செவ்வாய், 31 மே, 2022

கடவுள் ஒரு பொருட்டல்ல! மதவாதிகளே நம் இலக்கு!!

டல் வலிமையைப் பொருத்தவரை ஓர் உயிரினம் மற்றொன்றைப் போல் இல்லை. பலம் குறைந்தவை, தம்மினும் பலம் வாய்ந்த உயிரினங்களைக் கண்டு அஞ்சி அவற்றிற்கு அடங்கி வாழும் நிலை உள்ளது.

உயிர்கள் ஒன்றையொன்று வதைத்துக் கொன்று உணவாக்கிக்கொள்வது மற்றொரு நிலை.

பிறப்பதும் இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டே இனவிருத்தி செய்து வாழ்ந்து மடிவதும் இன்னுமொரு நிலை. இவை இயற்கையாய் அமைந்தவை எனலாம்.

இவை குறித்துக் காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து மனிதர்கள் நொந்து சாவதும் இயற்கைதான். 

சிந்திப்பதற்கு அடிப்படையாய் அமைந்திருப்பது ஆறாவது அறிவு.

இது வாய்க்காமல் இருந்திருந்தால், 'ஏன், எதற்கு, எப்படி' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பாமால் ஏனைய உயிர்களைப் போலவே வாழ்ந்து மடிந்து மண்ணாகிப் போவான் மனிதன்; மரணபயம் குறித்த அனுபவம் தவிர்க்கப்பட்டிருக்கும். 

எது எப்படியோ, இந்த மரணபயம் உட்படப் பல துன்பங்களையும் குறைந்த அளவிலான இன்பங்களையும் அனுபவித்து மறைவதே 'இயற்கை' என்று சொல்லிக்கொண்டு கொஞ்சமேனும் ஆறுதல் பெறுவது சாத்தியமானதாக உள்ளது.

உலகங்களும் உயிர்களும் இயற்கையாய்த் தோன்றியவை அல்ல; எல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லிச் சொல்லி இதையும் சாத்தியமற்றதாக ஆக்கும் கைங்கரியத்தைச் செய்தார்கள் மதவாதிகள்.

இவர்கள் கற்பித்த கடவுளுக்கு வேறு வேறு திருநாமங்கள் சூட்டி[இயற்கைச் சிற்றங்களைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன், நீர் ,நெருப்பு, காற்று ஆகிய இயற்கை அம்சங்களை மட்டுமே வழிபட்டான் என்பது நினைவுகூரத்தக்கது] அவர்களின் புகழ் பாடி, மக்களை நம்பவைத்துத் தங்களை அவதாரங்களாகவும் மகான்களாகவும் ஆக்கிக்கொண்டதோடு, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், ஆவி, பூதம் என்று எவையெல்லாமோ இருப்பதாகச் சொல்லி மக்கள் மீது ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்ததே இவர்கள் நிகழ்த்திய சாதனைகள் ஆகும்.

இதை நிகழ்த்த, இவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் பயன்பட்டன.

எனவே, மூடநம்பிக்கைகள் ஒழிய, தொடர் பரப்புரைகள் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல் வேண்டும். மக்கள் சிந்தித்தால்.....

மதங்களோடு மதவாதிகளும் காணாமல் போவார்கள்.

இவர்கள் காணாமல் போனால், இல்லாத கடவுளை 'இல்லை' என்று சொல்லி மக்களை நம்பச் செய்வது ஒரு பொருட்டே அல்ல!

======================================================================================



திங்கள், 30 மே, 2022

இவன் நல்லவனா, கெட்டவனா?!

//ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் சதீஷ்குமார்(வயது36). இவர் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு 2ஆவதாக 'ராதா பிருந்தா' என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

பின்னர் இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.  அந்தப் பெண்ணின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு தரவே, இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கொஞ்சம் நாள் கழித்து, சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயிலுக்குச் சென்று வந்ததால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.// 

இது செய்தி[https://www.dailythanthi.com/News/State/suicide-709632].

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து  இரு மனைவியரையும் விவாகரத்துச் செய்த இவன், மூன்றாவது மனைவியின் மகள் வேறொருவருக்குப் பிறந்திருந்தாலும் அவளைத் தன் மகளாகவே கருதிப் பாதுகாக்காமல் அடாத செயலில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுவதும் தவறில்லை. அரேபிய நாடுகளில் நடப்பது போல் கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டியவன் இவன் என்றுகூடச் சொல்லலாம். ஆனால்.....

'மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் இவன் தற்கொலை செய்துகொண்டான்' என்னும் செய்திதான் நம்மைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

இவன் முழுக்க முழுக்க ஒரு மிருகமாக இருந்திருந்தால், தனக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படவிருக்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பானே தவிரத் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

இவன் மனம் உடைந்துபோய் இருந்திருக்கிறான்.

நாலு பேர் மத்தியில் இனி தலை நிமிர்ந்து நடமாட முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

மூன்று பெண்களை அனுபவித்திருந்தும், 'போதும் என்னும் மனம்' இல்லாமல் ஒரு சிறுமியைச் சீரழித்துவிட்டோமே என்னும் மனசாட்சியின் சாடலும் காரணமாக இருக்கலாம்[பாலுணர்வு எத்தனைக் கொடூரமானது என்பதை எந்தவொரு கணத்திலும் மனித இனம் மறவாதிருப்பது மிகவும் அவசியம்].

ஆக, தான் செய்த குற்றங்களை நினைத்து வருந்துகிற மனித குணமும் இவனுக்கு இருந்திருப்பது தெரிகிறது.

மனிதப் பண்பு குறைந்து மிருகக் குணம் இவனிடம் மிக்கிருந்ததற்கு, இவனைப் பெற்றவர்கள் நல்ல வாழ்வியல் நெறிகளைக் கற்றுக் கொடுத்து வளர்க்காதது காரணமாக இருக்கலாம்; நிராதரவான நிலையில் இவன் வளர்ந்த சூழல் ஏதுவாக அமைந்திருக்கக்கூடும்.

எது எப்படியோ, ஒரு குற்றவாளியான இவன், தான் செய்த குற்றத்தை உணர்ந்து தனக்குதானே தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

எனவே, இவனை நல்லவன் என்றும் சொல்லலாமா?

சொல்லலாம். இவன் வாழ்ந்த சூழலே இவனைக் கெட்டவனாக வாழச் செய்திருக்கிறது  என்பதே நம் பதில்.

=====================================================================================


சனி, 28 மே, 2022

அரைகுறையாய் முடிந்த அந்தரங்க உறவு!!!['ஹி... ஹி... ஹி!!!' கதை]

சில நாட்களுக்கு முன்பு, ஆண் நண்பர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த இயலாத ஒரு பெண், அவர்களுக்கு அந்தரங்க சுகமளித்துக் கடனைக் கழித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தச் செய்தியை அடியேனும் படித்ததன் விளைவு இந்த 'ஹி... ஹி... ஹி!!!' கதை.

                          *   *   *   *   *

சுந்தரி கவர்ச்சியான உடல்வாகு கொண்ட அழகான பெண்; திருமணம் ஆகிக் குறுகிய காலத்திலேயே கணவனிடம் 'மணவிலக்கு'ப் பெற்றவள்.

ஆண்களுடன் சகஜமாகப் பழகும் இயல்புள்ளவள் என்பதால் கணிசமான அளவில் ஆண் நண்பர்களைப் பெற்றிருந்தாள்.

அவள் ஆடம்பரப் பிரியையும்கூட. தினுசு தினுசாக ஆடைகள் வாங்குவதற்கும், தோழிகளுடன் அடிக்கடிச் 'சுற்றுலா' என்னும் பெயரில் ஊர் சுற்றுவதற்கும்  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துப் பெற்ற ஊதியம் போதுமானதாக இல்லாததால், தெரிந்த ஆண் நண்பர்களிடமும், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நிறையவே கடன் வாங்கினாள்.

ஆனால், வாங்கிய கடன் எதையுமே ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை.

கடன்கார ஆடவர்கள் இவளின் வீடு தேடி வந்து நெருக்கடி தரவே, அதிக அளவில் கடன் கொடுத்தவர்களில் சிலரிடம், "என்னால் கடனைத் திருப்பித் தர இயலாது. என்னோடு 'இருந்து' கடனைக் கழித்துக்கொள்ளுங்கள்" என்றாள். அவர்களும் சம்மதித்தார்கள்.

