கீழே உள்ள காணொலியில் இடம்பெறும் துக்க நிகழ்வு மும்பையில்[மகாராஷ்ட்ரா] இடம்பெற்ற ஒன்று.
ரயில் பயணத்தின்போது, இந்தியில் பேசியதற்காக 19 வயது மாணவன் பிற பயணிகளால் தாக்கப்பட்டுள்ளான். இதைப் பெரிய அவமானமாகக் கருதிய அந்த மாணவன், வீடு திரும்பிய பிறகு, தன் தந்தையிடம் தான் பட்ட அவமானத்தைச் சொன்னதோடு தற்கொலை செய்துகொள்கிறான்[கூடுதல் செய்திகள் காணொலியில்].
இத்தனை இளம் வயதில் இவன் தற்கொலை புரிந்தது பெரும் துயரச் சம்பவம் என்றாலும், இதற்கு மூல காரணமானவன்கள் இந்தி வெறியன்களே என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
அங்கிங்கெனாதபடி, இந்தியா முழுதும் பெருமளவில் இந்தியைத் திணித்துவிட்ட இந்த வெறியன்கள்[இந்தி 42% மக்கள் பேசும் மொழி என்று சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் சேர்த்துப் பொய்க் கணக்குக் காட்டியுள்ளான்கள். இந்தி பேசுவோர் 26 கோடி மட்டுமே] முழுமையாகத் திணித்திட முனைப்புடன் செயல்படுகிறான்கள்.
மும்பை மராட்டிய மாநிலத்தின் தலைநகர். ‘தங்கள் தாய்மொழியே[மராட்டிய மொழி] மும்பை உட்பட மகாராஷ்ட்ரா முழுதும் ஆதிக்கம் செலுத்திட வேண்டும்’ என்று அவர்கள் ஆசைப்படுவதில் தவறே இல்லை; அது அவர்களுக்கான உரிமையும்கூட.
இந்த உரிமையைப் பெற்றிட அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்தான், ரயில் பயணத்தில் இந்தியில் பேசிய மாணவனைக் கண்டித்துத் தாக்கியிருக்கிறார்கள் பயணிகள்.
இது 100% தவறுதான் என்றாலும், இதற்குத் தூண்டுதலாக அமைந்தது, இந்தி வெறியன்கள் ஏற்கனவே மும்பை எங்கும் இந்தியைப் திணித்திருப்பதுதான்.
இன்றளவில் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் மராட்டியர்கள்.
தீரத்துடன் போராடி இந்தியை விரட்டியடிக்க அம்மக்கள் முனைப்புடன் செயல்படும் சூழ்நிலையில்தான், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.
அவசர நடவடிக்கையாக, ஒன்றிய அரசுச் சார்பான நிறுவனங்களில்[அஞ்சல் துறை, ரெயில்வே, ஆயுள் காப்பீடு போன்றவறில்] இந்தி அகற்றப்பட்டு, மாநில மொழிகளும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெறுதல் அவசியம்.
இந்தி வெறியன்கள் இனியேனும் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால், இவன்களால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குப் பெரும் கேடு விளையும் என்பது உறுதி.
