எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 14 டிசம்பர், 2023

‘நீரிழிவு நோய்’... 100% குணப்படுத்தும் மருந்து!!!

 ரு பெண்(65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் வீட்டில் தயாரித்த மருந்தைப்

 பயன்படுத்தினார். இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப் பிடித்த உணவுகளைச் சாதாரணமாகவும் சுதந்திரமாகவும் சாப்பிடுகிறார்.


டாக்டர்கள் அவரிடம் சர்க்கரை நோய்க்கு இனி அலோபதி மருந்து தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர்.



தயாரிக்கும் முறை:

1-கோதுமை 100 கிராம்

2-பார்லி 100 கிராம்

3-கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்[தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்].


கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் போடுங்கள். 10 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.


அது, தானாகக் குளிரும்வரை காத்திருக்க வேண்டும்.


குளிர்ந்த பிறகு வடிகட்டி ஒரு கண்ணாடிக் குடுவை அல்லது பாட்டிலில் பாதுகாத்திடுங்கள்.


பயன்படுத்தும் முறை:

வயிறு காலியாக இருக்கும்பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்தத் தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில்(கப்) நிரப்பி, 7 நாட்களுக்குத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.


அடுத்த வாரம் அதையே ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளுதல் வேண்டும்.


இந்தச் சிகிச்சையால் 2 வாரங்களில் நீரிழிவு நோய் குணமாகும்.


குறிப்பு:

இங்குப் பயன்படுத்தப்படுபவை இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நன்மையே; எந்தத் தீங்கு இல்லை.

- December 09, 2023 

https://m.facebook.com/720112768094744/photos/a.896817303757622/

2804440646328602/?type=3&_rdr


சபரிமலைக் கோயில் பிரச்சினை தீர ஆகச் சிறந்த ஒரே வழி!!!

‘சபரிமலைக்குப் பல்வேறு மாநிலங்களிருந்தும் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் வந்து குவிகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் விழிபிதுங்கி நிற்கிறது கேரள அரசு என்பது அனைத்து ஊடகங்ளிலும் வெளியான செய்தி.

இப்பிரச்சினைக்குக் கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டால், எளிதில் தீர்வு காணலாம் என்பது நம் நம்பிக்கை.

வழிகள்:

*“பிரச்சினைகள் தீர அரசு மிகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று கேரள முதலமைச்சரும், அமைச்சர்களும், கோயில் நிர்வாகமும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடலாமே தவிர நடவடிக்கை ஏதும் எடுத்துவிடக் கூடாது.

*18ஆம் படி ஏறுவதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

*வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாம். காத்திருப்போரை அணுகி, “விரைவில் ஐயப்பனைத் தரிசிக்கலாம். பொறுத்திருங்கள். ஆவன செய்கிறோம்” என்பதாகப் பக்தர்களை ஆற்றுப்படுத்துதல் கூடாது.

*பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்பது பக்தர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு. அரசு அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தத் தேவையில்லை.

மேற்கண்ட குறைகள் காரணமாகச் சபரிமலைக்கு வருகைபுரிந்த பக்தர்களில் பலர் சன்னிதானத்திற்குச் செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு திரும்பிச் செல்கிறார்களாம். அதிகாரிகள் அவர்களைக் கண்டும் காணாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆக.....

கேரள அரசு ஓசைப்படாமல் இவ்வகையான தந்திர உத்திகளைக் கையாளுமேயானால்.....

பக்தர்கள் மனம் சலித்துப்போய், செம்மறி ஆடுகள் போல மந்தை மந்தையாய்ச் சபரிமலைக்கு வந்து கூடுவதைத் தவிர்ப்பார்கள் என்பது உறுதி.

ஐயப்பன் தண்டிப்பார், அடுத்துவரும் தேர்தலில் ஐயப்பப் பக்தர்களின் வாக்கு வெகுவாகக் குறையும் என்றெல்லாம் பினராய் விஜயன் அரசு கவலைக்குள்ளாகாமல், வாக்குகளை அள்ளுவதற்கான வேறு வேறு தந்திரோபாயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பது நல்லது.

“அல்லா[ஹ்] யார் பக்கம்?”[கேட்கத் தூண்டியது ‘தினமலர்’ச் செய்தி!]

பின்னர்வரும் ஒரு செய்தியை வாசிக்கும்போது, இஸ்லாமியரின் கடவுளான அல்லா[ஹ்] நல்லவர் பக்கமா, தீயவர்களுக்கு ஆதரவானவரா என்று கேட்கத் தோன்றும்.

இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கேள்வி எழுப்புவதைவிட,  பாலஸ்தீன இஸ்லாமியருக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும்[நல்லவர் யார்? கெட்டவர் யார்?] போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இரு தரப்பாரில் யாருக்குத் துணைபோவார் அல்லா என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.

அல்லா இஸ்லாமியரின் கடவுள் என்பதால், பாலஸ்தீனர்களுக்குத்தான் உதவுவார் என்பது நம் எதிர்பார்ப்பு.

ஆனால், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக அல்லாவின் செயல்பாடு அமையுமேயானால், அது இஸ்லாமியரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்; இஸ்லாமை வெறுக்கும் மாற்று மதத்தவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; நம்மைப் போன்ற நடுநிலையாளர்களைப் புருவம் உயர்த்தச் செய்யும்.

அறியத்தக்க அந்தச் சம்பவம்:

//“ஹமாஸ்க்கு எதிராகக் காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். தவறினால் அது அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்று துருக்கி பார்லிமென்டில் எம்.பி. ‘ஹசன் பிமேஸ்’ பேசினார்; பேசிக்கொண்டிருக்கையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.


மயங்கி விழுவதற்கு முன், “நம் மனசாட்சியிடம் இருந்து உண்மையை மறைக்கலாம்; ஆனால் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது'' என்றும் அவர் கூறியிருக்கிறார்.


அங்காராவில் உள்ள ‘பில்கெண்ட் மருத்துவமனை’யில் சிகிச்சை பெற்றுவரும் அவர் உயிர் பிரியும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்// என்பது செய்தி. https://www.dinamalar.com/news_detail.asp?id=3502897


அல்லாவை ஒரு நாளில் ஐந்து முறை வழிபடும் ‘பிமேஸ்’ அவர்களின் விருப்பத்தை, அல்லது, எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றவில்லை.

பாவம் பிமேஸ், அவர் அல்லாவின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர். இஸ்லாமியரான அவரின் நம்பிக்கை பொய்க்காத வகையில், இஸ்லாமியக் கடவுளான அல்லா இஸ்ரேலியரை எவ்வகையிலேனும் தண்டித்திருக்க வேண்டும்; செய்யவில்லை[?].


இனியேனும் தண்டிப்பாரோ அல்லவோ, முன்னதாக, கோரிக்கை வைத்த இஸ்லாமியரையே அவர் தண்டித்துள்ளார் என்பது நெஞ்சை உறுத்துகிறது; நம் நெஞ்சை மட்டுமல்ல, இஸ்லாம் சகோதரர்களின் நெஞ்சங்களையும்தான்.


அல்லா ஏன் இப்படிச் செய்தார்?


இமாலயக் கேள்வி.


ஆழ்ந்து சிந்தித்தால் காரணம் புரியக்கூடும். இஸ்லாமியரை அவ்வாறு சிந்திக்கத் தூண்டியிருக்கிறது ‘தினமலர்’ இதழில் வெளியான இந்தச் செய்தி.


அவர்கள் ஒருங்கிணைந்து சிந்திப்பார்களா?