இது விசயம் காமராசு உட்படக் கடன் கொடுத்த மற்றவர்களுக்கும் தெரியவந்தது, 

தகவல் அறிந்த அன்றே சுந்தரியின் வீடு தேடிப் போனான் காமராசு.

இவனை அவள் முகம் மலர வரவேற்றாள்.

வெய்யிலுக்குக் குளிர்பானம் கொடுத்தாள்; உடல் சூடு தணியச் சில முத்தங்கள் கொடுத்தாள்.

அந்த முத்தங்கள் அவனை மேலும் சூடேற்றியது. அங்கிங்கெனாதபடி அவளின் மேனி எங்கும் முத்தமாரி பொழிந்தான்; ஆரத் தழுவினான்.....

இப்படியாகப் புற விளையாட்டுகளை ஆடி முடித்து அக விளையாட்டை ஆரம்பிக்க நினைத்து அவளின் ஆடை களைந்திட முற்பட்டபோதுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அது நடந்தது.

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சுந்தரி, "நீங்க எனக்குக் கொடுத்த கடன் எவ்வளவு?" என்று கேட்டாள்.

சற்றே யோசித்த காமராசு, "ஐநூறு ரூபாய்" என்றான்.

"ஆயிரத்துக்கும் மேலே கொடுத்திருந்தாத்தான் 'அது'க்கு அனுமதி. நீங்க கொடுத்த ஐநூறுக்கு இதுவே அதிகம். நீங்க போகலாம்" என்று கண்டிப்பான குரலில் சொல்லி வாயில் பக்கம் கை காட்டினாள் சுந்தரி.

காமராசுவின் மனநிலையை வர்ணிக்க உரிய வார்த்தைகள் இல்லாததால் இத்துடன் கதை முடிவடைகிறது!

======================================================================================


வெள்ளி, 27 மே, 2022

'முழக்கம்' எழுப்பு..... 'கோஷம்' போடாதே!

***laptop under repair!
#சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்த பல்வேறு நலத்திட்டத்  தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பேசியபோது பாஜகவினர் எதிர்ப்புக்கோஷம் எழுப்பினர். திமுகவினர் எதிர்க்கோஷம் எழுப்பியதால் அரங்கமே அதிர்ந்தது# -இது இன்றையச் செய்தி[https://www.puthiyathalaimurai.com].

தமிழ்நாடு முதல்வர் பேசியபோது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரங்கத்திலிருந்த பாஜகவினர் எழுப்பிய முழக்கம் 'பாரத் மாதா கி ஜே’ 

முதல்வரை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டதை, தமிழை ஒரு பொருட்டாக மதிக்காத 'இந்தி'யர்களான 'பாஜக' பிரமுகர்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை. கண்டித்து முழக்கமிட்டவர்களை உடனுக்குடன் அடக்கி வைத்திருந்தால் திமுக தொண்டர்கள் எதிர் முழக்கம் செய்திருக்கமாட்டார்கள். 

தலைவர்களை அவமதிக்கும் அநாகரிகம் அரங்கேறியிருக்காது.

இந்நிலையில், 'ஜே' போட்ட 'பாஜக' தொண்டர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.

உங்களின் தலைவர்கள் எப்படியோ, தொண்டர்களான உங்களுக்குத் தாய்மொழி[தமிழ்]ப் பற்று உண்டு என்று நம்புகிறோம். ஆகவே.....

இனி, எந்தவொரு சூழலிலும், இங்கே பாரத மாதாவை வாழ்த்த விரும்புவீர்களேயானால், "பாரத அன்னை வாழ்க" என்று முழக்கமிடுங்கள்; "பாரத் மாதாகி ஜே" இனி வேண்டாம்.

இந்தியர்களாக வாழ்ந்திட விரும்பும் நீங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், உங்களின் தாய்மொழி தமிழ் என்பதையும் மறவாதீர்! மறந்தால்.....

இந்த மண் உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

==================================================================

***பதிவை எழுதிமுடித்து, இணைப்பதற்குப் பொருத்தமான படமொன்றை இணையத்தில் தேடியபோதுதான் அண்ணாமலை அவர்களின் தமிழில் முழங்கச் சொல்லும் படம் தட்டுப்பட்டது. அதை மிக்க மகிழ்ச்சியுடன் தளத்தின் தலைப்பில் சேர்த்துள்ளேன். 

                                  *   *   *   *   *

***விழாவில், தமிழ்நாடு முதல்வர் ஆற்றிய உரையை உள்ளடக்கியது கீழே இடம்பெற்றுள்ள காணொலி:

வியாழன், 26 மே, 2022

எழுத்தாளர் 'கல்கி' ஆத்திகரா, நாத்திகரா?!

ம்பராமாயணச் சொற்பொழிவு நிகழ்ச்சி.

மறைந்த பிரபல எழுத்தாளர் 'கல்கி'தான் நிகழ்ச்சிக்குத் தலைவர்.

அரங்கம் நிரம்பி வழிந்தது.

கல்கி உரிய நேரத்துக்கு வந்து, தலைவருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் மட்டும் வந்துசேரவில்லை. பார்வையாளர்களிடேயே  ஒருவித அமைதியின்மை தெரிந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டார்கள்.

பதினைந்து நிமிடம் போல் தாமதமாக வந்துசேர்ந்தார் பேச்சாளர்.

மேடை ஏறி, ஒலிபெருக்கியைக் கையில் பிடித்ததும், 'இங்கே பேசுவதற்குத் தயார் செய்த குறிப்பை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். பாதி தூரம் வந்த பிறகுதான் அது நினைவுக்கு வந்தது. திரும்பிப் போய்க் குறிப்புரையை எடுத்துவந்தேன்" என்று சொல்லி, தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துத் தம் சொற்பொழிவைத் தொடங்கினார்.

பொழிவின் இறுதியில், "ராமாயணக் கதை கேட்ட உங்கள் அனைவருக்கும் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்" என்று சொல்லி விடைபெற்றார்.

முடிவுரை வழங்குவதற்கு எழுந்த கல்கி, "ராமாயணக் கதை கேட்டவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்றால், அந்தக் கதையைச் சொன்ன உங்களுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி. ஆனால், நீங்கள் குறிப்புரையை எடுத்து வர மறந்தது போல், சொர்க்கத்துக்குப் போகும்போது, உங்களின் பாவபுண்ணியக் கணக்கேட்டை எடுத்துப்போக மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், சொர்க்கத்துக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டுப் பாதி வழியில் திரும்பி வருவது அத்தனைச் சுலபமல்ல" என்று சொல்லி முடித்தார்.

ஆரவார ஒலி அரங்கம் முழுக்கப் பரவியது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலகலவென்று சிரித்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்!

கல்கி ஆத்திகரோ நாத்திகரோ, எழுத்தாயினும் பேச்சாயினும் கேட்போர் மனம் கவரும் வகையில் நகைச்சுவை கலந்து தருவதில் மிக வல்லவர். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!

=================================================================

குறிப்புரை:

மிகப் பழைய வார இதழ் ஒன்றில் வாசித்ததை நினைவுபடுத்திப் பதிவு செய்திருக்கிறேன். இதழின் பெயர், வெளியான ஆண்டு, நிகழ்ச்சி இடம்பெற்ற ஊர் என்று அனைத்தும் மறந்துவிட்டன. வயசாயிடிச்சி இல்லையா? ஹி... ஹி...ஹி!!!

=================================================================

*****ஜக்கி வாசுதேவ் கடவுள்களுக்கெல்லாம் குரு[சத்குரு]வோ அல்லவோ, கடவுள்களைக் காட்டிலும் புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை. கீழே உள்ள காணொலியே சாட்சி!

புதன், 25 மே, 2022

'புரியாது' என்பதைப் புரிந்துகொண்ட தத்துவ மேதை அரிஸ்டாட்டில்!

ரு மாலைப் பொழுதில், கடற்கரை ஒன்றில் தத்துவஞானி 'அரிஸ்டாட்டில்'[(Aristotle) நடந்துகொண்டிருந்தார்.

மேற்கே சூரியன் மறையும் ரம்மியமான காட்சியை ரசிக்கும் மனநிலையில் அவர் இல்லை.

காரணம் அவரின் சிந்தை முழுக்கப் பிரபஞ்சத்தின் தோற்றம், இருப்பு போன்றவை குறித்த கேள்விகளே நிறைந்திருந்தன. அன்றைய தினம்வரை அவற்றிற்கான விடைகள் கண்டறியப்படவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

தீவிரமான சிந்தனைக்கிடையே, சற்றுத் தொலைவில் ஒரு மனிதர் கடல் அலைகளை அணுகுவதும், கரைக்குத் திரும்புவதுமாக இருப்பதைக் கண்டார்.

