திங்கள், 30 ஆகஸ்ட், 2021

மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருதமும், தடை விதித்த பனகல் அரசரும்!!


#1921இல் சமஸ்கிருத மாநாடு.

அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராகச் சென்னை மாகாணத்தின்(தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியது) முதலமைச்சர் 'பனகல் அரசர்' கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

விழா நிறைவு பெற்றவுடன் முதலமைச்சர் பனகல் அரசர் சென்னைக்குப் பயணமானார்.

வருகின்ற வழியில்.....

“மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருக்கிறது அல்லவா?” என்று தன் உதவியாளரிடம் கேட்டார்

“ஆம் ஐயா” என்று உதவியாளர் சொல்லியிருக்கிறார்.

“மருத்துவத்துக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்” என்று பனகல் அரசர் கேட்க, "தெரியவில்லை ஐயா” என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

“மருத்துவத்திற்குச் சம்பந்தமில்லாத சமஸ்கிருதப் பாடம் தேவையில்லை” என்று சொன்ன அவர்.....

“வீட்டுக்குச் செல்ல வேண்டாம். தலைமைச் செயலகம் செல்லலாம்" என்றார்.  

தலைமைச் செயலகம் சென்றவுடன், அலுவலர்களை அழைத்து, “மருத்துவப் படிப்புக்கு இனி சமஸ்கிருதம் என்ற ஒரு பாடம் தேவையில்லை. இன்று முதல் அது நீக்கப்படுகிறது என்ற ஆணையை வெளியிட்டு,  உடனடியாக நடைமுறைப் படுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.

அடுத்த நாள் காலை, நாளிதழ்களில் தலைப்புச் செய்தியே இதுதான். அதற்கு மிகுந்த எதிர்ப்பு வந்தபோதிலும், சமஸ்கிருதம் மருத்துவப் படிப்பில் இருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டது#

                             *  *  *

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. அவருக்கும், https://minkaithadi.com/5659/ தளத்திற்கும் நம் நன்றி.

முழு உரையையும் கேட்பதற்கு, கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.

https://youtu.be/FTDs6tjNqpg

====================================================================================

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

'இவர்கள்' நம்மைவிடவும் முட்டாள்கள்!!!


*சீனா, ஜமைக்கா போன்ற நாடுகளில் முன்னாளில், குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் அவர்களது தொப்புள்கொடியைச் சாப்பிடும் முறை இருந்ததாம். இது, அவர்களின் உடலுக்கு வலிமையைத் தரும் என்று கருதி இதைச் செய்து வந்துள்ளனர். 

!!!நல்லவேளை, குழந்தையைச் சாப்பிட்டால் தீர்க்காயுசா வாழலாம்னு மூதாதையர் சொல்லிவைக்கவில்லை.

*ஸ்காட்லாந்து நாட்டில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஒரு சடங்கில், மணமக்களை வரவழைத்து, அவர்கள் மீது முட்டை, பால், போன்ற பல பொருட்களை வீசி வேடிக்கை பார்த்து மகிழ்வது ஒரு கொண்டாட்டமாம். இதற்குப் பிறகு அவர்கள் குளித்துவரும்போது, புதிதான வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டனர் என்று பொருள். அவர்களால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் கையாள முடியும் என நம்புகின்றனர். 

!!!முட்டை, பால் எல்லாம் வீணடிக்காம, சாப்பிடக் கொடுத்து உடம்பைத் தேத்தினா, தெம்போடு முதலிரவு கொண்டாடுவாங்களே?

*மடகஸ்கார் பகுதியில் வாழ்ந்துவரும் 'மலகாஸி' எனும் மலைவாழ் மக்கள் கொண்டாடும் சடங்கின் பெயர் 'ஃபமதிஹனா'[Famadihana]. இந்தச் சடங்கில் இவர்கள் இறந்த உடலோடு நடனமாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இறந்தவரின் வீட்டில் இருந்து சடலம் மயானத்திற்குக் கொண்டுவரப்பட்டு, புதுத் துணியால் போர்த்து இவர்கள் இந்தச் சடங்கினைச் செய்கிறார்கள். 

!!!"ஆடியடங்கும் வாழ்க்கையடா!" என்றார்கள் நம் முன்னோர்கள். "அடங்கிய பிறகும் தன் ஆட்டத்தை மனுசன் நிறுத்தமாட்டான்" என்கிறார்கள் மடகஸ்கார் மக்கள்.

*எகிப்தில் உப்பு கேட்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் எகிப்தில் யாரவது வீட்டிற்கு விருந்தினராகச் சென்றால், அந்த விருந்தின்போது, உணவில் உப்புச் சேர்க்க உப்பு கேட்பதை அல்லது, உப்பை நீங்களே எடுத்துப் பயன்படுத்துவதை அவர்கள் அவமரியாதையாகக் கருதுகின்றனர்.  

!!!"உப்புக் கொடுக்கக்கூட எங்களுக்குத் துப்பில்லை. பெரிதாக எதுவும் கேட்டுவிடாதீர்கள்" என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?

*ஜெர்மனியில், திருமணத்திற்கு முந்தையதாக ஒரு சடங்கு நடக்கிறது. அந்தச் சடங்கின்போது, மணமகன், மணமகள் வீட்டார்கள் வந்து பீங்கான் பாத்திரங்களை உடைத்துவிட்டுச் செல்வார்களாம். அதை, மணமக்கள் ஒன்றாகச் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டுமாம். இது, இவர்கள் இருவரையும் ஒருங்கிணைந்து வாழவும், ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை வளரவும் செய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. 

!!!ஜோடி சேர்ந்த புதுசு. 'குஷி' மூடில் இருப்பாங்க. இதென்ன, கொடுக்கிற வேறு எந்த வேலையையும் குறை வைக்காம செய்வாங்க.

*கர்நாடகத்தில் உள்ள சண்டேஸ்வரர் கோவிலில், பிறந்த குழந்தையை அதிர்ஷ்டத்திற்காக ஐம்பது அடி உயரத்தில் இருந்து தூக்கி எறிந்து, குடும்பத்தார் கீழ் நின்று ஒரு துணியை அகல விரித்துப் பிடிப்பார்களாம். 

!!!பிறந்தது பெண் குழந்தைன்னா, துணியை விரிச்சிப் பிடிக்காம சுருட்டிப் பிடிப்பார்களோ?

*பாங்காக்கில், வருடத்திற்கு ஒரு முறை தாய்லாந்தில் 3,000 கிலோ பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைக் குரங்குகளுக்கு விருந்தாக வைப்பார்கள். 

!!!அதென்ன குரங்குகளுக்கு மட்டும்? அதுகள் நம் மூதாதையர் என்பதாலா?

*முஹர்ரம் முஹம்மதுவின் பேரன் ஹுசைனின் இறப்பிற்கு அஞ்சலி / நன்றி செலுத்தும் வகையில் தங்களைத் தாங்களே ஒரு முள் சங்கிலியைக் கொண்டு துன்புறுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம் மக்கள். இது தங்களுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்று கூறினாலும் சற்று வினோதமாக இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்தச் சடங்கு முறை பின்பற்றப்படுகிறது. 

!!!அதென்ன தங்களைத் தாங்களே? அடுத்தவங்ககிட்ட சங்கிலியைக் கொடுத்தா ரொம்ப ரொம்ப வலிக்கிற மாதிரி அடிச்சிடுவாங்களோ?

*ரோம் நாட்டில், செத்தவர்களுக்கு உணவூட்டும் சடங்கு ஒன்று இருக்கிறது. அங்குள்ள சமாதிகளில் குழாய்கள் இருக்குமாம். அதன் வழியாகத் தேன், ஒயின், உணவுப் பொருள்கள் போன்றவற்றை ஊட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

!!!வறுமையில் உயிரோடு செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் ஊட்டுவார்களா?

*பிரேசிலில் இருக்கும் யோனமமோ (Yonamamo) எனும் மலைவாழ் மக்கள், தங்களுடன் வாழ்ந்துவந்த பிரியமானவர்கள் இறந்த பிறகு அவர்களது உடலின் சாம்பலைச் சாப்பிடுவதை ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர். இதன் மூலம், அவர்கள் தங்களைவிட்டுப் பிரியவில்லை என இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சாம்பலைச் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

!!!எரித்தால் சாம்பல் சாப்பிடுகிறார்கள். குழி தோண்டிப் புதைக்கிறதா இருந்தா, குடலை உருவிச் சாப்பிடுவாங்களோ?

