பெங்களூரில் தர்மேந்திரா என்னும் கன்னடக்காரன்[ரக்ஷன வேதிகே], “...தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்” என்று பேசியிருக்கிறான்.
#கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக[காவிரி நீர்ப் பிரச்சினை], பெங்களூருவில் உள்ள நாளிதழ் அலுவலகங்களில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் நீக்கப்பட்டன.
#கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக[காவிரி நீர்ப் பிரச்சினை], பெங்களூருவில் உள்ள நாளிதழ் அலுவலகங்களில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் நீக்கப்பட்டன.
இதனிடையே கன்னட ‘ரக்ஷன வேதிகே’ அமைப்பைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர், கன்னடத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தைக் கண்டித்துக் கன்னடர்கள் நடத்தும் போராட்டத்துக்குக் கர்னாடகாவில் வசிக்கும் தமிழர்கள் முழு ஆதரவு தர வேண்டும். வீதிக்கு வந்து போராட வேண்டும். இல்லையென்றால், 1991இல் நடந்த காவிரிக் கலவரத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்கியதைப் போலத் தாக்குவோம்; தமிழர்களின் தொழில் நிறுவனங்களை அழிப்போம்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்# -இது இன்றைய பத்திரிகை[தி இந்து, பக்.11]ச் செய்தி.
தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தமிழன் இருக்கிறானா?
இருந்தால்.....
அவனுக்குச் சூடுசொரணை இருக்கிறதா?
இருந்தால்.....
கர்னாடகத் தமிழனைக் காப்பாற்ற அவன் என்ன செய்யப்போகிறான்?!
===============================================================================