அவரின் நடவடிக்கை அரிஸ்டாட்டிலை வெகுவாக ஈர்த்தது.

அவரை நெருங்கி, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"இந்தச் சிறு கரண்டியால்[spoon] கடல் நீரை மொண்டுவந்து இதோ இங்கே இருக்கும் சிறு குழியில்[hole] கொட்டிக் கொட்டிக் கடலைக் காலி ஆக்கப்போகிறேன்" என்றார் அவர்.

வாய்விட்டு நகைத்தார் அரிஸ்டாட்டில்; சொன்னார்: "இது மகா மகாப் பெரிய சமுத்திரம். இதிலுள்ள நீரை இந்தச் சிறு கரண்டியால் மொண்டுவந்து குழியில் கொட்டிக் கடலைக் காலி செய்யப்போவதாக நீங்கள் சொல்வது அபத்தம். இது முட்டாள்தனமான செயல்" என்றார்.

"உண்மைதான். இனி இச்செயலில் நான் ஈடுபடமாட்டேன்" என்று சொன்ன அந்த மனிதர், "உங்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்" என்று சொல்லித் தொடர்ந்து பேசினார்.

"என் செயல் முட்டாள்தனமானது என்பது சரியே. இந்தப் பிரபஞ்சம் என்பது இந்தக் கடலைவிடவும் பல கோடி கோடி கோடி மடங்கு பெரியது. இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தைச்  சிந்தனை என்னும் கரண்டியால் அளந்து, உங்களின் மூளை என்னும் சிறு குழிக்குள் இட்டு நிரப்ப முயற்சிக்கிறீர்களே, இது அபத்தம் இல்லையா?" என்று கேட்டார், அரிஸ்டாட்டில் ஒரு தத்துவ ஞானி என்பதை அறிந்திருந்த அந்த மனிதர்.

அவ்ர் கேள்விக்குப் பதில் தராத அரிஸ்டாட்டில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

                                        *   *   *   *   *

பிரபஞ்சம் குறித்த ஆகச் சிறந்த தத்துவம் இது; அரியதொரு வாழ்க்கைத் தத்துவமும்கூட.

"ஐம்புலங்களால் அறியப்படும் பொருள்களின் தோற்றத்திற்கான நோக்கம் பற்றி 0001%[எத்தனை சுழியும் போடலாம்] உண்மையைக்கூடக் கண்டறியாத மனிதர்கள், ஆளாளுக்குக்கு ஒரு கடவுளைப் படைத்து வைத்துக்கொண்டு அவற்றை வழிபட்டுக் கொண்டாடிக் கூத்தடிப்பதும், மதங்களின் பெயரால் கலகம் விளைவித்து அடித்துக்கொண்டு லட்சக்கணக்கில் செத்தொழிந்ததும், இப்போதும் செத்துக்கொண்டிருப்பதும்[எண்ணிக்கை கூடக்குறைய இருக்கலாம்] இங்கே நிரந்தரம் ஆகிப்போன ஒன்று" என்றெண்ணி வேதனைப்படுவதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!

குறிப்பு:https://moralstories26.com/aristotle-man-on-beach-life-greek-philosopher/ என்னும் தளத்தின் ஆங்கிலக் கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்திருக்கிறேன்; தேவை என்று நினைத்த மாற்றங்களையும் செய்திருக்கிறேன்.

================================================================= 


செவ்வாய், 24 மே, 2022

மனமும் மணமும்!!

நாற்றம் எனும் சொல் முதலில் நறுமணம் என்னும் பொருளில்தான் வழங்கி வந்திருக்கிறது. ‘கருப்பூரம் நாறுமோ; கமலப்பூ நாறுமோ; திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கடவுளாகக் கருதப்படும் கிருஷ்ணனின் வாய் மணத்தை ஆண்டாள் பாடிப் பரவசமடைந்தார்.

மலர்கள் என்றாலே அனைத்து மலர்களுமே நல்ல மணம் கொண்டவை என்றுதான் நினைக்கிறோம்.

சில மிருகங்களின் கழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மணம் உடையதாக இருக்கிறது. பசுச் சாணத்தின் மணத்தை உதாரணமாகச் சொல்லலாம். புனுகுப் பூனையின் கழிவு, வாசனைத் திரவியம் போல நறுமணம் உடையது. 'paradoxurus hermaphroditus' என்ற பெயர் கொண்ட புனுகுப் பூனை, காபிப் பழங்களை விரும்பிச் சாப்பிடும். காபிக் கொட்டைகள் அதன் கழிவுடன் சேர்ந்து வெளிவந்துவிடும். அதன் உணவுப் பாதையில் உள்ள என்சைம்களின் செயலால் காபிக் கொட்டையில் இனிய மணம் ஏறுகிறது. இப்படி வெளிவந்த கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காபிக்குக் ‘கோப்பி லுவாக்’ எனப் பெயர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் அபார மணம் கொண்ட இந்தக் காபியின் விலை, கோப்பை ஒன்றுக்கு நூறு டாலர் வரை!

பெண்ணுக்கென்று தனி வாசனை உள்ளது என்பது கலப்படமில்லாத கற்பனை. ஆணென்ன, பெண்ணென்ன நாலு நாள் குளிக்காவிட்டால் உடம்பு நாறிப்போகும்.

நல்ல மணத்துக்குப் பதிலாகக் கெட்ட மணம் வீசும் மலர்களும் உண்டு.

‘அமோர்ஃபோஃபாலஸ் டைட்டானம்’ என்னும் தாவரம் சுமத்ரா மழைக்காடுகளில் இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய பூங்கொத்து உடைய தாவரம் என்ற சிறப்புப் பெற்றது இது. இதன் பூங்கொத்து அழுகிப்போன பிணத்தின் நாற்றத்தைக் கொண்டிருக்கும்!

‘தீக்குச்சி மரம்’ என்றழைக்கப்படும் Ailanthesexcelsa  மரத்தின் மலர்களோ மிகவும் துர்நாற்றம் கொண்டவை.

பூக்களில் மரபியல் மாற்றங்களைச் செய்து வாசனையைக் கூட்டவோ குறைக்கவோ இயலும் என்பதை ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். 

சில வாசனைகள் சிற்றின்ப நுகர்வைத் தூண்டுவனவாக அமைவதுண்டு. உதாரணத்துக்கு மாலை நேரங்களில் பெண்கள் விரும்பிச் சூடும் மல்லிகை வாசம்! முதலிரவு அறையில் ஊதுபத்தி மற்றும் நறுமண மலர்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. 

சில வாசனைகளுக்குச் சிலர் ‘அடிமை’ ஆகிவிடுவார்கள். பெட்ரோல் நிலையங்களில் வேலை பார்க்கும் சிலர் கைக்குட்டையைப் பெட்ரோலில் நனைத்து முகர்ந்துகொண்டே இருப்பார்களாம்! பெயின்ட் வாசனை சிலருக்குப் போதையைத் தருவதுண்டு!

வாசனையறியும் குறைபாட்டுக்கு தலைக்காயம், ஹார்மோன் கோளாறுகள், சைனஸ், பல் பிரச்னைகள், மருந்துகளின் பக்க விளைவுகள், புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் கதிர்வீச்சுச் சிகிச்சை, புகை பிடித்தல், முதுமை போன்ற பல காரணங்கள் உண்டு.

வாசனைகளை அறிவதில் ஏற்படும் குறைபாட்டுக்கு ‘ஹைப்ஸ்மியா’ என்றும், அறவே வாசனைகளை உணர இயலாத குறைபாட்டுக்கு ‘அனோஸ்மியா’ என்றும் பெயர். பொருட்களின் அசல் வாசனைக்குப் பதிலாக வேறு வாசனையை நுகர்வதாக உணரும் ‘டைசோஸ்மியா’, இல்லாத வாசனைகளைக் கற்பனையாக உணரும் ‘ஃபாண்டோஸ்மியா’ எனப் பல குறைபாடுகளும் இதில் இருக்கின்றன.

வாசனையை எப்படி அறிகிறோம்? உள்மூக்கின் அடிப்பகுதித் திசுக்களில் ஆல்ஃபேக்டரி சென்சரி நியூரான் எனப்படும் வாசனையறியும் செல்கள் பொதிந்து காணப்படும். இவை மூளையுடன் நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செல்லும் தனிப்பட்ட வாசனையை அறியும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத நுண் மூலக்கூறுகள் வெளியாகிக்கொண்டே இருக்கும். அவற்றை இனங்கண்டு இந்த நியூரான்கள் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன. மூளை அதை இனம் கண்டு வாசனைகளை அறிகிறது.