*ஸ்காட்லாந்து நாட்டில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஒரு சடங்கில், மணமக்களை வரவழைத்து, அவற்கள் மீது முட்டை, பால், போன்ற பல பொருட்களை வீசிக் கருப்படிப்பது ஒரு கொண்டாட்டமாம். இதற்குப் பிறகு அவர்கள் குளித்துவரும்போது, புதிதான வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டனர் என்று பொருள். அவர்களால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் கையாள முடியும் என நம்புகின்றனர். 

!!!முட்டை, பால் எல்லாம் வீணடிக்காம, சாப்பிடக் கொடுத்து ரெண்டு பேருடைய உடம்பையும் தேத்தினா 'தெம்போடு' முதலிரவு கொண்டாடுவாங்களே?

*இந்தோனேசியாவில், டானி (Dani) எனும் மலைவாழ் மக்களின் மத்தியில் வழக்கத்தில் உள்ள ஒரு சடங்கு வினோதத்தின் உச்சக்கட்டமாய் இருக்கிறது. வீட்டில் யாரவது ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது விரல்களைத் துண்டித்துக் கொள்வார்களாம். இப்படி ஒவ்வொருவர் இறக்கும்போதும் செய்கின்றனர். 

!!!விரல் போனா சமாளிச்சுக்களாம். வேறு அதி 'முக்கிய' உறுப்புன்னா... யோசிக்கும்போது ஒட்டுமொத்த உடம்பும் 'கிடு கிடு'ன்னு நடுங்குது.

*சீனாவில், கர்பிணிப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு கணவன் தீ மிதித்தால், அவளது பிரசவம் வலியின்றி இருக்கும் என்று நம்பப்படுகிறது.  

!!!அவளோடு நெருப்பில் விழுந்து தொலைச்சா, சுகப்பிரசவம் சோகப் பிரசவம் ஆயிடுமே?

*அமெரிக்காவின் 'நார்த் போர்னே' எனப்படும் மலைப்பகுதியில் திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆனதும் மூன்று நாட்கள் வெளியே செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால், அந்தத் தம்பதியினரின் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

!!!மூனு நாளென்ன, ஒரு முப்பது நாளாவது யாரும் இடைஞ்சல் பண்ணாம வீட்டில் தனியாக விட்டுட்டா அவங்க வாழ்க்கை 'அது' விசயத்தில் அமர்க்களமா இருக்குமே?

*ரொமானியா நாடோடிகள் வாழ்க்கையில், ஒரு பெண்ணைக் கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை வைத்திருந்து திருமணம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இது, அவன் அந்தப் பெண்ணை வென்றான் என்பதற்கான அடையாளமாம். 

!!!அந்த மூன்று முதல் ஐந்து நாட்களில் 'தப்புத் தண்டா' ஏதும் நடந்திருக்காதுதானே?

====================================================================================

https://tamil.boldsky.com/insync/pulse/2015/weird-customs-from-across-the-world/articlecontent-pf46881-008534.html    

சனி, 28 ஆகஸ்ட், 2021

'பாலுறவுக் கட்டுப்பாடுகள்'... மறுபரிசீலனை ஓர் அவசரத் தேவை!!!


சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரிகிற குறைபாடுகளுக்குக் காரணமானவற்றைக் கண்டறிந்து, பழையனவற்றில் தேவையானவற்றைத் திருத்துவதிலும், புதியனவற்றை உருவாக்குவதிலும் அரசுகளும் அமைப்புகளும் ஈடுபடுகின்றனவே தவிர, கண்ணுக்குத் தெரியாத காரணங்கள் குறித்துப் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை.

அக்காரணங்களுள் முக்கியப் பங்கு வகிப்பது பாலுணர்ச்சியாகும்.

இதிலுள்ள குறைபாடுகளாலும் பலவீனங்களாலும் விளையும் தீங்குகள் கணக்கில் அடங்காதவை. எனவே, பாலுறவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அல்லது, திருத்துவது குறித்து ஆராய்ந்திட அறிஞர் குழுக்களை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவது மிக அவசரத் தேவையாகும்.

பாலுணர்வுக் குறைபாடுகளால், அல்லது, பாலுறவுக் குற்றங்களால் விளையும் பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். வாசியுங்கள்... யோசியுங்கள்.

1.மனநிலை பாதிக்கப்பட்டுக் கணிசமானவர்கள் பைத்தியம் போல் நடமாடுகிறார்கள்; சிலர் பைத்தியமாகவே ஆகிறார்கள்.

2.எதிர்பார்க்கும் அளவு உறவுகொள்வதற்கான வாய்ப்புகள் அமையாதபோது ஆண், பெண் என்று இருபாலரும் தற்கொலை செய்துகொள்ளுதல் அடிக்கடி நிகழ்கிறது.

3.கட்டுப்படுத்துவதற்கென்று நிறைய நேரம் செலவாவதால் சுய முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

4.கட்டுப்படுத்த இயலாதபோது செய்யும் தவறுகளுக்குத் தண்டிக்கப்பட்டு அவமானபபடுதல், அதைத் தாங்கிக்கொள்ள இயலாதோர்  ஓடிப்போதல், அல்லது தற்கொலை புரிதல் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.

5.கடத்துதல், மானபங்கப்படுத்துதல் போன்ற குற்றங்களைச் செய்து சிறைத் தண்டனை பெறுபவர்களும், அல்லது தூக்கிலிடப்படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

6.பாதிக்கப்பட்டப் பெண்களின் குடும்பத்தாரால் குற்றம் புரிந்தோர் கொலை செய்யப்படும் கொடூரங்களும் நிகழ்கின்றன.

7.கடந்த காலங்களில் பெரும் போர்கள் நடந்து வாழ்விடங்கள் பேரழிவுகளுக்கு உள்ளானது போல, இன்றும் குழு மோதல்களால் அவை நிகழ்கின்றன. 

8.கொடிய கொள்ளை நோய்கள்[பாலியல் நோய்கள், எயிட்ஸ்] பரவிட வழி ஏற்படுகிறது.

9.இனக்கலவரங்களின்போது பகைவர் கூட்டத்துப் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

10.கட்டுப்பாடின்றி உறவு கொள்வதால் மக்கள் தொகை பெருகிட, வறுமை கோரத் தாண்டவம் புரிகிறது.

என்றிவையும் இவைபோல்வனவும் ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் சிதைத்துச் சீரழிக்கின்றன என்பது பெரும் பேரவலங்கள் ஆகும்.

பாலுணர்வுக் குற்றங்களில் ஈடுபட்டுத் தண்டனை பெறுகிற எல்லோருமே கெட்டவர்கள் என்பதில்லை; பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ நினைப்பவர்களையும் குற்றங்கள் புரியத் தூண்டும் அசுர பலம் வாய்க்கப்பெற்றது இந்தப் பாலுணர்ச்சி என்பதை மக்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது.

கூடவே கூடாது!

==============================================================================

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

வந்தது தெரியும்! போவதும் தெரியும்!!

ஒரு முறைகூட வாசிக்கத் தகுதியில்லாத சில நடிக நடிகையரின் முகநூல்/டிவிட்டர் பதிவுகளை மில்லியன் கணக்கில் நம் மக்கள் வாசிக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட இந்தப் பதிவை வாசித்தோர் எண்ணிக்கை வெறும் 59 மட்டுமே[சில பதிவுகள் சில ஆயிரங்களைக் கடந்ததும் உண்டு]. 

ஆயிரக்கணக்கில் வேண்டாம். மேலும் சில நூறு பேர்களாவது வாசிப்பார்களா என்னும் ஆசையில் மீள்பதிவாக வெளியிடுகிறேன். ஆசை... அது பேராசையல்ல; அற்ப ஆசை.

எதிர்பார்க்கும் எண்ணிக்கை அற்பமானது என்பதால் இது 'அற்ப' ஆசை. ஹி...ஹி...ஹி!!!

