அழுக்கேறிய கந்தல் ஆடையும் பரட்டைத் தலையுமாய் மக்களைத் தேடிப்போய் வயிற்றுப்பாட்டுக்காகக் கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள்!
எடுத்துக்காட்டாகச் சிலர்:
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்துக்குரு ஜக்கி வாசுதேவ்!!!
அழுக்கேறிய கந்தல் ஆடையும் பரட்டைத் தலையுமாய் மக்களைத் தேடிப்போய் வயிற்றுப்பாட்டுக்காகக் கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள்!
எடுத்துக்காட்டாகச் சிலர்:
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்துக்குரு ஜக்கி வாசுதேவ்!!!
‘முகவாதம்’ பரம்பரை நோயா?’ என்னும் கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் கீழே[நகல் பதிவு].
காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கான ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரம் கீழே உள்ள நகல் பதிவில்.
ஜோதிடம், சொர்க்கம்-நரகம் மீதான நம்பிக்கை, மறுபிறப்பு, ‘பிறப்பு-இறப்பு’ நிகழ்வுகளின்போது செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகள், கோயில்களில் உள்ள சிலைகளுக்குச் செய்யப்படும் அலங்காரங்கள், எடுக்கப்படும் விழாக்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு மூல காரணமாக இருப்பது ‘கடவுள் நம்பிக்கை’தான்.
மூடநம்பிக்கைகளுடன் கடவுள் நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குறைக்க முயல்வது தமிழ்நாடு(நடுவணரசும்தான்) அரசின் கடமையாகும்.
அந்தக் கடமையை முறையாகச் செய்யத் தவறிய அரசு, முனைப்புடன் மேற்கண்ட மூடநம்பிக்கைகளைப் பேணி வளர்ப்பதில் நாட்டம் கொண்டுள்ளது என்பதற்கு, அது திட்டமிட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவும்[நகல் பதிவு காண்க] ஓர் எடுத்துக்காட்டாகும்.
உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதோடு[இயற்கை அழகு செறிந்த இடங்களுக்குச் சுற்றுலாச் செல்வது வரவேற்கத்தக்கது] நாட்டிலுள்ள அனாதை இல்லங்கள், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகங்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், தீராத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குக் மக்களைக் குறைந்த கட்டணத்தில், அல்லது இலவசமாக அழைத்துச் சென்று காண்பித்தால், அவர்களின் மனம் பக்குவப்படும்; மனிதாபிமானம் வளரும்.
அரசு இதை செய்யத் தவறுமேயானால்.....
“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் தவிர்ப்பீர்[ஓம்புமின்]” என்னும் சான்றோர் வாக்கை[புறநானூறு] நினைவுபடுத்த நேரிடும்.
#உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும், கடவுள் தண்டிக்கும்போது புடினால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/international/god-is-watching-russia-says-ukrainian-president-zelensky/articlecontent-pf661011-450614.html#
#இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. https://www.vikatan.com/government-and-politics/pm-discusses-bangladesh-ukraine-crisis-with-us-president[copy&paste]#
மேற்கண்ட செய்திகள் மூலம் நாம் அறியத்தக்கது.....
இது குறித்தச் செய்தி வெகு விரைவில் ஊடகங்களில் வெளியாகும் என்று நம்பலாம்!
மோடிக் கடவுளின் வாக்குமூலம்-ஆதாரம்:
#பூமியில் பணிகளை நிறைவேற்ற, கடவுளால் அனுப்பப்பட்டவன்[கடவுளின் குழந்தை] நான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பு:
தன்னைக் கடவுளின் குரு[சத்குரு] என்று சொல்லித் திரிகிற ஜக்கி வாசுதேவ் இவரின் ‘தோஸ்து!
அந்தக் குரங்கு மனிதனைக் கடவுளாக்கி நாடெங்கும் சிலைகள் நிறுவி, தாங்கள் நிரந்தர முட்டாள்கள் என்பதை உலகறியச் செய்தவர்கள் இங்குள்ள சங்கிகள் என்னும் களிமண் மண்டையர்கள்.