வாசனைகளை நாசித் துவாரத்தின் மூலம் மட்டுமே உணர்வதாக நினைத்திருக்கிறோம் அல்லவா? தொண்டையின் மேற்பரப்பில் உள்ள சேனல் ஒன்றும் மூக்கோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் உணவு உண்ணும்போது அறியும் வாசனைக்கு இங்கு உள்ள நியூரான்களும் காரணமாகும். ஜலதோஷம் வந்தால் இந்தச் சேனல் தடைப்படுவதால்தான், அப்போது வாசனைகளைச் சரிவர நுகர முடிவதில்லை.

ஒரு குற்றம் நிகழ்ந்ததும் சம்பவ இடத்துக்கு வரும் துப்பறியும் நாய்களுக்கு உறுதுணையாக இருப்பது அவற்றின் வாசனை[மோப்பம்] அறியும் சக்திதான். 

70 முதல் 80 சதவீதம் பேருக்கு வாய் நாற்றம் இருக்கிறதாம். தங்களுக்கு இப்படி ஒரு குறை இருப்பதே தெரியாமல்தான் பலரும் இருக்கிறார்கள். வாய்த் துர்நாற்றம் உள்ளவர்கள் உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். 

டாக்டர்கள் வாய் நாற்றத்தை ‘ஹாலிடோஸிஸ்’ என்கிறார்கள். சரியாகப் பல் துலக்காதது, வாயில் புண் இருப்பது, ஈறுகளில் நோய்க் கிருமிகள் தொற்றுவது, தொண்டையிலும், நுரையீரலிலும் நோய்கள் இருப்பது போன்றவை வாயில் துர்நாற்றம் உண்டாவதற்கான காரணங்களில் சிலவாகும்.

=================================================================

நன்றி:http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=788&id1=6&issue=20110131


திங்கள், 23 மே, 2022

விந்தணுப் பாதிப்பும் சேமிப்பும்!

தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓர் இளைஞனின் பெற்றோர் விசித்திரமான மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுவை வழங்க, 'சர் கங்கா ராம்' மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆனால், கங்காராம் மருத்துவமனை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சட்ட ரீதியான காரணங்களைச் சொல்லி, தான் சேமித்து வைத்துள்ள இளைஞனின் விந்துவை வழங்க இயலாது என்று தெரிவித்தது.

இது, 'பிபிசி'யில்[https://www.bbc.com/tamil/india-60343302   -11 பிப்ரவரி 2022] வெளியான செய்தி.

விந்து சேமிக்கப்பட்டதற்கான காரணமும் செய்தியில் இடம்பெற்றுள்ளது. அது.....

அந்த இளைஞர் ஜூன், 2020ஆம் ஆண்டு, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் புற்றுநோய்ப் பாதிப்பு இருந்தது.

அவருக்குத் திருமணம் ஆகவில்லை. சிகிச்சையின்போது, கதிர்வீச்சு உடலில் எதிர்மறையான விளைவுகளையும் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பதால், கீமோதெரபிக்கு முன் நோயாளியின் விந்துவைப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது விந்தணு பாதுகாக்கப்பட்டது. பின்னர் நோயாளி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்.

இந்த நோயாளி செப்டம்பர் 2020ஆம் ஆண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நோயாளியின் மரணத்திற்குப் பிறகு, 'சர் கங்கா ராம்' மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த விந்தணுவை, அவரின் பெற்றோரிடம் திருப்பித் தர மறுத்ததால்  விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானபோது, வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

இச்செய்தியின் மூலம், ஆடவர்களின் விந்தணு புற்று நோயால் பாதிக்கப்படும் என்பதை அறிய இயலுகிறது.

லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்ட 'கொரோனா' தொற்றாலும் உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London) ஆய்வின்படி, கோவிட்-19(Coronavirus) காரணமாக, விந்தணு எண்ணிக்கை(Sperm Count) மற்றும் விந்தணு இயக்கம் ஆகியவற்றில் பாதிப்பு உள்ளது. கோவிட் நோயிலிருந்து மீண்டு பல மாதங்களாகியும் ஆண்களின் விந்தணுவின் தரம் மோசமாகவே உள்ளது[https://zeenews.india.com/tamil/world/surprising-claim-surfaced-does-corona-affect-sperm-count-377902]. இந்தச் செய்தி அதற்குரிய ஆதாரமாக உள்ளது.

ஆக, இந்த இரு நோய்கள் தவிர வேறு தொற்று நோய்களாலும், அவற்றிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் எதிர் விளைவுகளாலும், உயிரணுக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று உறுதிபடச் சொல்லலாம்.

மேற்குறிப்பிடப்பட்ட இளைஞனுக்கு நிகழ்ந்தது போல், தங்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று அஞ்சி, எதிர்காலத்தில், திருமணம் ஆகாத இளைஞர்களும், மணமாகியும் குழந்தைக்குத் தந்தை ஆகாதவர்களும், குழந்தை இருந்து இன்னும் வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் தம் விந்தணுக்களைச் சேமித்துக்கொள்ளும் நிலை உருவாகலாம்.

இந்தச் சேமிப்பு முறை இப்போதே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிகிறது[பொதுவாக ஆண்களுக்கு வயதாகும்போது ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. எனவே, வயதான காலத்தில்கூட, குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஆண்கள் இந்த செயல்முறையை செயல்படுத்தலாம்.https://tamil.samayam.com/lifestyle/health/sperm-freezing-for-future-fertility-procedure-and-risks-in-tamil/articleshow/79693060.cms?story=1]. ஆனால், மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றிடவில்லை.

இனியேனும், வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சேமிப்பு நிலையங்கள் மீது முழு நம்பிக்கை வைப்பது சாத்தியம் ஆகாத நிலை உருவானால், அவரவர் வீட்டிலேயே விந்தணுவை ஆண்டுக்கணக்கில் பாதுகாத்துக்கொள்வதற்கான சாதனங்கள் கண்டுபிடிக்கப்படும் நாளும் வரக்கூடும்.

இளவட்டங்கள் அந்த நாளுக்காகக் காத்திராமல், புகைத்தல், மது அருந்துதல், போதைக்கு அடிமையாதல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை வெறுத்தொதுக்கி, உடல்நலம் பேணுவதில் அதீதக் கவனம் செலுத்துதல் மிக மிக மிக அவசியம்.

================================================================== 


ஞாயிறு, 22 மே, 2022

'முதுமை'... ஒரு கவிஞனின் பார்வையில்.....

 

நன்றி: பேராசிரியர் 'ந.பிச்சமுத்து'வின் 'இலக்கிய இயக்கங்கள்'; சக்தி வெளியீடு, சென்னை.

சனி, 21 மே, 2022

ரஷ்ய அதிபர் 'புடின்' திருந்துவாரா? எப்போது?!

வாரங்கள் பல கழிந்தபோதும் உக்ரைன் போரில் வெற்றி பெற இயலாத நிலையில், தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக புடின் உளறிக் கொட்டி உலக மக்களை அலற வைத்திருக்கிறார்.

இவர் திருந்தவே மாட்டாரா? திருத்தவும் வழி இல்லையா என்று இரவு பகலாகச் சிந்தித்ததில் அடியேனுக்குச் சில வழிகள் தென்பட்டன. அவை.....

1.ரஷ்ய நாட்டு மக்கள் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்து இவருக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைத் தொடங்கலாம்.

2.இந்தியா, சீனா, பாகிஸ்தான் முதலான நடுநிலை வகிக்கும் அத்தனை நாடுகளும் புடினை எதிர்க்கும் நாடுகளின் வரிசையில் தங்களை இணைத்துக்கொண்டு போரை நிறுத்தும்படி அவருக்கு எச்சரிக்கை விடுக்கலாம்.

3.புடின், மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதோடு, புற்றுநோயாலும் நடுக்குவாதத்தாலும் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவதாக உலக அளவில் நம்பப்படுகிறது. அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மூலம் உரிய மருந்துகளைச் செலுத்தி அவரை முழுப் பைத்தியம் ஆக்கலாம். அது நிகழ்ந்தால் அதிபர் பதவியிலிருந்து அவர் விலகுவது அல்லது விலக்கப்படுவது நிச்சயம்.

