எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 22 மார்ச், 2025

அமைதிக்குச் சமாதி கட்டுபவர்கள் சங்கிகள் மட்டுமல்ல, ‘அப்துல்லா’க்களும்தான்!!!

ற்று உயரமான கட்டுமானத்தை உண்டாக்கி அதன்மேல், சதுரவடிவமான, அலங்காரத்தோடு கூடிய சிறிய தொட்டிகளைக் கட்டி, அதில் புனிதமானதாகக் கருதும் துளசிச் செடியை நட்டு வளர்த்து, நாள்தோறும் பூசை செய்வது இந்துக்களில் கணிசமானவர்களிடம் உள்ள பரம்பரை வழக்கம் ஆகும்.

துளசி தாவர இனங்களில் ஒன்று. அதற்குப் புனிதத்தன்மையை ஏற்றுவது[தூண்டுதல் ‘விஷ்ணு’க் கடவுள் தொடர்பான புராணக் கதை] தேவையற்றது எனினும், இந்தவொரு வழக்கத்தை இழிவுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை.

கேரளாவில் இஸ்லாமியன் ஒருவன் இதைச் செய்திருக்கிறான் என்பதுதான் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வு.

அவன் அப்படி என்ன செய்தான்? 

#துளசித்தாரா[துளசிமாடம்] இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது அந்தரங்க உறுப்புகளிலிருந்து முடிகளைப் பறித்து, 'துளசித்தாரா'வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அவர் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று அறியப்படுகிறது.....

இந்த நிகழ்ச்சியைக் காணொலியாக்கியவரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. குற்றவாளி சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கிறான்.....

தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில், அப்துல் ஹக்கீம் என்னும் அந்த ஆணவக்காரனைக் கைது செய்யும்படிக் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது உயர் நீதிமன்றம்#

இவனைப் போன்ற இன்னும் நான்கைந்து ஹக்கீம்கள் இருந்தால் போதும், மதக் கலவரம் தூண்டப்பட்டு, பற்றி எரியும் பிணங்களின் தேசமாகக் கேரளா மாறும் என்பது உறுதி.

இஸ்லாம் மக்கள் இவன் தங்களின் மதத்தவன் அல்ல என்று அறிவித்து விலக்கி வைப்பது நல்லது. அரசு உடனடியாக இவனைக் கைது செய்து கடும் தண்டனைக்கு உள்ளாக்குவது கேரளாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

* * * * *

https://tamil.indianexpress.com/india/kerala-high-court-orders-action-against-man-accused-of-insulting-sacred-tulsi-plant-8875285