வியாழன், 10 அக்டோபர், 2024

‘ரத்தன் டாட்டா’வின் ஆவிக்குப் ‘பாரத ரத்னா’ விருது!!!

/இந்தியாவின் அடையாளமாகவும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் தலைவராகவும் திகழ்ந்துவந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது/ -ஊடகச் செய்தி.

ரத்தன் டாட்டா உயிரோடு இருந்தபோதே விருது பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார் என்பது விருதுக்குப் பரிந்துரை செய்யும் அமைச்சரவையினருக்குத் தெரியாதா?

உயிரிழந்த பிறகு விருது எதற்கு?

அவரின் ஆவி அல்லது ஆன்மா அந்த விருதைப் பார்த்துப் பார்த்து பார்த்துப் பரவசப்படும் என்று நம்புகிறார்களா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதி புத்திசாலிகள்?

எது எதற்கெல்லாமோ கடும் பஞ்சம் நிலவுகிற இந்த நாட்டில் இவர்களைப் போன்ற அதி மேதாவிகளுக்கு மட்டும் பஞ்சம் என்பதே இல்லை!

* * * * *

https://tamil.goodreturns.in/news/maharashtra-cabinet-passes-resolution-asking-the-centre-to-confer-bharat-ratna-to-ratan-tata-052447.html


அஞ்சாமல் மரணத்தை எதிர்கொண்ட ரத்தன் டாட்டாவின் நெஞ்சுரம்!!!

86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா[Ratan Tata]தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகத் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோசமான உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. 

இது குறித்துத் தன் இன்ஸ்டாகிராம் & டிவிட்டர் தளங்களில், தான் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், மக்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு நாள் கழித்து நிகழவுள்ள தன் மரணம் குறித்து அவர் அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. அறிந்திருந்தும் எதிர்கொள்ளவுள்ள அதை அலட்சியப்படுத்தி, தன் மீது அன்புகொண்டோரை ஆற்றுப்படுத்துவதற்காக அறிக்கை வெளியிடுகிறார் என்றால், அவரின் நெஞ்சுரம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

உலகளவில், அவரின் அருங்குணங்களையும், செய்த அரிய சாதனைகளையும் பட்டியலிட்டுப் பிரபலங்கள் பாராட்டுகிற அதே வேளையில், ரத்தன் டாட்டா அவர்களின் மனோதிடத்தைப் பாராட்டி அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாம் ஆறுதல் பெறுகிறோம்.
              *   *   *   *   *