சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள்” என்று மாநாட்டை நடத்தியவர்களைப் பாராட்டியிருக்கிறார்.
அவர் தன்னுடைய புகாரில், //உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களைத் தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது.
இந்து மதத்தைக் கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார்// என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘சனாதனம்’ என்பதற்கு, அதனைப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில், இந்து அமைப்புகளால் ஏராள விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
சனாதனத்தை வெறுப்பவர்கள், "இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக புரையோடிக் கிடக்கும் சாதியமைப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பது சனாதனம் என்னும் மனுஸ்மிருதி அல்லது வருணாசிரமக் கோட்பாடே ஆகும்” என்பது போல அதனால் விளையும் கெடுதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
இவற்றில் எவர் தரும் விளக்கம் ஏற்புடையது என்று ஆராய்வது நம் நோக்கமல்ல.
எதிர்ப்பதற்கும் ஒழிப்பதற்குமான வேறுபாட்டை ஆராய்வதும், உதயநிதியின் பேச்சு குறித்து ஒரு ‘முடிவு’ எடுப்பதும்தான்.
பேய், பிசாசு போன்றவை இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கை.
அதை எதிர்ப்பதாகச் சொல்வதில் பயன் ஏதுமில்லை. ஒழிக்க வேண்டும் என்பதே அறிவுடைமை ஆகும்.
அதை ஒழிக்க வேண்டும் என்பதால், [மூடநம்பிக்கையைப்]பரப்புரை செய்பவரும் ஒழிக்கப்படுதற்கு உரியவர் என்று பொருள் கொள்வது தவறாகும்[கொரோனாவை ஒழிப்போம் என்று சொல்வதோடு, கொரோனா நோய்க்குத் தன் உடம்பில் இடமளித்தவரையும் ஒழிப்போம் என்று சொல்வதற்கு ஒப்பானது இது].
மக்களிடையே ஏர்றத்தாழ்வுகளைக் கற்பிப்பதால் சனாதனம் என்பதும் ஒரு மூடநம்பிக்கை என்றும், அது ஒழிக்கப்படுதல் வேண்டும் என்றும் சொல்கிறார்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்.
அவர்களின் சிந்தனைப்படி அது ஏற்கத்தக்கதே.
சனாதனம் ஒழிக்கப்படுதல் வேண்டும் என்கிற அவர்கள், சனாதன தர்மத்தைப் போதிக்கிற இந்து மதத்தை[அது தர்மம் என்னும் பெயரில் வேறு எதையெல்லாமோ போதிக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று]யும் ஒழிக்கச் சொல்கிறார்கள் என்று பொருள்கொள்வது கண்டிக்கத்தக்கது.
இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்களையும் அவ்வாறு பேசி இழிவுபடுத்துகிறார்கள் என்று புகார் அளிப்பதும் தவறாகும்.
ஒரு சாரார், சனாதனத்தால் பெரும் தீங்கு விளைவதாக சொன்னால், “அது தவறு; அதனால் நாம் பெறும் நன்மைகள் உண்டு” என்று சனாதனம் போற்றுவோர்[குறிப்பாக, இந்து மதத்தவர்] வாதிடலாமே தவிர, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறநெறிக்கே[சனாதன தர்மம்] அவர்கள் எதிரானவர்கள் என்று காவல்துறையில் புகார் அளிப்பது போன்ற செயல் வரவேற்கத்தக்கது அல்ல.
* * * * *
https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o