எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கூட்டுத் தற்கொலையும் அணு ஆயுதக் கையிருப்பும்!!!

 

புதிது புதிதாய் உருவாகிப் பரவும் 

அரிய வகை நோய்கள்!

போக்குக்காட்டி மறைந்திருந்து புதிய அவதாரம்

தரித்துவரும் பழைய நோய்கள்! 

இவற்றின்  அதிரடித் தாக்குதலால் மரிக்கும் 

மனித உயிர்களின் எண்ணிக்கை

பல்லாயிரம் பல லட்சம் என

நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது!

என்றோ தொடங்கிய

கில்லாடி நோய்க் கிருமிகளுக்கும் வல்லாண்மை

மனித அறிவுக்குமான 

போர் இன்றளவும் தொடர்கிறது.

போர் முற்றுப்பெறுவது சாத்தியமா?

எப்போது?

வென்றிடும்  வாய்ப்பு மனிதருக்கா 

கிருமிகளுக்கா?

விடை கண்டறிவது அத்தனை எளிதல்ல.

ஒருவேளை,

மனிதர்கள் தோற்றால்.....

ஒட்டுமொத்த மனித இனமும்

கூட்டுத் தற்கொலை புரியும் மனநிலைக்குத்

தள்ளப்படும்.

அப்போது உதவுவது

அணு ஆயுதங்கள் மட்டுமே!

======================================================================

படைப்பு:

கவிஞானி ‘பசி’ பரமசிவம்[ஹி...ஹி... ஹி!!!]