எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

சனி, 15 மார்ச், 2025

பிண்டத்தில்[உடம்பு]ஆன்மா! அண்டத்தில் ஆண்டவன்?[தத்துவப் பித்தர்களுக்கு மட்டும்]

தங்கள் பலவும் ‘ஆன்மா’ இருப்பதாகச் சொல்கின்றன.

அது இருப்பதாக நம்பப்படுவது மனித உடம்புக்குள்.

இந்த உடம்பு இருந்துகொண்டிருக்கவும் இயங்குவதற்கும் காரணமான இதயம், மூளை என்று பல உறுப்புகள் பற்றி விரிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்; ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆன்மிகர்களால் இதே உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ‘ஆன்மா’ பற்றியும் அவர்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கக்கூடும்.

இன்றளவும் ஐம்புலன்களாலோ[பார்த்தோ கேட்டோ தீண்டியோ சுவைத்தோ நுகர்ந்தோ.....], ஆறாவது அறிவால் சிந்தித்தோ அறிய இயலாத ஆன்மா இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

என்றேனும் ஒரு காலக்கட்டதில் அது சாத்தியப்படுமா என்னும் கேள்விக்கும் விடை அறிந்தார் இல்லை.

மனித உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ஆன்மாவைக் கண்டறிவதே இப்போதைக்குச்[எப்போதைக்குமே?] சாத்தியம் இல்லை என்னும்போது, எல்லை அறியப்படாத அண்டவெளியிலும், அதிலுள்ள அனைத்திலும்[பொருள்கள், உயிர்கள்& பிற] இரண்டறக் கலந்திருப்பவர் என்று சொல்லப்படும் கடவுளை ஐம்புலன்களால் அறிவது, அல்லது ஆறாம் அறிவால் உணர்ந்தறிந்து உறுதிப்படுத்துவது சாத்தியம் ஆகுமா?

[அறிவியலாளரால் அண்மையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஒரிஜினல்’ கடவுள் இவர். நம் பிரதமர் மோடி இவருக்குக் கோயில் கட்டுவாரா?!]

ஆகுமோ ஆகாதோ, இருக்கும்வரை அமைதியாகவும், இயன்றவரை மன நிறைவுடனும் வாழ முயலுங்கள்; பிறர் அவ்வாறு வாழ்வதற்கும் உதவுங்கள்.

‘ஹிந்தி’யன் பாதம் நக்கும் ‘பவன் கல்யாண்’[ஆந்திரா து.முதல்வன்] என்னும் மக்கு!

தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஹிந்தியைத் திணிப்பதாகச் சொல்கிறார்கள். முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் ‘டப்’[மொழி மாற்றம்] செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை[தொழில்நுட்பக் கலைஞர்கள்] இங்கே கொண்டுவராதீர்கள். ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா?" என்று ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் கேட்டிருக்கிறார்[https://cineulagam.com/].

படங்களை இந்தியில் ‘டப்’ செய்வது, தமிழ்ப் படத்தைத் தெலுங்கில்[பிற மொழிகளிலும்] மொழி மாற்றம் செய்வது போல் பொழுதுபோக்குத் தொடர்பானது; அது வணிகம். இந்தி படிப்பது இந்திக்காரனிடம் நம் தன்மானத்தை அடகு வைப்பது சம்பந்தப்பட்டது.

இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத இந்தக் களிமண் மூளையனா ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வன்?

பாவம் ஆந்திர மாநில மக்கள்!

                                    *   *   *   *   *

https://cineulagam.com/article/dont-dub-tamil-films-in-hindi-pawan-kalyan-1741988250[ 5 hours ago]