பினும் இவை போதுமானவை என்பது நம் எண்ணம்.

நீதியரசரின் கேள்விக்குப் பதில் தரும் பொறுப்பு நடுவணரசுக்கு இருக்க, வெகு சாமானியனாக நாம் பதிலளித்திருப்பது தவறு என்றால், நீதியரசர் பொறுத்தருள்வாராக.