எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 4 செப்டம்பர், 2023

உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ள ஒரு கழிசடைக் காவி!!!

 

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்தவன் சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா. காவி உடுத்த ஒரு காட்டுமிராண்டி.

சனாதனம் குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருபவருக்கு 10 கோடி ரூபாய் பரிசளிப்பதாக இவன் அறிவித்துள்ளான் என்பது பல ஊடகங்களிலும் வெளியாகியுள்ள செய்தி.


முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதை எரித்திருக்கிறான் இந்தக் கழிசடை.


சனாதனத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதன் பயன் இவனைப் போன்ற காட்டுமிராண்டிகளை வளர்த்துவிடுவதுதான் என்பதை, அதை ஆதரிப்போர் இப்போதாவது புரிந்துகொள்ளுதல் வேண்டும்.


ஏற்கனவே, மூடநம்பிக்கைகளை வளர்த்து முட்டாள்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடம் ஏறியவர்களால்தான் இம்மாதிரியான மழுங்கல் மூளையர்கள் பலர் இந்த மண்ணில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.


சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடையப்போவதாக அறிவித்துவிட்டுப் பின்வாங்கியவன் இந்தப் பீச்சாண்டி என்கிறார்கள்.


உண்மையிலேயே ஜலசமாதி அடைய வேண்டியவன்தான் இந்த  அழுக்குச் சாமியார்.


இவன் ஜலசமாதி ஆகும் அற்புதக் காட்சியைப் பார்க்க நம் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் ஆசைப்படுகிறார்கள் என்பது சற்று முன்னரான தொ.கா. செய்தி.


இவனை இங்கு அழைத்துவந்து, இவன் ஜலசமாதி ஆவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று நம் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையார் அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்!


https://www.dailythanthi.com/News/India/paramahamsa-acharya-rs-10-crore-prize-for-beheading-udhayanidhi-stalin-1045278?infinitescroll=1


"சூப்பர் ஸ்டார் புதல்வியே, உனக்கு எதற்கு இந்தப் ‘பேட்டி’, ‘ஃபோட்டோ சூட்’ எல்லாம்?!”

பிரபல நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான செளந்தர்யா தன்னுடைய விவாகரத்து பற்றியும், புதிய காதல்[காதல் உண்மையா? அது எத்தனை முறை மலரும்?] பற்றியும் மனம் திறந்து பேசியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.*

ஒரு ஹோட்டலில்தான் அவரை(இரண்டாவது கணவர் விசாகன்) இவர் பார்த்துப் பேசினாராம். அங்கு இருந்துதான் இருவரும் ஒன்றாகப் பயணிக்க ஆரம்பித்தார்களாம்.

இது விசயத்தை அப்பா ரஜினிகிட்டே இவர் சொல்ல, ஒரு ஓட்டலில்[மீண்டும் ஓட்டலா? பீச்சு, பூங்காவெல்லாம் எதுக்கு இருக்கு?] இரண்டு பேரும் சந்திச்சிப் பேசணும்னு அவர் சொல்ல, அவர்[விசாகன்] இருந்த ஓட்டலுக்கு இவரே போனாராம்.

போய்.....?

சவுந்தர்யாவே சொல்கிறார்:

ரஜினிகாந்த்அப்புறம் நடந்ததை அம்மணியே சொல்லுகிறார்:

“இவரை நான் தேடிக்கொண்டே அந்தத் தனியார் ஹோட்டலுக்குச் சென்றேன். போட்டோ பார்த்திருந்ததால்[ஏற்கனவே அவரைச் சந்தித்திருக்கிறாரே, போட்டோ எதற்கு?] இவரைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். எங்கள் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்கும் இருக்கும் ஆன்மிக நாட்டம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ‘கனெக்ட்’ செய்ய வழி வகுத்தது அதுதான்…..” 

இன்னும் எதெல்லாமோ சொல்லி, முத்தாய்ப்பாக,

பெண்ணுக்கு முதன்முறையாகத் திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டால், அத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது[“இப்போதெல்லாம் அப்படி யாரும் எடுத்துக்கொள்வதில்லை குழந்தாய்”]. வாழ்க்கை சென்றுகொண்டேதான் இருக்க வேண்டும். அவரவர் கர்மாவிற்கு ஏற்பச் செயல்கள் நடந்தே தீரும்” என்று தத்துவார்த்தமாகப் பேசி முடிக்கிறார்.

இருவருக்குமான ஆன்மிக நாட்டம்தான் இருவரையும் ‘கனெக்ட்’ பண்ணினதா சொன்னவர், அப்புறம் ஏனோ கர்மாவுக்கு ஏற்ப எல்லாம் நடக்கும்” என்கிறார்.

உண்மையில் இரண்டு பேரையும் இணைத்தது காதலா, ஆன்மிகமா, கர்மாவா? மூன்றுமா?