பெரும்பாலோர் கிறித்தவர்களாயினும் அறிவுஜீவிகளும் வாழ்கிற அமெரிக்காவுக்குப் பிழைக்கப்போன இவர்கள், தாங்கள் இப்போதும் எப்போதும் காட்டுமிராண்டிப் பரம்பரைதான் என்பதை, அங்கே அனுமான் குரங்குக்கு 90 அடி உயரச் சிலை நிறுவியதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
இது போதாது, உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் ஆஞ்சநேயக் குரங்குக்குச் சிலைகள் எழுப்பித் தாங்கள் பிறவி மூடர்கள் என்பதை இவர்கள் உலகறியச் செய்யலாம்.
இவர்களுக்குக் கடவுள் அவதாரமான மோடி தன் அமோக ஆதரவை நல்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஆதாரம்:
#அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது#
கள்ள உடலுறவுக்கு இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு சான்றாகும்.
கொடி என்பது ஓர் அமைப்பு[கட்சி]க்கான அடையாளச் சின்னம்.
விரும்பினால், அதைக் கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தலாம். உதாரணம் ஒரு நாட்டின் கொடி[தேசியக்கொடி]. அதன் மதிப்பு அவ்வளவுதான்.
தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு புதிய கட்சி. அதற்கான கொடியை அதன் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினாராம்.
அந்தக் கொடியை மதுரை மீனாட்சியம்மன் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்யச் சென்றாராம் ஒரு நடிகர்[சௌந்தர்ராஜன்]. செய்திருப்பார் என்று நம்பலாம்.
இதைச் செய்தியாக வெளியிட்டுப் பொதுத் தொண்டு செய்திருக்கிறது https://tamil.samayam.com.
இருப்பில் உள்ள ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளில் இது[கொடிக்குப் பூஜை செய்வது] புதுசு என்பது அறியத்தக்கது[அம்மனுக்குரிய பூஜைப் பொருட்கள், நகைகள், ஆடைகள், பணக் கட்டுகள் என்று எதையெதையோ வைத்துப் பூஜை செய்கிறார்கள்].
நடிகருக்கு[சௌந்தர்ராஜன்] இது நல்ல நம்பிக்கையாக இருக்கலாம். இருக்கட்டும்.
இன்று கொடிக்குப் பூஜை செய்தவர் அடுத்து ஒரு நாளில் கொடிக் கம்பத்தையும், அப்புறம் ஒரு நாளில் கொடிக் கயிற்றையும் அம்மன் காலடிகளில் வைத்து பூஜை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இவற்றின் தொடர்ச்சியாக, கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நடிகரையும்[விஜய்] அம்மன் பாதங்களில் கிடத்திப் பூஜை செய்வாரோ?
செய்தால்.....
கட்சிக் கொடி, கயிறு, கம்பம் ஆகிவற்றுடன் கட்சித் தலைவருக்கும் அம்மன் திருவடிப் பூஜை செய்து சாதனை நிகழ்த்தினார் ஓர் அல்லக்கை நடிகர் என்று உலகோர் வியப்பார்கள்; புத்தம் புதிதாக ஒரு மூடநம்பிக்கையை உருவாக்கியதற்காகப் பாராட்டவும் செய்வார்கள்!
நடிகருக்கு நம் பாராட்டுகள்!
* * * * *
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் சொத்து, கடன்கள், கல்வித் தகுதிகள், குற்றப் பின்னணி ஆகியவை குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய ஓர் உறுதிமொழி ஆவணத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தல் நடைமுறை. அவர் சமர்ப்பிக்கும் அந்த ஆவணம்தான் ‘பிரமாணப் பத்திரம்’ ஆகும்.
முட்டைப் பண்ணைத் தொழில், சுமையுந்துக்[லாரி] கட்டுமானம் போன்றவற்றால் ‘நாமக்கல்’ பிரபலம் அடைந்திருந்தாலும், இதற்குப் பெருமளவில் பெருமை சேர்ப்பது உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயக் கடவுள் இங்கே எழுந்தருளியிருப்பதுதான்.
“நமது பங்களிப்பில் நாம் தீவிரமாக இருக்க வேண்டிய நேரம் இது. 2047இல், இந்தியா ஒரு வளர்ந்த நாடாகச் சுதந்திர தினத்தின் 100ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும்....."[https://www.jagranjosh.com/general-knowledge/key-highlights-from-pm-modi-independence-day-speech-1692067102-1] என்று 2023ஆம் ஆண்டுச் சுதந்திர தின விழாவில் நம் பிரதமர் பேசினார்[அவ்வப்போது இதை வலியுறுத்துவது அவர் வழக்கம்].
