அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 14 டிசம்பர், 2023

“அல்லா[ஹ்] யார் பக்கம்?”[கேட்கத் தூண்டியது ‘தினமலர்’ச் செய்தி!]

பின்னர்வரும் ஒரு செய்தியை வாசிக்கும்போது, இஸ்லாமியரின் கடவுளான அல்லா[ஹ்] நல்லவர் பக்கமா, தீயவர்களுக்கு ஆதரவானவரா என்று கேட்கத் தோன்றும்.

இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கேள்வி எழுப்புவதைவிட,  பாலஸ்தீன இஸ்லாமியருக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும்[நல்லவர் யார்? கெட்டவர் யார்?] போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இரு தரப்பாரில் யாருக்குத் துணைபோவார் அல்லா என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.

அல்லா இஸ்லாமியரின் கடவுள் என்பதால், பாலஸ்தீனர்களுக்குத்தான் உதவுவார் என்பது நம் எதிர்பார்ப்பு.

ஆனால், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக அல்லாவின் செயல்பாடு அமையுமேயானால், அது இஸ்லாமியரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்; இஸ்லாமை வெறுக்கும் மாற்று மதத்தவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; நம்மைப் போன்ற நடுநிலையாளர்களைப் புருவம் உயர்த்தச் செய்யும்.

அறியத்தக்க அந்தச் சம்பவம்:

//“ஹமாஸ்க்கு எதிராகக் காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். தவறினால் அது அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்று துருக்கி பார்லிமென்டில் எம்.பி. ‘ஹசன் பிமேஸ்’ பேசினார்; பேசிக்கொண்டிருக்கையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.


மயங்கி விழுவதற்கு முன், “நம் மனசாட்சியிடம் இருந்து உண்மையை மறைக்கலாம்; ஆனால் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது'' என்றும் அவர் கூறியிருக்கிறார்.


அங்காராவில் உள்ள ‘பில்கெண்ட் மருத்துவமனை’யில் சிகிச்சை பெற்றுவரும் அவர் உயிர் பிரியும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்// என்பது செய்தி. https://www.dinamalar.com/news_detail.asp?id=3502897


அல்லாவை ஒரு நாளில் ஐந்து முறை வழிபடும் ‘பிமேஸ்’ அவர்களின் விருப்பத்தை, அல்லது, எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றவில்லை.

பாவம் பிமேஸ், அவர் அல்லாவின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர். இஸ்லாமியரான அவரின் நம்பிக்கை பொய்க்காத வகையில், இஸ்லாமியக் கடவுளான அல்லா இஸ்ரேலியரை எவ்வகையிலேனும் தண்டித்திருக்க வேண்டும்; செய்யவில்லை[?].


இனியேனும் தண்டிப்பாரோ அல்லவோ, முன்னதாக, கோரிக்கை வைத்த இஸ்லாமியரையே அவர் தண்டித்துள்ளார் என்பது நெஞ்சை உறுத்துகிறது; நம் நெஞ்சை மட்டுமல்ல, இஸ்லாம் சகோதரர்களின் நெஞ்சங்களையும்தான்.


அல்லா ஏன் இப்படிச் செய்தார்?


இமாலயக் கேள்வி.


ஆழ்ந்து சிந்தித்தால் காரணம் புரியக்கூடும். இஸ்லாமியரை அவ்வாறு சிந்திக்கத் தூண்டியிருக்கிறது ‘தினமலர்’ இதழில் வெளியான இந்தச் செய்தி.


அவர்கள் ஒருங்கிணைந்து சிந்திப்பார்களா?