பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 4 செப்டம்பர், 2023

'இந்தியா>பாரத்’ பெயர் மாற்றம்! மோகன் பாகவதருக்குக் கண்டனம்.

//அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் சகல் ஜெயின் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மோகன் பாகவத்’, ஆங்கிலம் பேசுபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அந்த[இந்தியா] வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ‘பாரதம்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்// என்பது இன்றைய[04.09.2023]க் காலை நேரச் செய்தி[‘சன்’ தொ.க., ‘இந்து தமிழ்’ போன்ற ஊடகங்களில் வெளியானது].


இந்த நாட்டில்[India] பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாகச் சொல்லப்படும் மொழி Hindi. ஆதிக்கம் செலுத்துபவர்கள், அல்லது அதை வைத்து ஆட்சியைக் கைப்பற்றுபவர்கள் Hindiயை உயிர் மூச்சாகக் கொண்டவர்கள்.

ஆகவே, ‘India' என்னும் பெயர் கூடாது என்றால், இந்த நாட்டை, ‘Hindia' என்று அழைப்பதே அறிவுடையார் விருப்பம் ஆகும்.

அல்லது.....

இது ‘Hindu'க்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், ‘Hindua' என்பது, 'India' வுக்கு மாற்றுப் பெயராக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இடம்பெற்றிட வாய்ப்பே இல்லை.

எனவே,

'India'வை ‘Barath' என்று அழைக்கச் சொல்லும் மோகன் பாகவதருக்கு[R.S.S.]கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

பரதன் என்றொரு மன்னன் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்வது, ஆதாரமற்ற வெறும் கட்டுக்கதை[புராணப் புளுகாக இருக்கலாம்]. அப்படியொரு மன்னன் மட்டுமல்ல, பாரதம் என்னும் பெயரில் அப்போது ஒரு நாடும் இருந்ததில்லை.

ஜெய் Hindiya! ஜெய் ஜெய் Hindua!!

* * * * *

முக்கியக் குறிப்பு: தமிழ் மொழியில், ஒரு பெயர்ச் சொல்லின் ஈற்றில்[இறுதியில்] மெய்யெழுத்து[க்,ச்,ட் போன்றவை] இடம்பெறுதல் கூடாது என்பது இலக்கண விதி என்பதால், ‘மோகன் பாகவத், 'அர்'விகுதி சேர்க்கப்பட்டு ‘மோகன் பாகவதர்’ ஆனார் என்பது அறியத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/1116820-we-all-should-stop-using-the-word-india-and-start-using-bharat-says-rss-chief-mohan-bhagwat.html