இதற்கான காரணம், இன்றளவில் வளர்ந்த பத்து நாடுகளின் பட்டியலில்கூட நம் நாடு இடம்பெறவில்லை[https://www.javatpoint.com/top-10-developed-countries-in-the-world] என்பதுதான்.
பிரதமரின் விருப்பம் ஈடேற இன்னும் 23 ஆண்டுகள்[2047 - 2024] உள்ளன.
23 ஆண்டுகளில் நம் நாடு வளர்ந்து, நாம் செல்வந்தர்களாகி, வசதியான வாழ்வைப் பெறுகிறோமோ அல்லவோ, பசியும் பட்டினியும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைப் பெற்றிருந்தாலும் வன்புணர்வு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் குறைந்து அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தாலே போதும் என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறான எண்ணம் நம் மனதில் உதிக்கக் காரணமான ஒரு புள்ளிவிவரம்.....
உலக மக்கள்தொகை மதிப்பாய்வுத் தரவுகளுக்கேற்பவும், உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வறிக்கையின்படியும் 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக தினமும் 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.[https://www.tbsnews.net/world/countries-highest-rape-incidents-144499?amp]
2024வரை இந்த வன்புணர்வுக் குற்றங்கள் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
ஒன்றிய அரசு இது விசயத்தில் மிக மிக மிகக் கடுமையான தடுப்பு நடவடிக்ககளை மேற்கொள்ளாவிட்டால்.....
2047இல் வன்புணர்வு அட்டூழியங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தப் புண்ணியத் தேசம் முதல் இடத்தைப் பெற்றிடவும் வாய்ப்புள்ளது.
எனவே, இனியேனும், நம் பிரதமர் ‘வளர்ச்சி’ பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக்கொண்டிராமல், வன்புணர்வு முதலான குற்றங்களின் ‘வீழ்ச்சி’ குறித்து மிகுதியும் பேசுவது நாட்டுக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும்.
குறிப்பு:
மோடி குறித்து விமர்சனங்களை முன்வைப்பதில் அதிகம் ஈடுபாடில்லை; தவிர்ப்பதும் அத்தனை எளிதாக இல்லை!
#தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் மோடி[https://news7tamil.live/only-rs-1000-allocation-for-tamilnadu-rail-projects-dr-balu-shocking-information.html].
கலியுக அவதாரப் புருஷனும் உலக மகா ‘யோகி’யும் இந்தப் புண்ணியப் பூமியின் பிதாமகனும் பிரதமரும் ஆன நரேந்திர மோடிக்குத் ‘திமுக’ கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழர் நலம் நாடும் பிற அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்; போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.
மோடி வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது, தமிழர்கள் 2024 தேர்தலில் அவரைப்[பாஜக] படுதோல்வி அடையச் செய்ததற்குப் பழிவாங்கும் செயல் என்று காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும், மோடிக்கு ரொம்பப் பெரிய மனது. அவர் நினைத்திருந்தால்.....
ரூ1000 வழங்காமல் ஒரே ஒரு ஒற்றை ரூபாய்த் தாளை விட்டெறிந்திருக்கலாம். அவரோ, துரோகம் புரிந்த தமிழர்களை மன்னித்து, ஆயிரம் ரூபாயைத் தானமாக வழங்கிக் கௌரவித்திருக்கிறார்; ‘சிங்கிள்’ பைசாவைக்கூட தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கலாம். அந்த இழிசெயலை அவர் செய்யவில்லை.
மோடிக்கு எதிரானதொரு போராட்டத்தை அறிவித்திருக்கும் தமிழ்நாடு கட்சியினருக்கு நாம் வழங்க விரும்பும் ‘புத்திமதி’ ஒன்றுள்ளது.
அது.....
“உங்களின் போராட்டம் வெறும் அறிவிப்போடு முடியட்டும். ‘பின்வாங்கமாட்டோம்; மோடியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியே தீருவோம்’ என்று நீங்கள் முடிவெடுத்தால்.....
படைப் பலம், பணப் பலம், அதிகாரப் பலம் என்று ஒரு பிரதமருக்கு உரிய அத்தனைத் தேவைகளையும் பெற்றுள்ள மோடியின் ஒரு சுட்டு விரலைக்கூட உங்களால் அசைக்க இயலாது!
கொஞ்சமே கொஞ்சம் அசிங்கமாகச் சொன்னால், அவரிடமிருந்து உங்களால் எந்தவொன்றையும் 'பிடுங்க' முடியாது!!"