4.உலகிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து, புடினைத் திருத்தும்படி தத்தம் கடவுள்களை நினைத்துக் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

5.புடினின் கள்ளக் காதலி[ரஷ்யாவின் புகழ்பெற்ற பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை 'அலினா கபேவா'(வயது 38), என்பவர் ஸ்விட்சர்லாந்தில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது https://tamil.oneindia.com]. உலக அளவில் அமைதியை நிலைநாட்ட விரும்பும் முக்கியத் தலைவர்கள் இணைந்து ரகசியமாக அவரைச் சந்தித்துப் பேசி, உடனடியாக உக்ரைன் போரை நிறுத்தும்படி புடினைக் கட்டாயப்படுத்தச் சொல்லலாம்.

கடைசியாகச் சொல்லப்பட்ட இந்த வழிமுறையே நடைமுறை சாத்தியமானது என்று சொல்லத் தோன்றுகிறது. உயிருக்குயிரான 'கள்ள'க் காதலி சொல்லித் திருந்தாவிட்டால் புடினைத் திருத்த வேறு வழியே இல்லை. 

இல்லவே இல்லை!! ஹி... ஹி... ஹி!!!

================================================================== 


வெள்ளி, 20 மே, 2022

பெரியாரின் பிடிவாதக் குணமும் அதீதப் புத்திசாலித்தனமும்!!!

பெரியார் மிகச் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, இளம் வயதில் கலைப் படைப்புகளை ரசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். குறிப்பாக,  நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு நாட்டியக்காரியின் நடன நிகழ்வு எங்கு நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சிக்குச் சென்று நடனத்தைக் கண்டு களிப்பதை வழக்கமாக்கிகொண்டிருந்தார்.

ஒரு முறை, மைசூர் மகாராஜ திருமண நிகழ்ச்சியில் அந்த மாதுவின் நடனக் கச்சேரி இடம்பெற இருப்பது பெரியாருக்குத் தெரியவந்தது.

குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு மைசூர் சென்றார் பெரியார்.

அங்குச் சென்ற பிறகுதான் நடனக் கச்சேரியைக் காண்பதற்குப் பிரபலமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். அப்போது அவர் பிரபலமானவராக இல்லாததால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மனம் வருந்தினார்.

ஆயினும், தனக்குப் பிடித்தமான நாட்டியக்காரியின் நடனத்தைக் கண்டு இன்புறாமல் ஊர் திரும்ப அவர் மனம் ஒப்பவில்லை. 

தீவிரமாகச் சிந்தித்து, நாட்டிய அரங்குக்குள் நுழைவதற்கான வழியையும் கண்டறிந்தார். அது..... 

பெரியார் தான் தொடங்கிவிட்ட எந்தவொரு செயலையும் முடிக்காமல் விடமாட்டார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

பெரியார் கையாண்ட தந்திரம்.....

அருகிலிருந்த கடைவீதிக்குச் சென்று ஒரு ஜோடிக் கைத்தாளத்தை [ஜால்ரா] வங்கிக்கொண்டு வந்தார்; நாட்டியக் குழுவினரைச் சம்மதிக்க வைத்து, அவர்களில் ஒருவராக[ஜால்ரா தட்டுபவர்] அரங்குக்குள் நுழைந்தார். தனக்குப் பிடித்தமானவரின் நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து மனம் குளிர்ந்தார்!
=============================================================
ஆதார நூல்: 'எஸ்.அனிதா'வின் 'அறிவுக்கு விருந்தாகும் அரிய குறிப்புகள்'; சூர்யா பதிப்பகம், சென்னை. பதிப்பு: 2013.

வியாழன், 19 மே, 2022

"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை"... சொல்லும் இஸ்லாமியப் பெண்!!!

டை உடுத்துவதில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு என்றாலும், பொது இடங்களில் ஆணின் கவனத்தை ஈர்க்காத அளவுக்கு உடை உடுத்துவது நல்லது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதை இஸ்லாமியப் பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குறை சொல்ல இயலாத அளவுக்கு நடந்துகொள்கிறார்கள்.

ஆனால், இது விசயத்தில் இங்கு எப்படியோ, ஆப்கானிஸ்தான் பெண்கள் நடத்தப்படும் விதம் மனித குலத்தை வெட்கித் தலை குனிய வைப்பதாக உள்ளது.

எல்லை கடந்த, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

பெண் உரிமையை மீட்பதற்காக மட்டுமாவது உலக நாடுகள், இவர்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுப்பது மிக மிக மிக அவசியம்.

மதம், கடவுள் ஆகியன குறித்தும் இஸ்லாம் பெண்கள் தங்களின் கருத்தைப் பொது வெளியில் சொல்வதற்கான சூழலும் உருவாக்கப்படுதல் வேண்டும். 

இன்றுள்ள சூழலில், ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு பெண், தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று 'பிபிசி' யிடம் சொல்லியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க செயலாகும்.

இனி, ஆப்கானிஸ்தானில், பெண்கள் தலிபான் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து  நடத்தும் போராட்டங்கள் குறித்த 'பிபிசி' செய்தியை வாசிக்கலாம்.

#"தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சந்தித்த தையல்காரரும்கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்" என்று சொல்லும் 'சோர்ச்யா' ஆப்கானிஸ்தான் நாட்டுப் பெண்.

காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் 'சோரயா'. இவர்,  இந்த வாரம் மேற்குக் காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, "தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்கடைகளுக்குள் இருந்தபடி, கடைக்காரர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் குறித்தும், தையல்காரர்களால் தயாரிக்கப்படும் பெண்களின் ஆடை  அளவு குறித்தும் விசாரிப்பதைக் காண நேர்ந்தது.  இது என் மனதில் அச்சத்தை உண்டுபண்ணியது" என்றார்.

"ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாக இருப்பதே குற்றம் போல இருக்கிறது. எனக்கு ஆடை விஷயத்தில் அவர்கள் என்ன தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் எப்படியும் என் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இல்லை. நிலைமை மிகவும் நம்பிக்கையற்று இருக்கிறது" என்று தாலிபன் கையப்படுத்தியதால் வேலையை இழந்து பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் 'சனா' கூறினார்.

பெரும்பாலான ஆப்கன் பெண்கள் ஏற்கெனவே தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஹிஜாப் அணிந்துள்ளனர். ஆனால், புதிய கட்டுப்பாடுகளின்படி பெண்கள் முழு நிகாப் (கண்கள் பகுதியில் மெல்லிய இடைவெளி கொண்ட முகத்திரை) அணியவேண்டுமாம்.

அவர்களின் மஹ்ரம் அல்லது ஆண் பாதுகாவலர், பொதுவாக நெருங்கிய ஆண் உறவினராக இருப்பார். அவர்கள், வீட்டுப் பெண்களின் ஆடையைக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அமைச்சக அதிகாரிகளைச் சந்திக்க அனுப்பப்படலாம்; நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

புதிய கட்டுப்பாடுகளின் தாக்கத்தை உணர்ந்த சில பெண்கள் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்துக் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.

காபூலில் ஒரு குழு இந்த வாரம், மரபு ஆப்கானிய ஆடைகளை அணிந்து ஆடை குறித்த அரசாணையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

"கடந்த 8 மாதங்களில் தாலிபன்கள் எங்களின் ஆடைகளை கண்காணிப்பதைத் தவிர எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நிலையின்மை நிலவுகிறது. தாலிபன்கள் இந்தப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கவில்லை" என்று எதிர்ப்பாளர் 'மரியம்' கூறினார்.

காபூலில் உள்ள பெண்ணுரிமை ஆர்வலர் 'அனோஷா', தானும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்ததாகக் கூறினார். "அரசாணை வெளியிடப்பட்ட முதல் நாள், நான் எனது 12 வயது மகனுடன் வேண்டுமென்றே எனது சாதாரண உடையை அணிந்துகொண்டு, என் முகத்தை மறைக்காமல் நகரப் பகுதிகளுக்குச் சென்றேன். தாலிபன் உறுப்பினரை எதிர்நோக்கி சவால்விட வேண்டும் என நினைத்தேன்" என்கிறார்.

தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் 'ஷேக்பா', அதிகாரிகளுடனான அவருடைய சண்டைக்குப் பிறகும்கூட, தான் ஆடை அணியும் விதத்தை மாற்றுவதற்கான எந்த அழுத்தத்தையும் எதிர்த்துப் போராட இருப்பதாகச் சொன்னார்.

