விஐபி(VIP) அல்லது தலைவர்களின்[ஜோசப் உட்பட] கார்களின் முன்னால் பாதுகாப்புப் படையினர் ஓடுவது என்பது, முற்றிலும் தவறானதும் ஏற்றுக்கொள்ள இயலாததுமான ஒரு செயல்முறை ஆகும்.
விஐபி கார்கள் மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, அவர்களுடன் ஓடும் காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது[வாகனத்தில் ஏற்படும் சிறு தொழில்நுட்பக் கோளாறுகூட பெரிய விபத்தை ஏற்படுத்தலாம்]. இது அவர்களை அவமானப்படுத்துகிற செயலும் ஆகும்.
இது மனிதர்களின் உடல் திறனைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், கண்ணியமற்ற நடைமுறை எனவும் மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறது.
நவீன காலத்தில் தலைவர்களின் பாதுகாப்பிற்கு அதிநவீன குண்டு துளைக்காத கார்கள்(Bulletproof cars), ஜாமர்கள்(Jammers), கவச வாகனங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில் மனிதர்கள் ஓடிப் பாதுகாப்பளிப்பது தேவையற்றது.
மிகவும் குறுகியதும் மக்கள் நெருக்கம் மிகுந்ததுமான தெருக்களில் தலைவர்கள் செல்லும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவசரக் காலங்களில் வாகனத்தை வழிநடத்தவும் குறைந்த வேகத்தில் பாதுகாப்புப் படையினர் ஓடுவது அனுமதிக்கப்படலாம்.
அடிக்கடி நிகழும் இந்த அவல நிகழ்வுகளை, தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாதது மக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.