                                  *  *  *

ந்தத் தலைப்பு, “...வந்தது தெரியும்...போவது எங்கே...” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நினைவுடன் இந்தப் பதிவையும் படியுங்கள்.

தந்தையின் உடம்பிலிருந்து,  பல்லாயிரம் கோடி அணுக்களுள் ஒன்றாக வெளிப்பட்டு, கருப்பாதையில் நீந்தி[இடையில் செத்து மடியாமல்], தாயின் கருப்பையில் சினை முட்டையுடன் இணையும்வரை ‘தன்னை அறிதல்’[‘நான்’ என்னும்  உணர்வு] அந்த ஒற்றை உயிரணு[மரபணு?]வுக்கு வாய்த்திடவில்லை.

அந்த ஒற்றை அணு, இரட்டையாகி, பலவாகி, பல்லாயிரம் கோடி அணுக்களாகப் பரிணாமம் பெற்றுக் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்திலும்கூட, தன்னை அறிதல் சாத்தியப்படவில்லை.

குழந்தை முழு வடிவம் பெற்று, பிறந்து, மண்ணில் தவழ்ந்து, சில ஆண்டுகள் கழிந்தபிறகே சிந்திக்க முடிகிறது; தன்னைத்தான் அறிய இயலுகிறது; ‘நான்’ என்னும் உணர்வைப் பெற முடிகிறது.

அதுவரை ஒற்றை அணுவுக்கோ, அணுத்தொகுப்புக்கோ  ‘அறிதல்’ உணர்வு முற்றிலுமாய் இல்லை என்பது அறியற்பாலது. 

ஒரு காலக்கட்டத்தில் ‘நான்’ என்னும் உணர்வைப் பெறும் மனிதன் சாகும்வரை ‘நான்’என்னும் உணர்வை இழக்காமலேயே வாழ்கிறான். சாவின்போது அந்த ‘நான்’ஐ முற்றிலுமாய் இழக்கிறான். 

எனவே, செத்த பிறகு, உடம்பும் இல்லை; ‘நான்’ என்ற உணர்வும் இல்லை. மனித வாழ்க்கைக்கு நிரந்தரமாய் ஒரு முற்றுப்புள்ளி விழுகிறது. எஞ்சியிருப்பது அல்லது மிஞ்சியிருப்பது ஏதுமில்லை என்றாகிறது.

செத்த பின்னர்  இல்லாமல் போவதை,  இப்போது மட்டுமல்ல, சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் எப்போதுமே மனித குலம் விரும்பியதில்லை. அதன் விளைவாக, அந்த ‘நான்’க்கு, ‘ஆன்மா/ஆத்மா’ என்று ஏதேதோ பெயரிட்டு, உடம்பு அழிந்த பிறகும் அது அழிவதில்லை; அடுத்தடுத்து பிறவிகள் எடுத்தோ, சொர்க்கம்/நரகம் சேர்ந்தோ, இறைவனுடன் இரண்டறக் கலந்தோ வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று ‘அனுமானம்’ செய்வதில் வல்லவர்கள் நம்பினார்கள்; அந்த நம்பிக்கையைப் பிற மனித மனங்களிலும் ஆழமாய்ப் பதியவைத்துவிட்டார்கள்.

நம்முடைய இந்த உடம்பு உருவாக முதற்காரணமாக இருந்த அந்த ஒற்றை அணு[தந்தையிடமிருந்து வெளிப்பட்டுத் தாயின் கருப்பையில் நுழைந்தது]வும் சரி, அதனின்றும் பல்கிப் பெருகி நாம் தோன்றி வாழ்ந்திடக் காரணமான கோடானுகோடி அணுக்களும் சரி அழியும் தன்மை வாய்ந்தனவே[அழியும் அணுக்கள் என்னவாகும்? பஞ்சபூதப் பேரணுக்களுடன் இரண்டறக் கலக்கும் அல்லது ‘வெளி’யில் கரைந்துபோகும் என்று கொள்ளலாமா?]

எனவே,

இறப்புக்குப் பின்னர் நாம் இல்லாமல் போகிறோம் என்பதே எதார்த்தம். 

“இல்லையில்லை. அந்த ஒற்றை அணுதான் ஆன்மா, அது அழியாத் தன்மை வாய்ந்தது” என்று நம் முன்னோர் நம்பியிருக்கவும்கூடும். ஆனால், அது ஏற்கத்தக்கதல்ல. காரணம்.....

அந்த ஒற்றை அணு, கருமுட்டையில்  நுழைவது சாத்தியம் இல்லாமல் போயிருந்தால், அதனோடு கருப்பாதையில் பயணித்த பிற கோடானுகோடி அணுக்கள் அழிந்தொழிந்தது போல அதுவும் அப்போதே அழிந்து மறைந்திருக்கும். அது, இயல்பாகவே அழியும் தன்மை கொண்டதுதான்.

ஆக, உடம்பு அழிந்த பிறகு நாம் இல்லாமல் போகிறோம் என்னும் கருத்து உறுதிப்படுகிறது. 

விதிவிலக்காக, அணு வேறு, ஆன்மா வேறு. அது ஒற்றை அணு மீது சவாரி செய்து கரு முட்டைக்குள் நுழைந்தது என்றோ, குழந்தை உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஏதோவொரு நுழைவாயிலில் புகுந்து உடம்புடன் ஐக்கியமாகியது என்றோ, உடல் அழியும் போது ஏராள பாவபுண்ணியங்களைச் சுமந்து வெளியேறுகிறது என்றோ நம்புவது அறிவுடைமையல்ல என்பது எம் பணிவான கருத்து.

வருகைக்கு நன்றி!

==============================================================================


பின்னூட்டப் புலிகள்!!![இது, விமர்சனம் அல்ல; வெறும் 'பகிர்வு' மட்டுமே]

இன்று காலையில், ஆப்கானிஸ்தானில், 90க்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்புப் பற்றிய செய்தியை வாசித்தபோது, ஆப்கன் பெண்கள் தொடர்பான ஒரு செய்திக் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. அதனை அதற்கான பின்னூட்டங்களுடன் பதிவு செய்து பகிர்கிறேன்[மொழிப் பிழைகள் திருத்தப்படவில்லை].

மொழிப் பிழைகளை அலட்சியம் செய்கிறார்கள் எனினும், பதிவுகளுக்குக் 'கருத்துரை'[பின்னூட்டம்] வழங்கும் வாசகர்களுக்கு, அக்கருத்துரையை மனதில் பதியும் வகையில் வழங்கத் தெரிந்திருக்கிறது.

வாசித்து இன்புறுவதோ துன்புறுவதோ அவரவர் மனநிலை சார்ந்தது.

பெண்கள், தலிபான் தடை:[Updated : ஆக 26, 2021  20:44 |  Added : ஆக 26, 2021  17:51 |  கருத்துகள் (12)]

காபூல்: தலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, மற்றும் இசைக்கு தடை என்கிற இஸ்லாமிய பழமைவாத ஷரியத் சட்டம் அமலில் இருந்தது.

அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வந்தனர். 20 ஆண்டுகள் கழித்து தற்போது தலிபான் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போதைய மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உலக ஊடகங்கள் மத்தியில் எழுந்தது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பெண்களின் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

(பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள் பலர் மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்கு சென்று குடியேற விரும்புவது குறிப்பிடத்தக்கது.)

இசைக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் "இசைக்கு" தடை விதிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இசுலாம் மதத்தில் "இசை" என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

"பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் பெண்கள் ஒரு ஆண் துணையுடன் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் இசாப்(Hijab) அணிவது கட்டாயம்" என தாலிபான் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

 வாசகர் கருத்து (12)[மொழிப் பிழைகள் திருத்தப்படவில்லை]

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

27-ஆக-202106:05:32 IST Report Abuse

Kasimani Baskaranஇதில் நல்ல தலிபான்கள், கெட்ட தலிபான்கள் என்று பல பிரிவுகள்வேறு உண்டாம்... பிறகு எப்படி வெளங்கும்?

Meenakshisundaram - Bangalore,இந்தியா

27-ஆக-202105:04:53 IST Report Abuse

meenakshisundaramமுதலில் பெண்கள் 'உடலுறவு 'கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டம்(?) போடலாம் ,அப்பத்தான் தலிபான்கள் கொஞ்சம் கொஞ்சமா அழிவார்கள் செய்வார்களா அல்லது அதற்கு மட்டும் வேண்டும் என்பார்களா ?

R S BALA - CHENNAI,இந்தியா

27-ஆக-202105:03:51 IST Report Abuse

R S BALAஇசைக்கு தடையா.. அட இறைவனே இசைக்கு மயங்குகிறவர்தானே.. பசியின்றி கூட வாழலாம் இசையின்றி..எவ்வாறோ?

M Ramachandran - Chennai,இந்தியா

27-ஆக-202104:24:56 IST Report Abuse

M  Ramachandranபெண்களை போக பொருளாக மட்டுமே பார்க்கும் இந்த ஐ எஸ் ஐ மற்றும் இந்த தாலிபான் போனற இயக்கத்திற்கு மட்டும் பெண்கள் ஆதரிக்க கூடடாது. அது ஏன் ஒரு மதத்தில் மட்டும் இந்த எண்ணம் உள்ளவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தாய் கூட பிறந்த சகோதரிகள் இருந்தும் இந்த தீய என்னம் ஏன் ஏற்படுகிறது. புரியாத புதிர்.

ஆரூர் ரங் -  ( Posted via: Dinamalar Android App )

26-ஆக-202120:12:02 IST Report Abuse

ஆரூர் ரங்உலகெங்கும் விவசாய உழைப்பில் பெண்களின் பங்கு மிக அதிகம். 🤔 அவர்களை வெளியேற்றினால் வேளாண்மை அழியும்

கௌடில்யன் - Chennai ,இந்தியா27-ஆக-202105:34:16 IST Report Abuse

கௌடில்யன்ஆப்கனிஸ்தானில் விவசாயம் என்றாலே பெரும்பாலும் அபின் போன்ற போதை சரக்குகள் தான் .......

Ramesh Sargam - Bangalore,இந்தியா

26-ஆக-202119:57:36 IST Report Abuse

Ramesh Sargamஇந்த தலிபான் ஆண்கள், அவர்களும் ஒரு வேலைக்கு போகமாட்டார்கள். எப்பொழுதும் துப்பாக்கி வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்தி காலத்தை ஓட்டுவார்கள். பெண்களையும் படிக்க வேண்டாம், வேலைக்கு போகவேண்டாம் என்று சட்டம் போடுவார்கள். ஆனால், பெண்கள் உடலுறவு கொள்ளமட்டும் வேண்டும் இந்த தாடி கார பசங்களுக்கு...

Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

26-ஆக-202119:47:22 IST Report Abuse

Janarthanan பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்- பிள்ளை பெத்து போடுகிற உரிமை/ தலிபான் கூப்பிட்டால் உடனே அவர்களுடன் போகும் உரிமை மட்டுமே கொடுக்க படும் .... இதை தான் பெண் சுகந்திரமாக கருதுகிறது இங்குள்ள சிசிக்குலர் லாபி கூட்டம் ?????

S. Bharani - Singapore,சிங்கப்பூர்

26-ஆக-202119:00:48 IST Report Abuse

S. Bharaniஆரம்பிச்சுட்டாங்கையா.... ஆரம்பிச்சுட்டாங்க.....

Ram - Ottawa,கனடா

26-ஆக-202118:52:09 IST Report Abuse

Ramகுல்ல காரனை ஆட்சி செய்ய விட்டா இப்படித்தான் ஆகும் , நம்ம கழகங்கள் அவர்கள் பின்னால் செல்வதை தவிர்க்கவேண்டும் ... இந்தியாவிலும் இன்னும் புர்கா போட்டு சுற்றுபவர்களை பார்க்கும்போது இன்னும் எவ்வளவு பழமை வாதிகளாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது

தமிழன் - Madurai,இந்தியா

26-ஆக-202118:22:37 IST Report Abuse

தமிழன்Fascinating Photos Of Afghanistan In The 1960s And 1970s என்ற வீடியோ youtube-ல் பிரபலமடைந்து வருகிறது.

====================================================================================

நன்றி: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831045

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

விந்தணுவின் 'எண்ணிக்கை' குறைவதைத் தடுப்பது எப்படி?


ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துகொண்டே சென்றால்மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏறத்தாழ 200 ஆய்வுகளின் முடிவுகளுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

விந்தணுக்களின் உற்பத்தி குறைவதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

*ஆடவர்களின் உள்ளாடை மிக இறுக்கமாக இருந்தால், விதைகளில் அதிக வெப்பம் பரவும்; விந்தணு உற்பத்தி குறையும்.

*மொபைலைக் கால்சட்டைப் பையில் வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும்.

*மன அழுத்தத்திற்கு இடம் தருதல் கூடாது. தீராத கவலைகளில் மூழ்கிக் கிடப்பது தொடர்ந்தால், பாலுணர்வில் ஆர்வம் குறையும். அது ஆடவனின் ஆண்மைத்தன்மையை வெகுவாகக் குறைக்கும். 

*குடிப்பழக்கம் டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். அது குறைவதால் விந்தணு உற்பத்தியும் குறையும். 

*புகைப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம். தொடர்ந்து புகை பிடிப்பது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

*அதிகச் சூடான வெந்நீரில் தொடர்ந்து குளிப்பதும் மேற்கண்ட பாதிப்புக்குத் துணைபோகும். தேவைப்பட்டால் மிதமான சுடுநீரில் குளிக்கலாம்.

*எண்ணையில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்குச் சிப்ஸ் போன்றவற்றை  மிகுதியாக உண்பதும் விந்தணு குறைவதற்குக் காரணமாக அமையும்.

*கணினியை அதிக நேரம் தொடைகளின் மீது வைத்துப் பயன்படுத்துவதும் விந்தணு உருவாவதைத் தடுக்கும்.

ஆக,

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் விந்து உற்பத்திக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். விந்துவின் வீரியத்தை அதிகரிப்பதற்கான உணவுகளைத் தேர்வு செய்து உண்பதும் முக்கியம்.

அதிக நேரச் சுகபோகத்துக்காகச் சிட்டுக்குருவி லேகியம், தங்கப்பஸ்பம், நைட்பில்ஸ், வயாகரா, நயாகரா, ரப்பர்பேண்ட், ஆயின்மெண்ட் போன்றவற்றின் தயவை நாடுவதெல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்தது! ஹி...ஹி...ஹி!!

====================================================================================

உதவி: இணையம்

புதன், 25 ஆகஸ்ட், 2021

மனிதன் கடவுளின் செல்லப்பிள்ளையா?!?!


இந்த மண்ணுலகம் தோன்றி, சுமார் 1 பில்லியன்[100 கோடி] ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோற்றம் பெற்றதாக அறிவியலறிஞர்கள் சொல்கிறார்கள். 

மனித இனம் எப்போது தோன்றியது?

மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வால் இல்லாத மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்று அறிவியல் துறை கணித்திருக்கிறது.

  • சுமார் 4 மில்லியன்[40 லட்சம்] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சான்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது[விக்கிப்பீடியா].

மனிதனும் ஆறறிவும்:

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது['இந்து தமிழ்'].

கடவுள் நம்பிக்கை:

'3000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்க்கையில் இந்தக் கடவுள் நம்பிக்கைகள் புகுத்தப்பட்டன' என்பது கடவுள் வழிபாடு குறித்த ஆய்வாளர்களில் ஒருசாரார் கணிப்பு.

கடவுள் நம்பிக்கை உருவான காலக்கட்டம் எது என்பது மிகத் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. 

மேற்குறிப்பிடப்பட்டவை குறித்த கணிப்புகள் எவ்வாறிருப்பினும்..... 

கடவுள் இருக்கிறார் என்பதைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு தலைப்புக்குச் செல்வோம்.

                               *  *  *

னிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களையும் தோற்றுவித்தவர் கடவுளே என்று காலங்காலமாக ஆன்மிகவாதிகள் வலியுறுத்திவருவது நாம் அறிந்ததே.

படைப்பாளன் என்ற வகையில், தம்மால் படைக்கப்பட்ட உயிர்களைப் பாதுகாத்து, மகிழ்வுடன் வாழச் செய்வது கடவுளின் கடமை. ஆனால், உயிர்கள் விசயத்தில் நடந்தது என்ன?

உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டு 100 கோடி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்.....

ஒவோர் உயிரும், பிற உயிர்களை வதை செய்து கொன்று, தனக்கு உணவாக்கிக்கொள்வதைத் தொடர்ந்து அனுமதித்திருக்கிறார் கடவுள்.

இயற்கைச் சீற்றங்களுக்கு உயிர்கள் பலியாகும் கொடூர நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவில்லை அவர்.

பருவ மாறுதல்களின்போது உண்ண உணவின்றிப் பல்வேறு உயிர்களும் பட்டினி கிடந்து மடிந்துபோகும் பரிதாப நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

உயிர்களைத் தாக்கித் துன்புறுத்தி, அவை வதைபட்டுச் சாவதற்குக் காரணமான, விதம் விதமான நோய்கள் உருவாவதையும் கண்டுகொள்ளவில்லை.

ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் துன்புற்று வாழ்ந்து மடிவதைக் கருணைக் கடல் என்று சொல்லப்படுகிற கடவுள் வேடிக்கை பார்த்திருக்கிறார்; செயலற்று முடங்கிக் கிடந்திருக்கிறார்.

100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கோடி கோடி கோடியோ கோடிக்கணக்கான உயிரினங்களைக் காப்பாற்றத் தவறிய கடவுள், கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளமடித்துத் துதிபாடினால், வெறும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப்பட்ட மனித இனத்தைக் காப்பாற்றுவார் என்று பேதை மனிதர்கள் நம்புகிறார்களே?

இவர்களென்ன கடவுளின் செல்லப்பிள்ளைகளா?!?!

====================================================================================


செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மன்மத மரபணுக்கள்!!!


‘தாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக ஜீன்கள் நடத்தும் தொடர் போராட்டங்களின் விளைவுதான் பரிணாம வளர்ச்சி’ என்பது ‘ரிச்சர்ட் டாக்கின்ஸ்’ என்னும் விஞ்ஞானி  முன்வைக்கும் புதிய சித்தாந்தம் ஆகும்.

இவருடைய சித்தாந்தத்தின்படி.....

‘நமக்காக ஜீன்கள்[மரபணுக்கள்] இல்லை; ஜீன்களுக்காகத்தான் நாம்.  ஜீன்கள் சுயநலம் மிக்கவை. அவை தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்கின்றன. தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அவை நம்மை வாகனங்களாகப் பயன்படுத்துகின்றன. நாமெல்லாம் ஜீன்களைச் சுமந்து திரியும் வெறும் சுமைதாங்கிகளே!’

நம் நாடிநரம்புகளில் காம இச்சையைத் தூண்டி, ஆணும் பெண்ணுமாய்க் கலவியில் ஈடுபடத் தூண்டுவதே இந்தப் பொல்லாத ஜீன்கள்தானாம்!

நாளும் நம்மை விரகதாபத்துடன் அலையவிட்டுப் புணர்ச்சியில் ஈடுபடுத்தி நம் இனத்தை விருத்தி செய்வதன் மூலம் தம்மை அழியாமல் காத்துக்கொள்கின்றனவாம் அனைத்திற்கும் மூலமான ஜீன்கள் என்னும் இந்த மரபணுக்கள்.

நாம் நம் தாத்தா பாட்டி, தாய் தந்தை, சகோதர சகோதரிகள், ரத்தப் பந்தங்கள் என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிந்து தள்ளுகிறோமே, அந்தப் பாசப்பொழிவுக்கு மூல காரணமே இந்த ஜீன்கள்தானாம்.

ஆக, நாம் அன்பு, பாசம், நேசம், காதல், கத்தரிக்காய், பணம், பதவி என்று எது எதற்கெல்லாமோ போராடி, அல்லலுற்று அரற்றித் திரிவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் ‘அந்தக் கள்வன் யார்?’ என்று ஒரு பதிவில்[கலியுகக் கவிஞனும் ஒரு கள்வனும்! http://kadavulinkadavul.blogspot.com/2017/06/blog-post_6.html] கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. அந்தத் கள்வன்...அல்ல, கள்வர்கள்.....

ஜீன்கள்...ஜீன்களே!


====================================================================================
[இது, புதுப்பிக்கப்பட்டதொரு மீள்பதிவு]

நன்றி: ‘ஜீன் ஆச்சரியம்’, விகடன் பிரசுரம்; முதல் பதிப்பு: மே, 2016.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

'குமுதம்' இதழுக்கு 'மகா பெரியவா' மீது என்ன கோபம்?!?!


மறைந்த, 'மகா பெரியவா' என்று சொல்லப்படும் 'சந்திர சேகரேந்திர சுவாமியை மையப்படுத்தி, குமுதம் இதழ் தொடர்ந்து கற்பனை நிகழ்வுகளை வெளியிட்டுவருகிறது.

அவரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து அது வெளியிடும் கட்டுரைகள், அவரை எந்த அளவுக்குச் சிறுமைப்படுத்துகின்றன என்பதைக் குமுதம் அறியமலிருப்பது ஏன் என்று புரியவில்லை.

25.08.2021 இதழில் வெளியாகியிருக்கும் பெரியவா தொடர்பான கட்டுரையின் தலைப்பு, 'மகா பெரியவா தந்த மட்டைத் தேங்காய்' ஆகும்.

மகப்பேறு இல்லாத ஒரு பெண்ணிடம், "இந்தா இதை மடியில் வாங்கிக்கோ"ன்னு  மட்டை உரிக்காத இரண்டு தேங்காய்களைக் கொடுத்தார் பெரியவா. அந்தப் பெண்ணும் அவ்வாறே செய்தாள்; கருவுற்றாள்[இரண்டு தேங்காய் என்பதால், ஓர் ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனவாம்].

"இது உண்மை நிகழ்வென்றால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு,  பிள்ளைப் பேறு இல்லாத அத்தனைப் பெண்களும் பெரியவாவைத் தரிசித்து[பெரியவா உயிரோடு இருந்தவரை]க் குழந்தை பெற்றிருக்கலாம். மருத்துவச் செலவு மீதியாகியிருக்கும்.

இந்த நிகழ்வுக்கு முன்பே, 'சாத்தனூர்' என்னும் அந்தப் பெண்ணின் ஊருக்குச் சென்று அவர் முகாமிட்டிருந்தபோது, அவர் வருகைபுரிந்த சமயத்தில் மாதவிலக்கு நின்றுபோனதால், தன் வயிற்றில் கரு தங்கியிருப்பதாக அந்தப் பெண் நம்பினாராம். கதாசிரியரின் இந்தக் கற்பனை எத்தனை அபத்தமானது என்பது சிறிது சிந்தித்தாலே புரியும்.

இப்படி நடப்பது சாத்தியம் என்றால்.....

பெரியவா முகாமிட்ட ஊர்களில் எல்லாம் குழந்தை இல்லாத பெண்கள் கருவுறும் அதிசயம் நிகழ்ந்திருக்கும் அல்லவா?

கிஞ்சித்தும் சிந்திக்கத் தெரியாதவர்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்பார்களே!

குமுதம், தனிச்சுற்றுக்கு மட்டுமேயான ஓர் இதழ் அல்ல; பொது மக்களுக்கானது. இதில் வெளியாகும் இம்மாதிரியான கதைகள் மக்களின், குறிப்பாக, பெரியவா பக்தர்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிக்கக்கூடியவை என்பதால், இந்தக் கதை குறித்த விமர்சனத்தை அடியேன் எழுதிட நேர்ந்தது.

பெரியவாவைப் பெருமைப் படுத்துவதாக நம்பிக்கொண்டு, அவரைச் சிறுமைப்படுத்தும் இம்மாதிரிக் கதைகளை இனிமேல் குமுதம் வெளியிடாது என்று நம்புவோம்.

====================================================================================


சனி, 21 ஆகஸ்ட், 2021

நடுவணரசின் ஓரவஞ்சனை!!!


'7 ஆண்டுகளாக 'வார்ஸா'[போலந்து] பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைகளுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை' என்பது செய்தி.