ஷேக்பா மேலும் பேசியபோது, ஆப்கன் சமூகத்தில் தனது ஆடை விஷயத்தில், தனது குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் உட்பட அனைவரிடம் இருந்தும் எப்போதும் அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினார்.

இது மட்டுமே அவர் எதிர்கொண்ட தடையல்ல. ஷேக்பா ஈரானில் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதற்காக முயன்றபோது, விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டார்.

"என்னுடன் யாரையும் ஈரானுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று தாலிபன்களிடம் விளக்க முயன்றேன். அவர்கள் அதைக் கேட்கவில்லை," என்று வேதனை பொங்கச் சொன்னார்  ஷேக்பா.#

'சோர்ச்சயா', 'சோரயா', 'சனா', 'மரியம்', 'அனோஷா', ஷேக்பா' என்றிவர்கள் போல், ஆப்கானிஸ்தானில் தங்களின் மனக் குமுறலை வெளிப்படுத்த இயலாமல் முடங்கிக் கிடப்பவர்கள் எத்தனைப் பேரோ?!

==================================================================

https://www.bbc.com/tamil/global-61472257


புதன், 18 மே, 2022

'Big Bang'[பெரு வெடிப்பு] தெரியும்! அதென்ன 'Big Crunch'?!...'Big Rip?!

'Big Bang' என்று சொல்லப்படுகிற 'பெரு வெடிப்பு'இன் மூலம் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ, அது போலவே  2.8 பில்லியன் - 22 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுருங்கி ஒரு கருந்துளையாக அது மாறிவிடும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்[நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். ஆனாலும் அது தோன்றுவதும் மறைவதுமாக இருந்துகொண்டுதான் இருக்கும். அதாவது, பெரு வெடிப்பு மற்றும் 'பெரும் குழைவு' ஆகிய நிலைகளைப் பிரபஞ்சம் மாறி மாறி அடையும் -'விக்கிப்பீடியா'].

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வானியற்பியல் விரிவுரையாளர் 'தாமஸ் கிச்சிங்' என்பவர்,  "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட, நீண்ட காலமாக விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது மற்றும் எல்லையற்றது என்று நினைத்தனர். ஆனாலும், அதற்கு ஒரு முடிவு இருக்கும் என்பது அறியத்தக்கது" என்கிறார். 

அந்த முடிவு எப்படி அமையலாம் என்பதற்கு மூன்று கோட்பாடுகள் உள்ளன என்கிறார்கள்.

முதல் கோட்பாடு: 

விரிவடைந்துகொண்டிருக்கும் பிரபஞ்சம் ஒரு பெரிய பிளவுடன்[Big Rip] முடிவடையும் என்று நம்பப்படுகிறது. காரணம், பிரபஞ்சத்தின் விரிவாக்கச் சக்தி அதில் உள்ள ஈர்ப்பு விசையைவிட வலுவானது என்பதே. பிரபஞ்சத்தின் விரிவாக்கம் 'அதிகபட்ச அளவை'த் தொடும்போது பிரபஞ்சம் பிளவுபடுதல் நிகழும். 

விரிவாக்கம் ஒரு எல்லையைக் கடந்துவிடும் நிலையில், உருவாகும் சக்தி விண்மீன் திரள்களைத் துண்டாக்கும்; பூமி முதலான கோள்களைச் சிதைக்கும். 

கடந்த ஆண்டு, டென்னிசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் கணித உதவிப் பேராசிரியரான 'மார்செலோ டிஸ்கான்சி', இயற்பியல் பேராசிரியர்களான 'தாமஸ் கெபார்ட்' மற்றும் 'ராபர்ட் ஷெரர்' ஆகியோருடன் இணைந்து, 'பிக் ரிப்'பிற்கான புதிய கணித மாதிரியை உருவாக்கினார்.

இரண்டாம் கோட்பாடு:

இது, 'பெரும் அண்டக்குழைவு'[Big Crunch] என்று அழைக்கப்படுகிறது.

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கையில்,   புவியீர்ப்பு ஆதிக்கச் சக்தியாக மாறி, பிரபஞ்சத்தை சுருங்கச் செய்து, நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் முழு விண்மீன் திரள்களையும் ஒன்றோடொன்று மோதச் செய்து அழிவை உண்டுபண்ணும்.

மூன்றாவது கோட்பாடு: 

இது, பிரபஞ்சம் ஒரு பெரிய உறைபனியால்[Big Freeze] முடிவடையும் என்று கூறுகிறது. அது, 'வெப்ப உறைவு'[Heat Death]'] என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறான காரணங்களால் அழியும் இந்தப் பிரபஞ்சம், பின்னர் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் பெருவெடிப்பினால் மீண்டும் தோன்றுவது சாத்தியமாகலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் அதன் அழிவுக்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றனர்[Certain researchers even suggest the process of its demise has already begun].

இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது என்னவென்றால்.....

பேரழிவு[Big Crunch] நேரும்போது பிரபஞ்சக் கரைசலுக்குள் கலந்து நம் மனித குலம் காணாமல் போகும் என்பதுதான்!

நம்மைப் போன்ற சாமானியர்கள் அழிந்தொழிவது ஒரு பொருட்டல்ல; கடவுளின் அவதாரம் என்றும் மரணத்தை வென்றவர்கள் என்றும் நம்மவர்களால் புகழ்ந்து வழிபடப்படுகிற அவதாரங்களும் மகான்களும்கூட, பிரபஞ்ச அழிவு என்னும் ஊழிப் பெருவெள்ளத்தில் கரைந்து மறைந்து போவார்களா?

மாறாக.....

கடவுளின் திருவடிகளின் கீழ் அமர்ந்து, பிரபஞ்சப் பேரழிவுக் காட்சியை வேடிக்கை பார்த்து மகிழ்ந்துகொண்டிருப்பார்களா?! ஹி...ஹி...ஹி!!!

==================================================================

***தலைப்புக்குத் தேவையான தகவல்களை[தெளிவாகப் புரிந்தவை] மட்டுமே தொகுத்துப் பதிவாக்கியிருக்கிறேன். கட்டுரையை முழுமையாக வாசிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியைக் 'கிளிக்' செய்து உள்நுழையலாம்.

https://www.wired.co.uk/article/how-will-universe-end  


செவ்வாய், 17 மே, 2022

இந்திய உளவுத்துறை எச்சரிக்கையும் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கமும்!!!

#இலங்கையில் மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, தி இந்து நாளிதழ் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர், இந்தியப் புலனாய்வுத் துறையிடம் விடயங்களை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து, இது சாதாரணமான ஒன்றுதான் என இந்திய உளவுத்துறை, இலங்கைப் புலனாய்வுத் துறையிடம் கூறியுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது[https://www.bbc.com/tamil/sri-lanka-61454566]#

இது, நேற்று[16.05.2022] அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள செய்தி.

நம்மை வியப்பில் ஆழ்த்துவது என்னவென்றால்.....

'சாதாரணமான ஒன்றுதான்' என்று சொல்லுகிற உளவுத்துறை, தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டது எப்படி?

இலங்கையில் 'விடுதலைப் புலி' இயக்கத்தினர்[அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் உள்ளடக்கம்] முற்றிலுமாய் அழிக்கப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.

உண்மை இதுவாக இருக்கையில், பிழைப்புக்கு வழி தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள், குழு சேர்ந்து இலங்கை வந்து தாக்குதல் நடத்தப்போகிறார்கள் என்ற ஒரு செய்தியை இந்திய உளவுத்துறை ஏன் வெளியிட வேண்டும்? 

உரிய விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசிடம் இந்திய உளவுத்துறை தெரிவிக்குமாம். புலியோ பொதுமக்களோ, அவர்களைக் கட்டுப்படுத்துவது இலங்கை அரசின் வேலை. அதில் இந்திய உளவுத்துறை பங்காற்றுவதன் உள்நோக்கம் என்ன?

பங்காற்றும் அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள்தான் என்ன? அவர்கள் இந்தியாவின் எதிரிகளா?

மேற்கண்ட அனுமானச் செய்தி புலிகள் மீது வெறுப்புணர்வை வளர்க்காது. ஏனென்றால், புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆதாரம் எதையும் இலங்கை அரசோ இந்திய அரசோ வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்.....

இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி, தமிழ் மக்களின் மீது வெறுப்புணர்வை வளர்க்கும், அல்லது, இலங்கையில் அரை வயிற்றுக்குக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழர்களைச் சிங்கள அரசு சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தூண்டும் என்பது உளவுத்துறைக்குத் தெரியாதா?

விடை அறிய இயலாத கேள்விகள் இவை!?

ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் இவற்றிற்கு விடை கண்டறிய முயற்சி செய்யலாம்!

==================================================================


திங்கள், 16 மே, 2022

இணைய எழுத்தாளர்களுக்குச் சில எச்சரிக்கைகள்!!!


'இணையத் தொழில்நுட்பம்' கற்றவர்கள் இன்று எது எதற்கெல்லாமோ இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அழகுப் பெண்களை வசப்படுத்தல், ஆவணங்களை நகலெடுத்துப் பிறரின் வங்கிப் பணத்தைக் களவாடுதல், ஆபாசப் படங்களும் காணொலிகளும் பார்த்து ரசித்து இன்புறுதல், பிறரின் கடின உழைப்பில் உருவான படைப்புகளைத் திருடித் தன் உடைமை ஆக்கிக்கொள்ளல் என்றிப்படியான பல கெட்ட செயல்களுக்கு இந்தக் கணினித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தவொரு அவலத்தை எதிர்பார்த்துத்தானோ என்னவோ, பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவிலுள்ள கணிப்பொறி நிறுவனம் ஒன்று[Computer Ethics Institute] கணினியில் எழுதுபவர்கள் பின்பற்றுதற்குரிய முக்கிய நெறிகளைப் பட்டியலிட்டுள்ளது.

அவை.....

*நீ கற்றறிந்த இந்தக் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவருக்கும் தீங்கு செய்திட நினைக்காதே.

*இதன் மூலம் உனக்கு நீயே கேடு விளைவித்துக்கொள்ளாதே.

*பிறர் பொருளையோ பணத்தையோ திருடும் இழி செயலைச் செய்யாதே.

*பிற கணினி எழுத்தாளர்கள் எழுதிச் சேமித்துவைத்திருக்கும் படைப்புகளைக் களவாடி அவற்றிற்குச்  சொந்தம் கொண்டாடுவது மிக மிக அற்பத்தனமான செயலாகும்

*அடுத்தவருக்குச் சொந்தமான கணிப்பொறிக்குள் திருட்டுத்தனமாய் உள்நுழைந்து அதிலுள்ள வசதிகளை உன் கணினியில் ஏற்றிடும் முயற்சி வேண்டாம்.

*மிக முக்கியக் கோப்புகளாயின் அவற்றை விலை கொடுத்து வாங்கு. குறுக்கு வழிகளில் அதை நகலெடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

*பிறர் மீது பொய்ப்பழி சுமத்துவதற்கோ பொய்ச் சாட்சி சொல்வதற்கோ கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

==================================================================
***பழைய 'கம்ப்யூட்டர் உலகம்'[டிசம்பர் 2000] இதழிலிருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பு இது.


ஞாயிறு, 15 மே, 2022

'புடின்' ரத்தக் குளியலும் 'உக்ரைன்' போர் நிறுத்தமும்!!

விளாடிமிர் புடினுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவரும் நிலையில், அது என்ன வகையான புற்றுநோய் என்பது குறித்தும் தெரியவந்துள்ளதாக https://news.lankasri.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தைத் தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலையில் கோளாறு இருப்பதை அவரின் சமீபத்திய வெளித் தோற்றங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

தகவலின்படி, புடின் வயிற்றுப் புற்றுநோய், 'நடுக்கவாத நோய்'[பார்கின்சன்] ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது[18 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு இந்த நோய்கள் தொற்றியிருக்கின்றன].

சமீபத்தில் மட்டும் 35 முறை புற்றுநோய் மருத்துவரிடம் சென்று அவர் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். மான் கொம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரத்தத்தில் புடின் குளிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருவகையான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது போன்ற குளியல் இருதய அமைப்பை மேம்படுத்துவதாகவும் சருமத்தைப் புதுப்பிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

***இந்தக் கெட்ட செய்திக்கிடையே, ரஷ்ய நாட்டு வீரர்கள் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான [அமைதிப்] பணிகளைத் தொடங்கியிருப்பதாக, சற்று முன்னர்[காலை 6.35 மணி] 'பாலிமர்' தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது போர் நிறுத்தத்திற்கான முன்னோட்டமாக இருப்பின் பெரிதும் வரவேற்கத்தக்கது.

புடின் நல்லவரோ கெட்டவரோ, அரசியல் சூழல் அவரைப் போர் தொடங்கத் தூண்டியிருக்கலாம். உக்ரைன் தாக்குதலை நிறுத்துவதோடு, மன உறுதியுடன் போராடிப் புற்றுநோயிலிருந்து அவர் முற்றிலுமாய் விடுபடுதல் வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான விருப்பம்.

வாழ்க புடின்! வளர்க 'ரஷ்ய-உக்ரைன்' நட்பும் உலக அமைதியும்!!

==================================================================

https://news.lankasri.com/article/putin-bath-deer-antelers-blood-cancer-disease-1651547497

சனி, 14 மே, 2022

பெரியார், 100% அதே பெரியாராக மீண்டும் வருவார்!?


ண்டவெளியிலுள்ள[பூமி உட்பட] பொருள்களிலோ உயிர்களிலோ ஒன்றைப் போல் இன்னொன்று இருந்ததில்லை; இருந்துகொண்டிருக்கவுமில்லை' என்று விஞ்ஞானிகள் சொல்வதாக ஆய்வியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கு மூலக்கூறாக விளங்குகிற கோடி கோடி கோடானுகோடியோ கோடி 'அணுத்திரள்'களிலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை என்கிறார்கள்.

புதிது புதிதாக அணுக்களும் பொருள்களும் உயிர்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதாவது, பழையன கழிந்து புதியன புகுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தோன்றிக்கொண்டிருக்கிற எந்த ஒன்றும், தோன்றி மறைந்த இன்னொன்றைப் போல இல்லை என்பது மிகப் பெரிய விந்தை.

இந்த விந்தை தன்னிச்சையாய் நிகழ்கிறதா அல்லது நிகழ்த்தப்படுகிறதா?

நிகழ்கிறது எனின் இது இயற்கை. நிகழ்த்தப்படுகிறது எனின் இது கடவுள்[கடவுள் தோன்றியது எப்படி? படைப்பாற்றல் அவருக்கு எப்படி வாய்த்தது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை பகர்ந்தவர் எவருமிலர்] எனப்படுபவரின் சாகசமாக இருக்கக்கூடும்.

ஒன்றைப் போல இன்னொன்று உருவாதல் என்னும் நிகழ்வு, கடந்த காலங்களில் இல்லை[?]; நிகழ்காலத்திலும் இல்லை.

இந்நாள்வரை இல்லை என்றாலும், எதிர்காலத்திலேனும் ஒன்று போல்  இன்னொன்று [தன்னிச்சையாகத்] தோன்றுமா? அல்லது, கடவுள் எனப்படுபடுபவர் தோற்றுவிப்பாரா?

எடுத்துக்காட்டாக.....

ஒரு திருவள்ளுவரைப் போல் இன்னொரு திருவள்ளுவரும் பெரியாரைப் போல் இன்னொரு பெரியாரும் தோன்றுவார்களா, தோற்றுவிக்கப்படுவார்களா?

அறிஞர் 'பசி'பரமசிவம் போல்[ஹி...ஹி...ஹி!!!] அச்சு அசலாக இன்னொரு அறிஞர் இம்மண்ணில் பிறக்கும் அதிசயம் நிகழுமா?!

எப்போது?

==========================================================================

வெள்ளி, 13 மே, 2022

இந்தி வளர்ச்சிக்கு வாரி வழங்கும் 'இந்தி'ய அரசு!!!

 

ஐ.நா.சபையிடம், இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க 'இந்தி'ய அரசு ரூ6.16 கோடியை வாரி வழங்கியிருக்கிறது[இது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு]. உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரிடம் இந்தியைக் கொண்டுசெல்லும் நடவடிக்கையாம் இது. இது நேற்றைய[12.05.2022] செய்தி.

உலகெங்கிலும் தமிழ் பேசுவோர் தொகையும் இலட்சக்கணக்கில்தான்[கோடிக்கணக்கில்!] இது 'இந்தி'ய அரசுக்குத் தெரியாதா?

தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, எத்தனை முறை எத்தனைக் கோடி ரூபாய்களை எங்கெல்லாம் இந்த 'இந்தி'ய அரசு கொடுத்திருக்கிறது.