எதுவாகவோ இருக்கட்டும்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்குப் பிறகு மறுமணம் செய்வதும், மறு மறு மணங்கள் புரிவதும் சமுதாயத்தில் இயல்பாக நடக்கிற நிகழ்வுதான்.

அதற்குக் காரணம் மனப் பொருத்தம், உடல் பொருத்தம் எல்லாம் அமையாமல் இருத்தல்.

சவுந்தர்யாவும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. ஏதோ ஒரு வகையிலோ பல வகைகளிலுமோ ஒத்துவராததால்தான் முதல் கணவனிடமிருந்து பிரிந்தார்.

இதில், பிறர் தலையிடவோ குற்றம் கண்டறியவோ உரிமை இல்லை.

அடுத்து ஒருவரைத் தேர்வு செய்ததும் தவறில்லை. தேவை நேர்ந்தால்[அது நடக்கவே கூடாது] இன்னும் பல திருமணங்களும் செய்யலாம்; தவறே இல்லை[ஆனால், ஒவ்வொரு தடவையும் காதல் கத்தரிக்காய் பண்ணியதாகப் புளுகக்கூடாது].

ஆனால்…..

ஆன்மிகம், கர்மா என்று ஏதேதோ பிதற்றி, பேட்டி கண்டவரையும், அதை வாசிப்பவர்களையும் மண்டை காய வைக்கிறாரே அதுதான் தவறு.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வம்புதும்புக்கெல்லாம் போகாமல், தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நல்ல மனிதர் நடிகர் ரஜினிகாந்த்.

முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு, இன்னொரு கணவரைத் தேடிக்கொண்ட ரஜினி மகள் சவுந்தர்யா, அதை இப்படிப் பேட்டி, ஃபோட்டோ சூட் என்று பகிரங்கப்படுத்தியிருப்பது[சினிமா நடிகைகளுக்கு இது விளம்பரமாக அமையும்] பெற்ற தந்தையின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, அவரின் புகழுக்குப் பங்கம் உண்டுபண்ணுவதுமான செயல் ஆகும்.

இவரின் இந்த விரும்பத்தகாத செயலை வேண்டுமானால், ரஜினி முற்பிறவிகளில் செய்த வினைகளின்[கர்மா] பலன் என்று சொல்லலாம்.

* * * *

கீழ்க்காணும் முகவரியை, copy-paste செய்க.

*https://tamil.hindustantimes.com/entertainment/soundarya-rajinikanth-love-story-soundarya-

rajinikanth-shares-divorce-and-his-husband-vishagan-love-131693759791544.html

'இந்தியா>பாரத்’ பெயர் மாற்றம்! மோகன் பாகவதருக்குக் கண்டனம்.

//அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் சகல் ஜெயின் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மோகன் பாகவத்’, ஆங்கிலம் பேசுபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அந்த[இந்தியா] வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ‘பாரதம்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்// என்பது இன்றைய[04.09.2023]க் காலை நேரச் செய்தி[‘சன்’ தொ.க., ‘இந்து தமிழ்’ போன்ற ஊடகங்களில் வெளியானது].


இந்த நாட்டில்[India] பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாகச் சொல்லப்படும் மொழி Hindi. ஆதிக்கம் செலுத்துபவர்கள், அல்லது அதை வைத்து ஆட்சியைக் கைப்பற்றுபவர்கள் Hindiயை உயிர் மூச்சாகக் கொண்டவர்கள்.

ஆகவே, ‘India' என்னும் பெயர் கூடாது என்றால், இந்த நாட்டை, ‘Hindia' என்று அழைப்பதே அறிவுடையார் விருப்பம் ஆகும்.

அல்லது.....

இது ‘Hindu'க்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், ‘Hindua' என்பது, 'India' வுக்கு மாற்றுப் பெயராக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இடம்பெற்றிட வாய்ப்பே இல்லை.

எனவே,

'India'வை ‘Barath' என்று அழைக்கச் சொல்லும் மோகன் பாகவதருக்கு[R.S.S.]கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

பரதன் என்றொரு மன்னன் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்வது, ஆதாரமற்ற வெறும் கட்டுக்கதை[புராணப் புளுகாக இருக்கலாம்]. அப்படியொரு மன்னன் மட்டுமல்ல, பாரதம் என்னும் பெயரில் அப்போது ஒரு நாடும் இருந்ததில்லை.

ஜெய் Hindiya! ஜெய் ஜெய் Hindua!!

* * * * *

முக்கியக் குறிப்பு: தமிழ் மொழியில், ஒரு பெயர்ச் சொல்லின் ஈற்றில்[இறுதியில்] மெய்யெழுத்து[க்,ச்,ட் போன்றவை] இடம்பெறுதல் கூடாது என்பது இலக்கண விதி என்பதால், ‘மோகன் பாகவத், 'அர்'விகுதி சேர்க்கப்பட்டு ‘மோகன் பாகவதர்’ ஆனார் என்பது அறியத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/1116820-we-all-should-stop-using-the-word-india-and-start-using-bharat-says-rss-chief-mohan-bhagwat.html