'வார்ஸா'வில் 4 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து அவர்கள் இது குறித்துக் கூறும்போது,2013இல் கடைசியாகக் கோயம்புத்தூரிலிருந்து சென்ற மொழியியல் துறைப் பேராசிரியர் ஏதோ சில காரணங்களால் வெறும் 6 மாதங்களில் இந்தியா திரும்பினார். மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் 'ஐசிசிஆர்' அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் 1970ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய அரசு சார்பிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஐசிசிஆர் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் பேராசிரியருக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்.

வெளிநாடுகளின் 69 கல்வி நிறுவனங்களில் இந்திய இருக்கைகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக இந்திக்கு 25-க்கும் மேற்பட்ட இருக்கைகளும், இதையடுத்து, சம்ஸ்கிருதத்துக்கும் உள்ளன. தமிழுக்கு வெறும் 2 இருக்கைகள் மட்டுமே போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாக வார்ஸா நகரின் வார்ஸா பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் துறையில் 47 வருடங்களாகத் தமிழ் இருக்கை உள்ளது. இதன் அருகிலுள்ள 'கிராக்கூப்' நகரின் 'கிராக்கூப்யாகி எலோனியன்' பல்கலைக் கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது.

2015, டிசம்பர் 15இல் கேரளா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பி.ஜெயகிருஷ்ணன் தேர்வாகியும் அவரை ஐசிசிஆர் ஏனோ அனுப்பவில்லை. இவ்வாறு 7 ஆண்டுகளாக வார்ஸா தமிழ் இருக்கைகள் காலியாக இருப்பதற்கு மத்திய அரசு தமிழுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையே காட்டுகிறதுஎன்றார்.

"தொடக்கக் காலங்களில் இங்குப் பணியாற்றும் பேராசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இதில், அவரது குடும்பத்தினருக்கும் தங்குமிடம், உணவு வசதி போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. அடுத்து, அப்பணிக்காலம் ஓராண்டாகக் குறைக்கப்பட்டு, தற்போது இது வெறும் 9 மாதங்களுக்கு மட்டும் என மாற்றப்பட்டது.

'கிராக்கூப்' தமிழ் இருக்கைக்குத் தனிப் பேராசிரியரை அனுப்பாமல் வார்ஸா செல்பவரையே 4 மணி நேரம் பயணம் செய்து வகுப்பு எடுக்கவைத்த நிலையும் தொடங்கியது. இதுபோன்ற பிரச்சினை, இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்றப் பாடப்பிரிவுகளில் இல்லை. இதனால் அங்குப் பணியாற்றத் தமிழ்ப் பேராசிரியர்கள் இடையே நிலவிய ஆர்வம் குறைந்தது. எனவே, அதிகப் பணிக் காலத்துடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்பது தமிழ்ப் பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது" -பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து.

இச்சூழலில், போலந்தின் 2 தமிழ் இருக்கைகளுக்கும் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பை 'ஐசிசிஆர்' தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் அயல்பணியில் இங்கு பணியாற்ற விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது. 

[விண்ணப்பங்கள் வருமா? உரிய முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு, பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா? குடும்பத்துடன் அவர்கள் அங்குப் பணியாற்ற உரிய வசதிகள் செய்யப்படுமா? இவை விடை தெரியாத கேள்விகள்]

                                           *  *  *

மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து அப்பட்டமாக அறியப்படுகிற உண்மை.....

இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தொழிந்து மறைந்திட, இந்தியும் சமஸ்கிருதமும் செழித்து வளர்ந்திட வேண்டும் என்பதே நடுவணரசின் உள்நோக்கம்.

'தாய்த்தமிழ்', 'தமிழினம்' என்று பேசினாலோ, எழுதினாலோ 'இவன் பிரிவினைவாதி' என்று முத்திரை குத்தி வாய்ப்பூட்டுப் போட முயலும் தமிழ்நாட்டுப் பாஜக தேசபக்தர்கள் இது குறித்துக் கருத்துச் சொல்வார்களா? நடுவணரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து அறிக்கை விடுவார்களா? போராடுவார்களா?

செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். ஏனென்றால், இவர்கள் எல்லாம் இந்திய நாட்டைச் சேர்ந்த தமிழர்களே என்பது நம் நம்பிக்கை!

============================================================================

நன்றி: பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து & 'இந்து தமிழ்'

https://www.hindutamil.in/news/india/651770-poland-1.html    சனி, ஆகஸ்ட் 21 2021


வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

அதிமதுர மரணம்!!!

வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனைத் துன்பமானதா?

இல்லை... இல்லவே இல்லை.

முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத் தழுவுகிற அந்தக்கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.

அந்த அனுபவம் சுகமானது.

உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத் தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.

'உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில் புதிய அணுக்கள் உருவாக, அல்லது பழையவை புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப் படுகிறது.'

உறக்கத்தில் ஆழ்ந்திடும்போது எவ்வகையான வலியையோ வேதனையையோ நாம் உணர்வதில்லை. இது தற்காலிக மரணம்.

அணுக்களைப் புதுப்பித்துக்கொள்ளும் அல்லது புதியனவற்றை உருவாக்கும் ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும் நிலையில் எய்துவது மரணம். இது நிரந்தரமான உறக்கம்.

[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும் திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச் சிந்திக்க நேர்ந்தால் இதை ஆராயலாம்]

தற்காலிக மரணத்தின்போதோ, நிரந்தர மரணத்தின்போதோ உடல் எந்தவொரு வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை என உறுதிபடச் சொல்லலாம்.

அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே, அதெல்லாம் வெறும் கற்பனைதானா?

ஆம்.

ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்போது, அந்த நோயால் உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை என்று தவறாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறோம்.

விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு, அதனால் விளையும் வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது ஆக ஆக வலிமை குன்றிவருகின்றன; செயலாற்றும் திறனை இழக்கின்றன.

இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்துவருகிறது.

சிந்திக்கும் திறன் பெருமளவில் குறைவதால்.....

கடந்த காலங்களில் அனுபவித்த சுகபோகங்களையோ, அன்புக்கும் பாசத்திற்கும் உரிய உறவுகளின் பிரிவையோ நினைத்துத் துயருறுவதும் வெகுவாகக் குறைகிறது.

எனவே, இயல்பான மரணத்தை நாம் தழுவும் அந்தக் கணங்களில் துன்பத்திற்கு உள்ளாவதில்லை என்று உறுதியாக நம்பலாம்.

முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச் சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுயநினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது. அம்மாதிரியான சூழலிலும், உடலளவிலோ, மனத்தளவிலோ துயருறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று சொல்லலாம். ஆக.....

இயற்கையாக நிகழும் ஒரு மரணம் துன்பம் பயப்பதல்ல என்பது உண்மை.

வயது அதிகரித்துவரும் நிலையில், 'சாகப்போகிறோம். இவ்வுலக வாழ்வையும், இங்குள்ள சுகபோகங்களையும் முற்றிலுமாய் இழக்கப்போகிறோம். செத்த பிறகு என்ன ஆவோம்' என்பன போன்ற சிந்தனைகளால்தான் பெரும் துன்பங்களுக்கு ஆளாகிறோம். மரணத்தைத் தழுவுவதால் அல்ல... அல்லவே அல்ல!
====================================================================================

மிக முக்கியக் குறிப்பு:
இளம் வயதிலிருந்தே அவ்வப்போது மரணத்தை நினைத்து மனம் கலங்கும் வழக்கம் என் குருதியில் இரண்டறக் கலந்த ஒன்றாக இருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இக்கலக்கம் சற்றே அதிகரித்தது. இதன்விளைவாக, என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்ள எழுதியது இப்பதிவு.

எனவே, இங்கு இடம்பெற்றுள்ள கருத்துகளின் நம்பகத்தன்மை குறித்து எவ்வகையிலும் உறுதியளிக்க இயலாது என்பதை மிக்கப் பணிவுடன் தெரிவிக்கிறேன்.

ஹி...ஹி...ஹி!!!
====================================================================================

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

சிலிர்ப்பூட்டும் 'சீரடி'க் கடவுள்!!!

[!!!!!!!!!!]

சாந்த் பட்டேல் என்பவர் ஒரு முறை காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த சீரடி சாய்பாபாவைக் கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படிக் கூறினார். அவரும் சம்மதித்தார். இருவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார்கள்.

