முக்காடும் கழுத்தில் மாலையுமாக அவள் அவனின் நெற்றியில் பொட்டு வைக்கும்போது, திறந்த வாய் மூடாமல், முகத்தில் கவலை ததும்பக் காட்சியளிக்கும் அந்தப் பிஞ்சு அவளின் மகள் என்பதை அறியும்போது நம் நெஞ்சு செந்தழலாய்க் கொதிக்கிறது.
ஆம்,
ஏற்கனவே திருமணம் ஆன அவளின் மகள்தான்[அவளுக்கு இன்னொரு குழந்தையும் உண்டு] அந்தச் சிறுமி.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் உடலுறவு இச்சை சற்றும் தணியாதால், அதைத் தணிக்க ஒரு கள்ளக் காமுகனுடன் உடலுறவு கொள்கிறாள் அவள். தகாத உறவு நீடிக்கிறது.
கணவனுக்கு இந்த அசிங்கம் தெரிந்தபோது அவளைக் கண்டிக்கிறான். அந்தக் காமுகியோ திருந்தவில்லை.
திருந்தாத பெண்டாட்டியைத் தீர்த்துக்கட்டுகிற ஆண்களே அதிகம் உள்ள நிலையில், அவளின் கள்ளக் காமுகனுக்கே அவளை மணம் முடிக்கிறான் அந்த உத்தமன்; பெற்ற இரு செல்வங்களைத் தானே வளர்க்க முடிவெடுக்கிறான்.
காமம் வலிமையானதுதான். அதை அடக்கி ஆளத் தவறுவோர் என்ணிக்கை அதிகரிக்கிறது. வெகு விரைவில் மனித இனம் சீரழிந்து சிதைந்து அழியும் என்பது உறுதி!
* * * * *
***தலைப்பில் நேர்ந்த பிழை[சுடான] ஏறத்தாழ 3 மணி நேரம் கழித்தே திருத்தம்[சூடான] செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
* * * * *
#2 குழந்தைகளைப் பெற்றும் காதலனை மறக்க முடியாததால் மனைவியைக் காதலனுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஒரு கணவர்![தினத்தந்தி மார்ச் 27, 4:11 pm]https://www.dailythanthi.com/news/india/up-man-gets-wife-married-to-her-lover-ill-take-care-of-our-children-1149971?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations#