“தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும்” என்றார் விஜய்.[https://www.thentamil.com/news/tvk-general-body-meeting-tamizhaga-vetri-kazhagam-leader-vijay-full-speech#google_vignette].
இப்படியொரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனுக்காகத்தான் நம் தாய்க்குலம் காத்துக்கொண்டிருந்தது.
இப்போது லட்சக்கணக்கில் இவருக்கு ரசிகர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
2026இல் இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனதும்[“100% ஆவேன்” என்கிறார்] ரசிகர்கள் மட்டுமல்ல, இந்த உத்தமப் புத்திரனின் 100% ஊழலற்ற நேர்மையான ஆட்சி கண்டு மனம் பூரித்து, தமிழ்நாட்டிலுள்ள 100% ஆண்களுமே[அனைத்துக் கட்சித் தொண்டர்கள் உட்பட] இவரின் 100% தன்னலமற்ற தொண்டர்களாக மாறுவதோடு, இவருடைய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஒவ்வோர் ஆண் தொண்டரும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு 24 மணி நேரமும் காவல் புரிவார் என்பது 100% உறுதி.
எனவே, 'தவெக'வின் தன்னிகரற்றத் தலைவர், “பெண்களுக்கு 100% பாதுகாப்புத் தரப்படும் என்றது 100% சாத்தியமே!