இவள் பெயர் ‘ஜுன்கோ ஃபுருடா’; ஜப்பானியப் பள்ளி மாணவி.
இவள் தன்னைக் காதலித்த வகுப்புத் தோழன் ‘ஹிரோஷி மியானோ’ என்பவனை நிராகரித்ததால், அவனும் அவன் நண்பர்களும்[3 மாணவர்கள்] இவளை அவர்களில் ஒருவன் வீட்டிற்குக் கடத்திச் சிறை வைத்தார்கள்[கடத்தப்பட்டது 100க்கும் மேற்பட்டோருக்குத் தெரிந்திருந்தும் எவரும் உதவவில்லை].
நான்கு பேரும் ஜுன்கோவை இடைவிடாமல் சித்திரவதை செய்தனர்,
வதைகள்:
*நிர்வாணப்படுத்தப்பட்டாள்.
*சுய இன்பம் அனுபவிக்கச் செய்தார்கள்.
*அவள் மீது சிறுநீர் கழித்தார்கள்.
*அவளை அவளுடைய சிறுநீரையே குடிக்க வைத்தார்கள்.
*தரைவிரிப்பு[கம்பளம்] சிறுநீரில் நனைந்ததால் அவளை அடித்து உதைத்தார்கள்.
*அவளின் முகம் வீங்கியது.
*40 நாட்கள் 400 முறைகளுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
*100க்கும் மேற்பட்ட பிற ஆடவர்களும் அவளை வன்புணர்வு செய்தார்கள்.
*அவளின் யோனி இரும்புக் கம்பிகள், கத்தரிக்கோல், ஊசிகள், சூலங்கள் போன்றவற்றால் சிதைக்கப்பட்டது.
*யோனிக்குள்ளும் ஆசனவாய்க்குள்ளும் பல்புகள், பட்டாசுகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை திணிக்கப்பட்டன.
*மார்பகங்கள் தையல் ஊசிகளால் துளைக்கப்பட்டன.
*மார்புக் காம்புகள் குத்திக் கிழிக்கப்பட்டன.
*நிர்வாணமாகக் கட்டாந்தரையில் கிடத்தப்பட்டுக் குளிரில் நடுங்கி உருக்குலைந்தாள் இவள்.
*மேலும் பலவகையாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கடத்தப்பட்ட 40ஆவது நாளில்[ஜனவரி 4, 1989] தீயிட்டு எரிக்கப்பட்டாள்.
இவ்வாறாக, ‘ஜுன்கோ ஃபுருடா’ சாம்பலான பிறகே, கொடூர மிருகங்களான 4 மாணவர்களையும் கைது செய்தது ஜப்பான் நாட்டுக் காவல்துறை.
குற்றவாளிகளில் ஹிரோஷிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற முக்கியக் குற்றவாளிகளுக்குத் தலா 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை தரப்பட்டது.
தூக்கில் தொங்கவேண்டிய கயவர்கள் 17-18 வயதுடையவர்கள் என்பதால் தப்பிப் பிழைத்தார்கள்.
* * * * *
“Who had the worst death in history?” என்று ‘Quora’வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மேற்கண்ட கொடூர நிகழ்வைப் பதிலாக வழங்கிய ‘Daniel Claydon’[ https://www.quora.com/Who-had-the-worst-death-in-history] அவர்களுக்கு நம் நன்றி.

