"ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்நிலையை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஏழைத் தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், அவரது தலைமையின் கீழ் நாட்டைத் தொடர்ந்து முன்னேற்றிச் செல்வதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று அவர்[மோடி] X இல் ஒரு பதிவில் எழுதினார்*["Under Rahul Gandhi's leadership, Congress politics has reached its lowest level. They cannot tolerate how a poor mother's son has been sitting in the Prime Minister's chair for the past 11 years and is continuously taking the country forward under his leadership," he wrote in a post on X.].
தன்னை “ஓர் ஏழைத் தாயின் மகன்” என்கிறார் பிரதமர் மோடி.
இதுவரை இந்த இந்தியாவின் பிரதமராக இருந்தவர்கள் எல்லோருமே கோடீஸ்வரப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான்.
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பரம்பரை பரம்பரையாக வறுமையில் வாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பார்கள்[அவரின் மறைவுக்குப் பிறகும் அவர் குடும்பத்தினர் மீண்டெழவில்லையாம்].
அதில் முழு உண்மை இல்லை. மோடியின்[ஏழைத் தாயின் மகன்] பரம்பரையோடு ஒப்பிடும்போது சாஸ்திரி அவர்கள் மேல்தட்டு[upper class] ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர் எனலாம்.
இந்த நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கான ஒரு புள்ளிவிவரம் சேகரித்தால், மோடியின் பரம்பரை அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்திருப்பதை அறியலாம்.
ஆக, படு படு படு பரம ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய நாட்டின் பிரதமராக இருப்பது அரிதினும் அரிதான அபூர்வ வரலாற்று நிகழ்வாகும்.
இந்த நம் மோடி அவர்கள் அவரின் ஆயுட்காலம்வரை இந்தப் புண்ணியப் பூமி[இவரைப் போன்றவர்கள் அவதரித்ததால்தான் இந்த மண்ணில் அளப்பரிய புண்ணியம் குவிந்தது]யின் பிரதமராக நீடிப்பது இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களின் விருப்பம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் புடின் முதலான உலகத் தலைவர்களின் விருப்பமும் இதுவே.
எனவே, ராகுல் காந்தியை[மோடி குறித்துப் பேசுவது தவிர்க்கவே இயலாததாயின்] அடக்கி வாசிக்குமாறு எச்சரிக்கிறோம்.
வாழ்க ஓர் ஏழைத் தாயின் புதல்வர் மோடி!
இனியும் அவரே பிரதமராக நீடிக்க, கோடி கோடி கோடி ரூபாய்ச் செலவில் அவரால் கட்டப்பட்ட பிரமாண்டக் கோயிலில் குடியிருக்கும் பால ராமரைப் பிரார்த்திக்கிறோம்!
* * * * *


