*நிலா ஒன்றல்ல; அண்டவெளியில் உலாவரும் இவற்றின் மொத்த எண்ணிக்கை 176! 175 நிலாக்கள் ரொம்ப ரொம்ப ரொம்பத் தொலைவில் இருப்பதால் ஒன்றே ஒன்று மட்டும் நம் கண்களுக்குத் தெரிகிறதாம்.
இவை...புதன், சுக்கிரன் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய், பூமி முதலான கோள்களுக்கு அருகருகே சுழல்கின்றனவாம்.
*நம் கண்ணுக்குத் தெரிகிற அழகு நிலா, பூமியிலிருந்து சுமார் 238857 கல்தொலைவு[384403 கி.மீ] இடைவெளியில் பூமியை வலம் வருகிறது. இது தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன[மற்ற விவரங்கள் வேண்டாம். உணர்வு சலிக்கும்!].
*சூரியனிலிருந்து பூமி பிறந்ததல்லவா? அது போல, பூமியிலிருந்து இந்த நிலா பிறந்தது. பூமியிலிருந்து ஒரு துண்டாக இது சிதறியபோது உண்டான மகா மகா மகா பிரமாண்டக் குழியில்தான் பசிபிக் பெருங்கடல் உருவாயிற்றாம்.
*விண்வெளியில் அலைந்து திரிகிற கோள்களில் காதலர்களுக்குப் பிடித்தமானது குளுகுளு நிலவைப் பொழிகிற இந்த நிலா மட்டும்தான்.
'இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே போகிறது. சுருக்கம் லேசா...மிக மிக லேசாத்தான் இருக்கிறது. அதனால, பயப்பட ஒன்றுமில்லை'ன்னு அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்[அது எக்கேடு கெட்டால் நமக்கென்ன...கவலைப்பட வேண்டியவர்கள் காதலர்கள் மட்டுமே].
*24.10.2010இல் பூமிக்கும் நிலாவுக்குமான இடைவெளி அதிகமாகி, நெடுநெடுந் தொலைவில் இது காட்சி தந்ததாம். அப்போது தோன்றிய முழு நிலா 15% அளவுக்குச் சிறுத்துக் காணப்பட்டதாம். இதுக்குத் 'தானிய நிலவு'ன்னு பெயராம். நம் மக்களெல்லாம் பார்த்துப் மகிழ்ந்தார்களாம். நீங்களும் நானும்தான் ஏமாந்துவிட்டோம்.
*'இந்த நிலா குறித்து மக்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. நம்மவர்களுக்குக் கவலை தருவது சூரியபகவான்தான்[ஞாயிறு]. 457 கோடி அகவையுடைய இந்தக் குடுகுடுகுடு கிழவர், இன்னும் 543 கோடி ஆண்டுகளுக்கு அப்புறம் 'பொசு'க்குன்னு உயிரை விட்டுடுவார்' என்கிறார்கள் அறிவியல் மேதைகள்.
அய்யோ....அப்படீன்னா..... நம்ம வாரிசுகள் கதி அதோகதிதானா?!
ஆதார நூல்: 'இலக்கிய - அறிவியல் நுகர்வுகள்'; ஆசிரியர்: கா.விசயரத்தினம்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
ஆதார நூல்: 'இலக்கிய - அறிவியல் நுகர்வுகள்'; ஆசிரியர்: கா.விசயரத்தினம்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
=======================================================================
கீழே இடம் காலியா இருக்கேன்னு இன்னிக்கி நான் எடுத்துகிட்ட படத்தை[செல்ஃபி] இணைச்சிருக்கேன்.
நடுமூஞ்சி சிடுசிடு மூஞ்சியா இருக்கே.
பதிலளிநீக்குபக்கத்தில் ஒரு 'கெய்வி' நின்னுட்டு ''என்னையும் சேர்த்து செல்ஃபி எடு''ன்னு சொன்னா, சிடுசிடுக்காம சிரிப்பு மத்தாப்புக் கொளுத்த முடியுமா பக்கவாத்தியம்?
