‘இறைவன்(அல்லாஹ்) உருவம், காலம், எல்லை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவன்’ என்கிறது இஸ்லாம்.
பொருள் எதுவாயினும் அதன் உருவம், அது உருவான காலம், அதன் எல்லை[நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கனபரிமாணம்] போன்றவற்றை ஆறறிவால் அறியலாம்.
இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்று[இறைவன்] இருப்பதை ஆறறிவால் அறிதல் இந்நாள்வரை சாத்தியப்படவில்லை.
கடவுள் இருந்தால் நல்லது என்னும் ‘விருப்பம்’ மனிதர்களுக்கு உள்ளது. அந்த விருப்பம்தான், ஏதேதோ காரணங்களை முன்வைத்துக் கடவுள் இருப்பதாகச் சொல்லச் செய்கிறது; நம்பத் தூண்டுகிறது.
கிறித்தவம் ‘கடவுள் ஆவி வடிவானவர். மனிதர்கள் அவரைத் தன் மனதால் உணர முடியும். விவிலியத்தின்படி, அவர் இயேசு கிறிஸ்துவின் வடிவில் மனிதனாகத் தோன்றினார்; பரிசுத்த ஆவியின் மூலம் மனிதர்களின் உள்ளங்களில் காட்சியளிக்கிறார்’ என்கிறது.
மூளை இருப்பது மட்டுமே உண்மை. மனம் என்று ஒன்று இருப்பதை அறிவியல் உலகம் நிரூபிக்கவில்லை. அப்புறம் எப்படி அவரை மனதால் உணர்வது?
கடவுள் ஏசு கிறிஸ்துவின் வடிவில் தோன்றினார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை; நம்புவது 100% சாத்தியம் இல்லை.
பரிசுத்த ஆவியையோ அசுத்த ஆவியையோ இந்நாள்வரை கண்டவர்களோ, காண்பித்தவர்களோ இல்லவே இல்லை.
இந்துமதத்தின் கடவுள் கொள்கையும் மேற்கண்ட மதக் கொள்கைகளை[மூடநம்பிக்கைகள் மிக அதிகம்]ப் போன்றதே.
உயிர்கள் பொருள்கள் ஆகியவற்றின் தோற்றத்திற்கு மூலமாக ஏதோ ஒன்றோ பலவோ இருப்பது அறிவியலால் நிரூபிக்கப்படாத நிலையில், கடவுள் என்றொருவர் கற்பிக்கப்பட்டதற்கு, மனிதர்களின் மரணம் குறித்த அச்சமும், கடவுள் இருந்தால் நல்லது என்னும் விருப்பமும்தான் முக்கியக் காரணங்கள்.
ஆக, மதங்கள் பலவும் கடவுள் என்றொருவர் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருப்பதன் விளைவு.....
இவற்றால்[மதங்கள்] நேர்ந்த கலவரங்களால் கோடி கோடியாய் மனித உயிர்கள் பலியாயின; மூடநம்பிக்கைகள் வரம்பின்றிப் பெருகின.