இருவரும் புகைபிடிக்க விரும்பினார்கள். நெருப்பு தேவையாக இருந்தது.

!!!பாபா, தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது. இருவரும் புகை பிடித்தார்கள்.

"தாகமாக இருக்கிறது" என்றார் பட்டேல்.

!!!பாபா, தன் கைத்தடியால் பூமியின் மீது ஓங்கி அடித்தார். தண்ணீர் பீறிட்டது. தாகம் தணிந்தார் பட்டேல்.

!!!பட்டேலின் வேண்டுகோளின்படி, காணாமல் போயிருந்த பட்டேலின் குதிரை இருக்குமிடத்தைப் பாபா கூறினார். பெருமகிழ்ச்சிக்கு உள்ளானார் பட்டேல்.

பாபாவின் மகிமையை அறிந்த பட்டேல் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, சில நாட்கள் தங்கவைத்து உபசரித்தார்.....

!!!.....ஒருமுறை பாபா, ஒரு மசூதிக்கு அருகிருந்த  ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். மரத்து இலைகளின் கசப்புச் சுவை இனிப்பாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது.

!!!!!இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், "நீங்கள் யார்?" என்று கேட்க, "நானே அல்லா. நானே சங்கரன். நானே ஸ்ரீகிருஷ்ணன். நானே அனுமன்" என்றார். மக்கள் அவரைத் தொழுது கழிபேருவகை எய்தினார்கள்.

ஒருநாள், ஒரு பசுமாட்டுக்காரனிடம், "கொஞ்சம் பால கறந்து தா" என்றார்.

அவன், "இது மலட்டுப்பசு. பால் தராது" என்றான்.

!!!அதைப் பொருட்படுத்தாத பாபா, பசுவின் மடியில் கை வைத்துத் தடவிக் கொடுத்தார். பால் சுரக்க ஆரம்பித்தது.

!!!பிறிதொரு முறை, இறந்து கிடந்த ஒருவன் மீது, தன் குருவின் காலடிபட்ட மண்ணை அள்ளித் தூவினார். செத்தவன் உயிர்பெற்று எழுந்தான்.

!!!இவர் சீரடியில் இருந்தபோது, தான் தங்கியிருந்த துவாரகாமாயி என்னும் மசூதியில் தினமும் விளக்கேற்றுவார். இதற்கான எண்ணையை இரு வியாபாரிகள் கொடுத்துவந்தார்கள். பாபாவின் சக்தியைச் சோதிக்க நினைத்த அவர்கள் ஒரு நாள் எண்ணை தரவில்லை. பாபா, தண்ணீரை ஊற்றி விளக்கெரித்தார்.

!!!பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும், அத்தனை பேரும் உண்ணும் வகையில், இருக்கிற கொஞ்சம் உணவையே பல மடங்காகப் பெருகச் செய்வார் அவர்.

இப்படி, எண்ணிலடங்காத அற்புதங்களை நிகழ்த்தியதாக இந்தச் சாயிபாபாவைப் பற்றி ஊடகங்கள் நிறையவே எழுதின; எழுதிக்கொண்டிருக்கின்றன.  

சீரடி சாயிபாபா, 1918ஆம் ஆண்டு இறந்தார். இன்றளவும், உலகெங்கிலுமிருந்து  பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் சீரடிக் கோயிலுக்கு வந்துசெல்கிறார்கள்.

                                             *  *  *

மனிதராகப் பிறந்த எல்லோருமே மனிதர்கள்தான். மகான்கள், அவதாரங்கள் என்று எவரும் இயல்பாக உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்டவர்களில் இந்தச் சீரடி சாய்பாபாவும் ஒருவர்.

இவருடைய உண்மையான தொடக்ககால வாழ்க்கை வரலாறு எவருக்கும் தெரியாது.

மேற்குறிப்பிடப்பட்ட பட்டேல் என்னும் நபர், இவரை அதிசய மனிதர் என்று சொல்லிவைக்க, ஆளாளுக்குக் கற்பனைக் கதைகள் கட்டி, இவரை மகானாக மட்டுமல்லாமல் கடவுளாகவும் ஆக்கிவிட்டார்கள்.

கத்தியால் நிலத்தைத் தோண்டி நெருப்பைக் கண்டறிவது, தடியால் தரையைத் தட்டி நீரை வரவழைப்பது, செத்தவரைப் பிழைக்க வைப்பது என்றிவை போன்றவையெல்லாம்  நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை அறியும் பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதற்கு, ஊரூருக்குப் பாபா கோயில்கள் உருவாகியிருப்பதே சான்றாகும்.

நம் முன்னோர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம். அவர்களையெல்லாம்விடவும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடிய கில்லாடிக் கடவுள்கள் நம்மவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். தேவையைத் தமக்குத்தாமே நிறைவு செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

காலப்போக்கில் இன்னும் பல மாயாஜாலக் கடவுள்கள் இங்கே உருவாக்கப்படுவார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

====================================================================================

உதவி: செய்தி ஊடகங்கள்.


புதன், 18 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான் ஆண்கள் இத்தனை கோழைகளா?!?!

#காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய பிறகு, அங்கே கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. ஆப்கான் நாட்டவர்கள், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே[அரிதாக ஓரிரு பெண் குழந்தைகள் தென்படுகிறார்கள்] காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில்(Afghanistan) நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆப்கான் மக்களின் வலியைக் கூறியுள்ளார். உலகம் ஆப்கானிஸ்தான் மக்களை பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறும் அவர், சில நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்துள்ளனர் என மிகவும் வருந்தி அழுவது மனதை உருக்குவதாக உள்ளது.

"We do not count because we were born in Afghanistan . . . We’ll die slowly in history.” I am heartbroken. The women & girls of Afghanistan have been abandoned. What of their dreams, hopes? The rights they have fought two decades for? #PrayforAfghanistan pic.twitter.com/Os6aSRv5RK"


காணொலி:

https://zeenews.india.com/tamil/social/watch-viral-video-of-a-afghanistan-girl-crying-that-nobody-cares-for-afghan-people-368630

                                                     *  *  *

ப்கானிஸ்தானில், ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டுப் பெண்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கும் வேளையில், முதல் பெண் மேயர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். 

https://www.puthiyathalaimurai.com/newsview/113179/Afghanistan-s-first-female-mayor-said-she-is-Waiting-for-Taliban 

                                                    *  *  *

90-களில் தாலிபான் ஆட்சி இருந்தபோது அனுபவித்த கொடுமைகளை ஆப்கானிஸ்தான் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் தாலிபான் கைகளில் முழுமையாக அதிகாரம் செல்வதற்கு முன்பு அவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். 

காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது. இது, பேருந்தில் தொங்கிக்கொண்டு மக்கள்  பயணிப்பது போன்றது. பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்தக் காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.

விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.


*  *  *

மேற்கண்ட செய்திகளில் நம் மனதை உறுத்திய/வருத்திய பகுதிகள் கீழ்க்காண்பவை.

//நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.//

//பெண் மேயரின் கண்ணீர்!//

!!!விமானம் ஏறித் தப்பியோடும் ஆண்மகன்கள் எல்லோருமே பெண்களுக்குப் பிறந்தவர்கள்தான்.

உடன்பிறப்புகள் இருந்தால் அவர்களில் பெண்களும் இருக்கக்கூடும்.

அவர்களையெல்லாம் தவிக்கவிட்டு, தாம் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடுகிற இவர்களுக்குத் தங்களின் உயிர் மீது[மட்டும்] அத்தனை ஆசையா? அன்பு, பாசம், பற்று என்பவையெல்லாம் இவர்களுக்கு என்னவென்றே தெரியாதா?

உலகில் அதிசய நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளதாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால், இது வெறும் அதிசயம் அல்ல; பேரதிசயம்!!!
====================================================================================

https://zeenews.india.com/tamil/world/afghanistan-updates-inside-picture-of-the-american-plane-from-which-people-fell-goes-viral-368626

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

38,50,00,000 ஆண்டுகளுக்கு முன்பே உடலுறவின் மூலம் இனவிருத்தி செய்த உயிரினம்!!!