இந்தி, பெரும்பான்மையோரால் பேசப்படுகிற மொழி[உண்மையில் 35%தான்] 44% என்று வைத்துக்கொண்டாலும்[https://timesofindia.indiatimes.com/india/hindi-mother-tongue-of-44-in-india-bangla-second-most-spoken/articleshow/64755458.cms], அது மட்டுமே வளர்ந்திட வேண்டும்; ஏனையோரால்[56%] பேசப்படும் மொழிகள் சீந்துவாரற்றுச் சிதைந்து அழிய வேண்டும் என்று ஒன்றிய அரசை நிர்வகிப்போர் ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம்?

ஏன் இந்த ஓரவஞ்சனை?

இந்தியின் வளர்ச்சியில் மட்டுமே கருத்துச் செலுத்தினால், மற்ற மாநில மொழிகள் தாமாக அழிந்துவிடும். மொழி அழிந்தால், அம் மொழி பேசுவோரின் இன உணர்வும் காலப்போக்கில் அழிந்தொழிவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தி மட்டுமே இந்தியாவை ஆளும். இந்தியத் தாய்மொழியாகக் கொண்டவர்களோ, அதி தீவிரமாய் அதை ஆதரிப்போரோ நிரந்தரமாய் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை ஒன்றிய அரசின் அதிகார வர்க்கம் மிக நன்றாகப் புரிதுகொண்டிருக்கிறது[ரஷிய மொழி ஆதிக்கத்தால் உடைந்து சிதறிய சோவியத் யூனியனை அடியோடு மறந்துவிடுகிறார்கள்].

இந்தியை மட்டுமே பேணி வளர்க்கும் இவர்களின் தொடர் முயற்சியைக் கண்டித்துத் தமிழர்கள் மட்டுமே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கன்னடர்களும், கடவுள் தேசத்து மலையாளிகளும், சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்களும் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?

விழித்தெழுந்து மிகு துடிப்புடன் இவர்கள் குரலெழுப்பிப் போராடும் நாளும் வருமா?

ஆதங்கத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருப்போம்!
==========================================================================

வியாழன், 12 மே, 2022

39+1=40!!!

39உடன் 1ஐக் கூட்டினால் 40தான்.  எதுக்கு இப்படியொரு தலைப்பு என்று கேட்கத் தோன்றுகிறதுதானே?

'அமேசான் கிண்டெலில் என் 40ஆவது நூல்' என்று தலைப்பிட்டிருந்தால் வாசிக்க மனமில்லாமல் கடந்துபோகிறவர்களை, வருகை புரிய வைக்கும் ஓர் உத்திதானே தவிர வேறொன்றுமில்லை[ஹி... ஹி... ஹி!!!]!

புதிய நூல் குறித்த விவரங்கள் தலைப்பில்[Header] உள்ளன.

ஏற்கனவே அமேசான் கிண்டெலில் வெளியான 39 நூல்கள் பற்றிய விவரங்கள் கீழே.

வருகைக்கு நன்றி!

                                          *   *   *   *  *
வலைத்தளத் தலைப்பு[Header]:



புதன், 11 மே, 2022

'பாலுறவு'... மனிதர்கள் செய்ததும், செய்வதும், செய்யத் தவறியதும்!!!

னிதர்கள் விலங்காக வாழ்ந்தவரை இனவிருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது.

சிந்திக்கும் அறிவு வாய்த்த பின்னர், அதற்கான நேரத்தை அதிகரிப்பதிலும், அதன் மூலம் பெறும் சுகத்தைப் பன்மடங்காக்குவதிலும் ஆர்வம் காட்டினார்கள் அவர்கள்; ஆய்வுகளும் நிகழ்த்தினார்கள்.

கணிசமான அளவு வெற்றியும் கண்டார்கள்.

லேகியங்கள், பஸ்பங்கள், கிரீம்கள் என்று எதையெதையோ பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்; அந்தரங்கப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்; அண்மையில் கண்டறியப்பட்ட 'வயாகரா'வை இதற்கான 'வரப்பிரசாதம்' என்கிறார்கள்.

"இது போதும்" என்று மனம் திருப்தி அடையாத நிலையில் புதிய புதிய சாதனங்களைக் கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்.....

ஆறாம் அறிவைப் பெற்றதன் விளைவாக, அன்று உடலுறவின் மீதிருந்த இயல்பான 'ஆசை' அதீத வெறியாக மாறியிருப்பதை உணரத் தவறினார்கள்.. விளைவு.....

பாலியல் அத்துமீறல்கள், முறையற்ற உடலுறவுகள், சிறுமிகளையும் இளம் பெண்களையும் கடத்திச் சென்று வல்லுறவு கொள்ளுதல், இரவு நேரக் களியாட்டங்கள், குத்துவெட்டுகள், கொலைகள் என்று பாலியல் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டன.

குற்றவழக்குத் தண்டனைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை. இதற்குரிய மனப் பக்குவத்தைப் பெறுவதற்கான பயிற்சிகள் மீதும் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லை.

இக்காரணங்களால், பாலுறவு இன்பத்தையும் அதற்கான நேரத்தையும் அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் செலுத்திய அதே ஆர்வத்தை, பாலுணர்வு வெறியைக் குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான சாதனங்களைக் கண்டுபிடிப்பதிலும் செலுத்தியிருக்க வேண்டும்.

செலுத்தவில்லை.

மனித இனம் செய்யத் தவறிய மாபெரும் குற்றம் இதுவாகும்.

அறிவியல் அறிஞர்களையும், மருத்துவத்துறை நிபுணர்களையும் ஊக்குவித்துத் பாலியல் வெறியைக் குறைப்பதற்குத் தேவையான வழிவகைகளையும் சாதனங்களையும் கண்டறிந்து, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் உடனடித் தேவையாகும்.

இதை மனதில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆட்சியாளர்கள்&சமூக ஆர்வலர்கள் போன்றோர் கடமையாகும். 

==========================================================================


செவ்வாய், 10 மே, 2022

பெண்மை போற்றுகிறதா புண்ணிய பாரதம்?!

ண்ணையும் மழையையும் ஆறுகளையும் பெண்ணாக உருவகித்துப் போற்றி வழிபட்டுப் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நாடாக உலக அளவில் அறியப்பட்டது 'புண்ணிய பூமி' எனப்படும் பாரதம்[இந்தியா].

இது விசயத்தில் இது ஒரு 'பாவ பூமி' என்பதை உறுதிப்படுத்துகின்றன 2011 இல் நிகழ்த்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள். 

எவ்வகையிலெல்லாம் பெண்ணினம் இங்குச் சீரழிவுகளுக்கு உள்ளாகிறது என்பதற்கான பட்டியல்[இணையத் தளங்களிருந்து தொகுக்கப்பட்டது] பின்வருமாறு:

*மக்கள் தொகை அடிப்படையில், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் நாடுகளில் முதலிடம் பெற்றிருப்பது இந்தியாதான்.

*20 நிமிடங்களுக்கு ஒரு வன்புணர்வு இங்கு அரங்கேற்றப்படுகிறது[2011 புள்ளிவிவரம்]

*இது தொடர்பாகக் குற்றம் புரிந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே[25-26%] தண்டிக்கப்படுகிறார்.

*ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டனர்.

*பாதிப்புக்குள்ளான பெண்களில் 10க்கு ஒருவர் மட்டுமே வழக்குத் தொடுக்கிறார். மற்றவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.

*அந்தப் பத்துப் பேர்களிலும் சிலர் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டு வழக்கைத் திரும்பப் பெறுகிறார்கள். வழக்குகளைக் குறைத்துக் காட்டுவது காவல்துறையினரின் நோக்கமாக உள்ளது.

*தலித் இனப் பெண்கள் என்றால் காவல் நிலையம் செல்வதே வெகு அரிது.

*பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தப் புண்ணிய பூமி 4ஆம் இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகள் முறையே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகியவை.

*பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பதற்கு, ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து பெண்கள் ஒருங்கிணைந்து போராடுவதில்லை என்பது முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்கள் ஒப்புக்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள்; குற்ற நிகழ்வுகளுக்குப் பெண்களைக் காரணம் ஆக்குகிறவர்களும் உள்ளனர். ஆண்களால் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த அமைப்புகள்கூட பெண்களுக்காகக் குரல் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*இறுதியாக இடம்பெறும் இந்தத் தகவல் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும். அது.....

தொடுக்கப்படும் கிரிமினல் குற்ற வழக்குகளைவிடவும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் இங்கு அதிகம் என்பதே!

==========================================================================