இந்தியா பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நாடு.
கொல்கத்தா மருத்துவமனையில் 2ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரச் செய்தி யாவரும் அறிந்ததே.
இது குறித்த உடற்கூறு ஆய்வறிக்கையில்[போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்], "பெண் டாக்டரின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது. முகத்திலும் ஒரு நகத்திலும் காயங்கள் இருந்தன. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் காணப்பட்டன. கழுத்து எலும்பு உடைந்துள்ளது. அந்தரங்கப் பாகங்களில் ரத்தம் கொட்டியிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
கருத்தரங்க[செமினார்] அறையில் கிடந்த ப்ளூடூத் ஹெட்போன், சிசிடிவி கேமரா போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவனைக் காவல்துறையினர்[சிபிஐ] கைது செய்துள்ளனர்.
வன்கொடுமையின்போது, சஞ்சய் ராயின் பிடியிலிருந்து தப்பிக்க, பெண் டாக்டர் நிறையவே போராடியிருக்கிறார். ஆனால், சஞ்சய் ராய் பெண் டாக்டரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான். இவ்வளவு கொடூரத்தைச் செய்துள்ள அந்தக் கயவன், தற்போது தன்னுடைய குற்றத்தைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டதோடு, "நீங்கள் ஆசைப்பட்டால் என்னைத் தூக்கில்கூடப் போடுங்கள்" என்றானாம்[விரிவான செய்திக்கு*… https://tamil.oneindia.com].
இவனுடைய அலைபேசியில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த காணொலிகளே[வீடியோக்கள்] அதிகம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றை ஆராய்ந்ததில் இவன் உடலுறவு வெறியனாகவும், கொடூரக் கொலைகாரனாகவும் ஆவதற்கு இவன் பார்த்துப் பார்த்து ரசித்த அந்த ஆபாசக் காணொலிகளே காரணம் என்பது அறியப்பட்டுள்ளது[இவனைப் போன்ற, ஆனால், துணிச்சல் இல்லாத நீலப்படப் பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].
ஆபாசப் படங்கள் அதிகரிக்கிற அதே வேளையில் அதில் பங்குகொள்கிற நடிகர்&நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்புதான்.
ஓரிரு நாட்களுக்கு முன்பு மாத இதழொன்றின்[உயிர்மை] கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பிடத்தக்க செய்திகளின் நகல் பதிவு கீழே.
#கடவுளைக் கும்பிடவேண்டும். அவருக்குப் பூஜை செய்யவேண்டும்; கோவில் கட்டவேண்டும்,
கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது போதாதென்று வீட்டில் ஒரு பூஜை அறை வைக்கவேண்டும். அதில் தினமும் இருவேளை சாமி கும்பிடவேண்டும்.
ஆனால், இப்படிக் கும்பிடுகிறவர்களை நிலநடுக்கம், பேய் மழை, நிலச்சரிவு போன்றவற்றை உண்டுபண்ணிப் பூண்டோடு கடவுள் அழிப்பார்; விபத்தில் சிக்க வைத்துச் சின்னாபின்னப்படுத்திச் சாகடிப்பார்; கொரோனாவில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கிப் பரலோகம் போகவைப்பார்; டெங்குவில் வதைபட்டு, ‘டிங் டிங் டிங்’குன்னு சாவு மணி அடித்து யமலோகம் அனுப்புவார். மனிதர்களை இத்தனைக் கொடூரங்களுக்கு உள்ளாக்கும் கொலைகாரக் கடவுளை எதற்கு வணங்கவேண்டும்?
மேற்கண்ட அவலங்களைத் தடுக்க முடியாது என்றால் கடவுள் எதற்கு?
அவர் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?
தட்டையான வேல் எதற்கு? ஆம்லெட்டைத் திருப்பிப் போடவா?#
* * * * *
*** மேற்கண்டது ‘கடவுள் நம்பிக்கை தேவையா?” என்னும் கேள்விக்கு அழகிரிசாமி அவர்கள் அளித்த பதில். அவருக்கும் ‘Quora'வுக்கும் நம் நன்றி.
முக்கிய அறிவிப்பு:
இந்து மதத்தை மட்டும் சாடுவதாக எவரும் மனக்கொதிப்புக்கு உள்ளாக வேண்டாம். இஸ்லாம், கிறித்தவம் என்று பிற மத மூடத்தனங்களையும் நாம் விட்டுவைப்பதில்லை.