'உலக உயிரினங்களில் முதன் முதலில் உடலுறவு கொண்டு இனவிருத்தி செய்தவை மீன்களே' -என்று சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளது சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று.

இதன் மூலம் உயிரினப் பாலுறவின் தொடக்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி உலகோரைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள் அவர்கள். 

38 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ''மைக்ரோபிரக்கியஸ் டிக்கி'' என்னும் வகையிலான மீன்களே, முட்டை போடுவதற்குப் பதிலாக முதன் முதலில் பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்தன என்பது   அவர்களின் கண்டுபிடிப்பு.

இந்த வகை மீன்களில் ஆண் மீன்களில் காணப்படும் ''L'' போன்ற ஒரு பிற்சேர்க்கை, பெண் மீனின் பின்பகுதியில் எலும்பு போன்ற ஒரு அமைப்புடன் இணைவதன் மூலம் உடலுறவு நிகழ்கிறது.

ஆனால், பின்னர் மீண்டும் முட்டை போடும் முறைக்கே[மீன்கள் முட்டையிட்டு, படிநிலைகளில் குஞ்சுகளைப் பெறுபவை. இவற்றில் ஒரு பாலினக் கருவுறல் உடலினுள்ளோ அல்லது வெளிப்புறத்திலோ நிகழலாம்] அந்த மீன் இனம் மாறிவிட்டதாம்.

[ஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன்கள் சுரக்கின்றன. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடுகிற அதே நேரத்தில் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன.]

50 லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் சுறா போன்றவற்றிற்கு மீண்டும் உடலுறவு மூலம் இனப்பெருக்கம் செய்யும் தன்மை வந்துவிட்டது என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

====================================================================================

https://www.bbc.com/tamil/science/2014/10/141020_fishsex


திங்கள், 16 ஆகஸ்ட், 2021

'மனநோய் மரணங்கள்'... தமிழ்நாடு முதலிடம்!


ன அழுத்த நோய் என்பது இந்தியாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது என்கிறது ஆய்வு நடத்திய 'தி லான்செட் சைக்கியாட்' என்னும் அமைப்பு. இது 1990 முதல் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்திய மக்கள், இயலாமை, தாழ்வு மனப்பான்மை, சோர்வு, எதிலும் நாட்டமின்மை போன்ற மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,  அதற்கு மிக முக்கியக் காரணம் மன அழுத்தம்தான் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு லட்சம் மக்களில் குறைந்தது 836 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படிருப்பதாக இது தெரிவித்துள்ளது.

இந்த மன அழுத்தம்தான் இந்தியாவில் ஏராளமான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள முக்கியக் காரணம் என்பதை உறுதிப்படுத்துகிறார் மனநல மருத்துவர் ஆர்.தாரா.

'தமிழ்நாட்டு மக்களுக்கும் மனப் பதற்றம் தொடர்பான நோய் அதிகரித்துக் காணப்படுகிறது. இப்படி வளரும் மாநிலங்களின் பாட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டில் மன அழுத்தம் காரணமாக 1,00,000 பேரில் 325 பேர்[ஒட்டுமொத்த இந்தியா 836] மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது மேற்கண்ட ஆய்வு முடிவு. அதுமட்டுமன்றி இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) மற்றும் மனச்சிதைவு நோயாலும் தமிழக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அளவானது 1990 முதல் 2017 வரை ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம். 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4.3 சதவீதம் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

ஒட்டு மொத்த இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மனநல நோயால் பதிக்கப்பட்டுள்ளனர். அதில் மன அழுத்தம், மனப்பதட்டம், மனச் சோர்வு, மனச் சிதைவு ஆகியவையும் அடக்கம். இதில் மன அழுத்தத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

மன நோயைச் சரி செய்யத் தமிழக அரசு தனியார் மையங்களோடு இணைந்து மக்களுக்கு மனநல ஆலோசனைகளை அளித்து வருகிறது. இருப்பினும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரித்து  இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்; விழிப்புணர்வு அளிக்க வேண்டும்; மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த ஆய்வு முன் வைத்துள்ளது.

                                                     *  *  *

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மூன்றும் கணிசமான அளவில்  பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைப் பெற்றிருக்கும் மாநிலங்கள் என்று சொல்லப்படுபவை[வெப்டூனியா]. இருந்தும், இங்கு மனநோய் மரணங்கள் பெருமளவில் இருப்பது ஏன்? இவர்களில் போலிகள் அதிகமோ?!

'இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளமாநிலம் தமிழ்நாடாகும்[விக்கிப்பீடியா]. இருந்து என்ன பயன்? எந்தவொரு சாமியும் பக்தர்களின் மனநோயைக் கண்டுகொள்ளவில்லையே!! ஹி...ஹி...ஹி!!!

============================================================================================

https://tamil.news18.com/amp/news/lifestyle/health-tamil-nadu-tops-in-depressive-disorders-finds-study-esr-240677.html


ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

ஆபாசக் 'காணொலி'களால் அவதிப்படும் பெண்கள்!!!

"மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின்போது பெண்ணை அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா? எப்போதாவது அது விருப்பம் இல்லாமல் நடந்திருக்கிறதா?"

இப்படி இரண்டு கேள்விகளைப் பிரிட்டனில் 18 முதல் 39 வயதுக்கு உள்பட்ட 2002 பெண்களிடம் கேட்டு, 'சவன்டா காம்ரெஸ்' என்னும் ஆய்வு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. 

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (38%) இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற அனுபவம் இல்லை என்றோ, இதுபற்றித் தெரியாது என்றோ அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ 31% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

"இளம்பெண்கள் வெறித்தனமான, அபாயகரமான மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்களுடன் கூடிய உறவுக்கு நிர்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன'' என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பெண்கள் நீதிக்கான மையத்தின் நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"இதெல்லாம் உடலுறவின்போது இயல்பானதுதான் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டிருப்பதும், அளவுக்கு அதிகமான ஆபாசப்படங்களைப் பார்ப்பதும்தான் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பதற்குக் காரணம்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஸ்டீவன் போப் என்பவர் பாலியல் மற்றும் உறவுமுறைகள் குறித்த உளவியல் நிபுணர்.

இதுபோன்ற செயல்கள் `தினந்தோறும்' அதிகரித்து வருவதன் எதிர்மறைத் தாக்கம் பற்றித் தாம் ஆய்வு செய்து வருவதாகப் பிபிசி ரேடியோ 5 லைவ் செய்தியாளரிடம் அவர் கூறினார்.

"இது மவுனமாகப் பரவும் ஓர் ஆபத்து. இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறார்கள். ஆனால், அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கலாம். உறவு நிலையின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலர் இதைக் கருதுகிறார்கள். இந்த வன்முறை ஏற்கத்தக்கது என்று கருதும் நிலை மோசமானது'' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதில் உள்ள ஆபத்துகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வு முடிவுகள் "மிகவும் பயத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன'' என்று இது குறித்த, பிரச்சார அலுவலர் பியோனா மெக்கென்ஜி என்பவர் கூறியுள்ளார்.

"கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் என்று எல்லை மீறும்போது `நூலிழையில் உயிர் தப்பிய நிலையில்' பலர் என்னிடம் வருகிறார்கள். நீண்ட நேரம் சுயநினைவிழந்து அவர்கள் இருந்துள்ளனர். கழுத்தை நெரித்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் அதுபற்றித் துளியும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பதில்லை என்பது வருத்தமானது'' என்று சொல்லிப் பெரிதும் கவலைப்படுகிறார் அவர்.

இது, இங்கிலாந்தில் பரவிவரும் ஆபத்தான பாலியியல் நாகரிகம்.

இந்தியாவில் பரவியுள்ளதா?

"இல்லை" என்றால், இனி பரவுமா?

எப்போது?

தடுத்து நிறுத்துவது சாத்தியப்படுமா?

ஊஹூம். கலிகாலம் முடிவுபெற ரொம்ப வருசம் இருக்காமே!!!

====================================================================================

https://www.bbc.com/tamil/global-50593392   

====================================================================================

அமேசானில் 'என் பக்கம்['பசி'பரமசிவம்] செல்ல.....

https://www.amazon.com/author/haipasi