நீக்குமுதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
543 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப் போகும் எனது குடும்ப உறவுகளை நினைத்து கவலைப்பட வைத்து விட்டீர்களே... நண்பரே ?
பதிலளிநீக்குஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ளலாம்!
நீக்குநன்றி கில்லர்ஜி.
அழகிய தகவல்கள். ஆனா நான் வேறு விதமாக எல்லோ கேள்விப்பட்டேன்.. அதாவது சூரியன் அழியாது.. ஆன அதன் வெப்பம் இன்னும் அதிகமாகி அதைத்தாக்குப் பிடிக்க முடியாமல் பூமிதான் அழியுமாம்..
பதிலளிநீக்குநீங்க வாரிசு பற்றிக் கவலைப்படுறீங்க:) ஆனா எனக்கு என்னைப் பற்றித்தான் கவலையா இருக்கு பிக்கோஸ் மீக்கு இப்போதானே சுவீட் 16 நடக்குது:) அப்போ திடீரென உலகம் அழிஞ்சிட்டாஆல்ல்ல்ல்ல்ல்?:))
//அதன் வெப்பம் இன்னும் அதிகமாகி அதைத்தாக்குப் பிடிக்க முடியாமல் பூமிதான் அழியுமாம்..//
நீக்குஇருக்கலாம். முதலில் பூமி அழியும். அப்புறமா சூரியனும் அழிஞ்சிடக்கூடும்[சூரியனும் ஒருநாள் அழியும் என்று ஏற்கனவே படித்ததாக நினைவு]
நூல்களில் படிப்பதை மட்டுமே என்னுடைய நடையில் பதிவு செய்கிறேன். அறிவியலுக்கும் எனக்கும் நெடுந்தொலைவு. நாமக்கல்லுக்கும் தேம்ஸ் நதிக்கும் உள்ள தூரம்!].
//மீக்கு இப்போதானே சுவீட் 16 நடக்குது...//
12 முடிஞ்சி 13 நடக்கிறதா ஏஞ்சல் சொல்லியிருக்காங்களே?!
மேலே நிலா அழகு எண்டெல்லாம் நிலவு பற்றிச் சொல்லிப்போட்டு:) கீழே உங்கட படம் அதுவும் குளோஸபில் போட்டிருக்கிறீங்களே ?:) லொஜிக் இடிக்குதே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொமப நல்ல பொண்ணூஊஊஊஊ:))
பதிலளிநீக்கு//மேலே நிலா அழகு எண்டெல்லாம் நிலவு பற்றிச் சொல்லிப்போட்டு:) கீழே உங்கட படம் அதுவும் குளோஸபில் போட்டிருக்கிறீங்களே ?:) லொஜிக் இடிக்குதே:)//
நீக்குஅழகுக்கு அழகு சேர்க்கத்தான்!!!
அச்சச்சோ நேற்று வேறு முகம் இன்று வேறு முகமாக இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))
நீக்குWhy did you use sukkiran, when there is a very correct meaningful word “ VELLI” available in Tamil. Next to sun and moon, VeLLi is the brightest object visible in sky. Venus is closeset to the very meaningful word VeLLi. Sukkiran is copied and mythological word developed later (in my opinion). My request to you : Those who are not against Tamil must use VeLLi. If not, as we lost many, we will lose VeLLi too. Thanks.
பதிலளிநீக்குAnbudan RR
'சுக்கிரன்', 'வெள்ளி' ஆனது[திருத்திவிட்டேன்].
நீக்குநன்றி Unknown.
இயன்றவரை ஏனைய பிறமொழிச் சொற்களையும் தமிழாக்கியிருக்கிறேன்.
நீக்குமீண்டும் நன்றி 'பெயரிலி'.